National Cashew Day: இன்று தேசிய முந்திரி தினம்! ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
தேசிய முந்திரி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
தேசிய முந்திரி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 23ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சிறப்பு நாளாகக் கொண்டாடும் வழக்கம் முதலில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டு, பின்நாளில் உலகம் முழுவதும் பரவியது.
முந்திரிவின் வடிவமானது சிறுநீரக (கிட்னி) வடிவம் கொண்டது. இந்த உலர் பழங்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தற்போது அதிகம் விரும்பும் உணவு பொருட்களில் ஒன்று. முந்திரி வெறும் வாயில் சாப்பிடுவது முதல் சமைப்பது வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தேசிய முந்திரி தினத்தை கொண்டாடுவதன் நோக்கம் என்னவென்றால், முந்திரி பண்ணைகளில் தொழிலாளர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை முன்னுரிமை அளிப்பதற்கும், விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதல் முறையாக 2015 நவம்பர் 23 அன்று கொண்டாடப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
முந்திரி வரலாறு:
'முந்திரி' என்ற பெயர் போர்த்துகீசிய துபியன் வார்த்தையான 'அகாஜு' என்பதிலிருந்து வந்தது. அதாவது வால்நட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உலர் பழங்கள். முந்திரி மற்ற உலர்ந்த பழங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக வளரும். அதாவது இது ஒரு ஆப்பிள் போல பழத்தின் அடிப்பகுதியில் வளரும். முந்திரி பருப்பின் வயிறு மிகப் பெரியதாகவும் இருக்கும். முந்திரி பருப்பு பச்சையாக இருக்கும் போது, அவற்றின் வெளிப்புற தோலிலுள்ள அனாகார்டிக் அமிலம் தோல் எரிச்சலை குணப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் 1558-ல் ஐரோப்பியர்கள் முந்திரியைக் கண்டுபிடித்தபோது, அது உண்பதற்கு ஏற்றதல்ல என்று நினைத்தார்கள்.
உள்ளூர் போர்த்துகீசிய பழங்குடியினரான டுபி இந்தியர்கள் முந்திரி பருப்பைக் கண்டுபிடித்தாக வரலாறு கூறுகிறது. போர்த்துகீசியர்கள் அதிகளவில் முந்திரி பருப்புகளை விரும்பியதால் இந்தியாவுக்கு வந்தபோது கொண்டு வந்தனர். அதன் பிறகு இந்தியாவில் முந்திரி பயிரிடப்பட்டது. முந்திரி தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு வேகமாக பரவி அவர்களின் உணவு மற்றும் வர்த்தகத்தின் இன்றியமையாத பகுதியாக மாறியது.
முந்திரி 1905 வரை அமெரிக்கா நாட்டிற்குள் அடியெடுத்து வைக்கவில்லை. 1920 களின் மத்தியில் ஜெனரல் ஃபுட்ஸ் கார்ப்பரேஷன் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் முந்திரியை தொடர்ந்து அனுப்பத் தொடங்கியபோது பிரபலமடைந்தது. அமெரிக்கர்கள் அதை சுவைத்தவுடன், முந்திரியின் தேவை அதிகரிக்க தொடங்கியது. 1941 வரை, இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 22,046.23 டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
உலர் பழங்களில் விலையிலும், மதிப்பிலும் உயர்ந்ததாக பார்க்கப்படுவது முந்திரி பருப்புகள். முந்திரியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இது அதிகளவில் ஸ்வீட்ஸுகளில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், பிரியாணி, கேசரி, புலாவ்வுடன் முந்திரி சேர்த்தால் சுவை அற்புதமாக இருக்கும். முந்திரி சுவையாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் (முந்திரியின் நன்மைகள்). குறிப்பாக முந்திரி பருப்புகளை பயன்படுத்துவது நமது இதயத்தின் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகிறது. முந்திரி பருப்புகளை உட்கொள்வது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. முந்திரியில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இவை ஆரோக்கியமான உணவுக் கொழுப்புகளின் நல்ல மூலமாகும். இந்த கொழுப்பு LDL கொழுப்பை (கெட்ட கொலஸ்ட்ரால்) குறைக்க உதவுகிறது, இதன் அதிகரிப்பு இதயம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்.
முந்திரியில் மெக்னீசியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், பொட்டாசியம், செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. முந்திரியில் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் குறைவு.
இதயத்திற்கு நல்லதா..?
முந்திரிபருப்பில் உள்ள ஒலிக் அமிலம் இதய நோய் அபாயத்தை பெருமளவு குறைக்க உதவுகிறது. முந்திரி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது, அதாவது நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், ட்ரைகிளிசரைடு அளவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முந்திரி பருப்பில் அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் உள்ளதால் பிபியை கட்டுப்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
முந்திரி பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி உள்ளவர்கள் முந்திரி பருப்பை சாப்பிடக்கூடாது. முந்திரியை அதிகளவில் எடுத்துகொள்வதும் ஆபத்து. அதை தேவைகேற்ப லிமிட்டாக பயன்படுத்த வேண்டும். அதிகமாக சாப்பிடுவது மாரடைப்பு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வாயு பிரச்சனைகளை உண்டாக்கும்.