Chilli Paneer Pasta: கார சாரமா லியோ பார்ட்டி போடுறீங்களா? சுவையான சில்லி பனீர் பாஸ்தா ரெசிபி இதோ!
நூடுல்ஸ் வகை உணவுகளைச் செய்வதுபோன்றே பாஸ்தாவையும் தயாரிக்கலாம்.
இத்தாலிய உணவான பாஸ்தாவும் பலரும் விரும்பி அளவுக்கு ஆகிவிட்டது. பீட்சா எப்படியோ அப்படியே பாஸ்தாவின் ருசிக்கும் பலரும் அடிமையாகிவிடுவார்களோ என்ற அளவுக்கு ஆகிவிட்டது எனலாம். பெரும்பாலும் பாஸ்தா மைதா மாவில்தான் தயாரிக்கப்படுவதால் அது ரொம்பவே ஆரோக்கியமான உணவு என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில். மைதா என்பது நன்கு சுத்திகரிக்கப்பட்ட சத்துக்கள் நீக்கப்பட்ட உணவு; அதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் இல்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். கோதுமை, மக்காச்சோளம், சிவப்பு அரிசி ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் செய்யப்படும் உணவுகளையும் அடிக்கடி சாப்பிடாமல் அளவோடு சாப்பிடுவது நல்லது. இதோடு காய்கறி, இறைச்சி, முட்டை, காளான் என சேர்த்து சாப்பிடுவதும் கொஞ்சம் நல்லது. எப்போதாவது சாப்பிடுவது நல்லது. ருசியாக இருக்கிறது என அடிக்கடி சாப்பிடுவது உடல்நலனுக்கு நல்லது இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சில பாஸ்தா ரெசிபிகளை காணலாம்.
சில்லி பனீர் பாஸ்தா
தேவையான பொருட்கள்
பென்னே பாஸ்தா (Penne Pasta) - ஒரு கப்
பனீர் பாஸ்தா - ஒரு கப்
சிகப்பு, மஞ்சள், பச்சை குடைமிளகாய் - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்
‘
பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் - சிறிதளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீஸ் - சிறிதளவு
சோய் சாஸ் - ஒரு ஸ்பூன் பூ
சில்லி சாஸ் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய், உப்பு பென்னே பாஸ்தாவை போட்டு நன்றாக வெந்ததும் வடிக்கட்டி எடுத்துகொள்ளவும். (5 நிமிடங்களில் பாஸ்தா வெந்துவிடும்.) அடுப்பில் மிதமான தீயில் வாணலி வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பனீர் துண்டுகளை கொட்டி ரோஸ்ட் செய்து தனியே எடுக்கவும். அதே வாணலியில் இரண்டு டேபிஸ் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு, சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சோய், சில்லி சாஸ் சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கி நிறம் மாறியதும் ரோஸ்ட் செய்த பனீர், வேகவைத்த பாஸ்தா சேர்த்து நன்றாக கிளறி சீஸ், வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுட சுட சீஸ் பனீர் பாஸ்தா ரெடி.
கடாய் பனீர் ரெசிபி
ஒரு கடாயில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி, பின்பு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் குடமிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பனீரை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி பின்பு தாளிக்க பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுதை இதனுடன் சேர்க்க வேண்டும். ஏற்கனவே வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும். பின்பு இதனுடன் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் பனீர் பட்டர் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும்.பின்பு நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கடாய் பனீர் ரெடி.
பனீர் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. புரதம் தவிர, வைட்டமின்கள் ஏ, பி-1, பி-3, பி-6, செலினியம், வைட்டமின் ஈ, போன்ற பல சத்துக்களும் பனீரில் காணப்படுகின்றன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன, இதன் காரணமாக தோல் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
பனீர் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் வளமான ஆதாரமாக இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. பனீர் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையையும் குணப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க..
Palak Paneer Paratha: சுவையான பாலக் பனீர் பராத்தா செய்வது எப்படி? இதோ ரெசிபி!
Diwali Recipe: இப்பவே தயார் ஆகுங்க! தீபாவளிக்கு சுவையான அதிரசம் செய்வது இப்படித்தான்!