Dhoni Mutton Gravy : சூப்பரான சாலை கடை.. தோனிக்கு பிடிச்ச மட்டன் கிரேவி இதுதான்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க..
தல தோனிக்கு பிடிச்ச உணவுன்னா நம்மில் பலருக்கும் பிடித்து உணவுதானே. ஆமாம் என்கிறீர்களா அப்படியென்றால் இத படிங்க.
கிரிக்கெட் உலகின் மாஸ், தல தோனிக்கு பிடிச்ச உணவுன்னா நம்மில் பலருக்கும் பிடித்து உணவுதானே. ஆமாம் என்கிறீர்களா அப்படியென்றால் இதப் படிங்க.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் ரிங் ரோட் பகுதியை ஒட்டிய தலாதிலி சப்ஜி மார்க்கெட்டில் அமைந்துள்ளது ஹோட்டல் சர்னா. உள்ளே நுழைந்ததும் தல தோனியின் ஃபோட்டோ இருக்கிறது. அவருக்கு இந்த ஹோட்டல் மட்டன் கிரேவினா அவ்ளோ இஷ்டமாம். ஓ சரி அது த்ரீ ஸ்டார் ஹோட்டலா, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா என்று கேட்காதீர்கள். ஏனெனில் அது ஒரு சாதாரண கடை. ஆனால் டேஸ்ட் அள்ளும் எனக் கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.
காலை 10 மணிக்கு கடை திறக்கும் மதியம் 3 மணிக்கெல்லாம் மூடிவிடுவார்கள். அதற்குள் இடம்பிடித்து சாப்பிடுவது நம் திறமைதானாம். சின்ன கடை சுகாதாரமான சுற்றுச்சூழல் தரமான தயாரிப்பு சுவையான ரெஸிபிக்கள் வீட்டுத் தயாரிப்பு மசாலாக்கள். இதுதான் தாரக மந்திரம் எனக் கூறுகின்றனர் கடையின் உரிமையாளர்கள்.
அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், தல தோனி எனப் பலரையும் வாடிக்கையாளர்களாக வைத்திருக்கவும் இதுதான் காரணம் எனக் கூறுகின்றனர் ஹோட்டல் உரிமையாளர்கள்.
கடையின் உரிமையாளர் பீட்டர் கூறுகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தான் இந்த ஹோட்டலை நடத்துகிறேன். ஆரம்ப காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு கிலோ மட்டன் விற்றாலே பெரும் சவால்தான். ஆனால் இன்று அன்றாடம் 70 முதல் 80 கிலோ மட்டனில் பதார்த்தங்கள் செய்கிறோம். அத்தனையும் காலியாகிவிடுகிறது. சில நாட்களில் வாடிக்கையாளர்கள் வாஞ்சையோடு வரும்போது இல்லையென்று சொல்லியனுப்ப கஷ்டமாக இருக்கிறது. அண்டையில் உள்ள கொல்கத்தா, டாடா நகரங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
நாங்கள் எங்கள் உணவகத்தை சுத்தமாக வைத்துள்ளோம். தரமான பொருட்களைக் கொண்டு சமைக்கிறோம். எந்தவித ரெடிமேட் மசாலாக்களும் பயன்படுத்துவதில்லை. எல்லா மசாலாக்களும் எங்கள் குடும்ப பாரம்பரிய மசாலாக்கள்தான். ஒரு பிளேட் மட்டன் கிரேவி ரூ.130க்கு தருகிறோம். கூடவே அன்லிமிடட் ரைஸ் மற்றும் பீஸ் இல்லாத கிரேவி. தரத்திற்கும், சுவைக்கும் மக்கள் அளித்துள்ள பரிசு தான் இந்தக் கூட்டம் என்றார்.
இந்த ஹோட்டல் தோனியின் பண்ணை வீட்டினருகே தான் இருக்கிறது. அதனால் தோனி எப்போது அவரது பண்ணை வீட்டிற்கு வந்தாலும் இங்கேயிருந்து பார்சல் போகும் எனக் கூறுகிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.