Quinoa: பிரபலமடைந்து வரும் டயட் உணவு கீன்வா... எடைக்குறைப்பில் அதன் பங்கு என்ன.... தெரிஞ்சிக்கலாம் வாங்க!
மொத்தம் 120 வகையான கீன்வாக்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. எனினும் கடைகளில் கிடைக்கும் பொதுவான கீன்வா, வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது.
இன்றைய பெருகி வரும் ஹோட்டல் கலாசாரத்திரத்துக்கு நடுவே மக்கள் சமீபகாலமாக ஆரோக்கியமான உணவை தேர்வு செய்து உண்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
கீன்வா
இதில் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக தானியங்களே விளங்குகின்றன. இதில் சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் கீன்வா (Quinoa).
முழு தானியமான கீன்வா அதன் நன்மைகள் காரணமாக வேகமாக சமீபத்தில் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலான தானியங்களைப் போலவே இதன் விதைகளையும் சமைத்து உண்ணலாம். இதன் செடி பீட்ரூட், பசலைக் கீரைகளை ஒத்து இருக்கும் நிலையில், இதன் இலைகளையும் உண்ணலாம்.
120 வகை கீன்வாக்கள்
தற்போது மொத்தம் 120 வகையான கீன்வாக்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. எனினும் கடைகளில் கிடைக்கும் பொதுவான கீன்வா, வெள்ளை, கருப்பு, சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு நிறைந்த காலை உணவிற்கு கீன்வா மிகச் சிறந்த உணவாக இருக்கும்.
டயட் உணவு
2017 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, தினமும் 50 கிராம் கீன்வா சாப்பிடுவது ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கும் என்றும் பருமனானவர்களுக்கு வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
ஒரு கப் சமைத்த கீன்வாவில் 222 கலோரிகள், 8.14 கிராம் புரதம், 5.18 கிராம் நார்ச்சத்து, 3.55 கிராம் கொழுப்பு மற்றும் 39.4 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. உடல் எடை குறைப்புக்கு சிறந்த உணவாக விளங்கும் கீன்வாவின் பலன்களை தெரிந்து கொள்வோம்!
வைட்டமின்கள்
கீன்வாவில் எட்டு அத்தியாவசிய அமினோ அமிலங்கள், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் உள்ளன. நிறைய இரும்புச்சத்து, வைட்டமின் பி12 உள்ளது. இரும்பு மற்றும் வைட்டமின் பி 12 இரண்டும் ஆற்றல் உற்பத்தி மற்றும் எடை இழப்புக்கு தேவைப்படுகிறது.
குறைந்த கலோரிகள்
கீன்வாவில் குறைந்த கலோரி எண்ணிக்கை உள்ளது. இதனுடன் அதிகப்படியான உணவைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இதை சாலட் அல்லது காய்கறிகள் மற்றும் பீன்ஸ் உடன் சேர்த்து குறைந்த கலோரி உணவை தயாரிக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவு
கீன்வா சிறந்த நார்ச்சத்து நிறைந்த தானியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீங்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவைத் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் எடை இழப்பு உணவுத் திட்டத்துக்கு கீன்வா பொருத்தமான உணவாக இருக்கும்.
க்ளூட்டன்
கீன்வா பசையம் இல்லாதது. உங்கள் உணவின் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற மதிப்பை அதிகரிக்க இது ஒரு சிறந்த தேர்வாகும். பசையம் இல்லாத உணவை விரும்புபவர்கள் கீன்வாவை மாற்றாகப் பயன்படுத்தலாம்.
குறைந்த கிளைசெமிக் குறியீடு
கார்போஹைட்ரேட்டுகள் ரத்த குளுக்கோஸ் அளவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவிடுகிறது. கீன்வா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இது நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவு. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.