News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Rice: அரிசியை கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ளனுமா? ஈஸி டிப்ஸ் இதோ..!

Rice: அரிசியை கெட்டுப்போகாமல் பார்த்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

FOLLOW US: 
Share:

இந்திய உணவுப் பொருட்களில் மிகவும் முதன்மையான இடத்தினைப் பிடித்திருப்பது அரிசி. இந்திய அளவில் மேற்கு வங்கம், உத்திர பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் அதிக அளவில் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் உள்ள மக்களின் பழக்கங்களில் ஒன்று அரிசியை அதிகப்படியாக வாங்கி சேமித்துக்கொள்வது. அதாவது, இரண்டு மாதத்திற்கு அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு தேவையான அரிசியை வாங்கி சேமித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் தான் அது. அப்படி வாங்கி சேமித்து வைக்கும் அரிசியை நான் அன்றாடம் பயன்படுத்தி வருவதால், அவற்றின் இயற்கையான தன்மையில் இருந்து கெட்டுப்போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எனவே அரிசியை கெட்டுப்போகாமல் இருக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.  

1. குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் வைக்கவும்:

அரிசியை காற்று புகாத பை அல்லது தொட்டியில் போட்டி மூடி வைக்க வேண்டும். ஈரப்பதம் அல்லது சூரிய ஒளியைத் தவிர்க்க எப்போதும் குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்கவும். 

2. உறைய வைக்கவும்:

சமைக்காத அரிசியை மிகவும் தடிமனான காற்று புகாத பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம். முடிந்தவரை காற்றை வெளியேற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உறைந்த அரிசி எப்போதும் புதியதாக இருக்கும்.

3. தவறுகளில் இருந்து கவனமாக இருங்கள்:

சேமிக்கும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று,  சில அடிப்படை சமையலறை பொருட்கள் மூலம் எளிதாக அரிசியை கெடாமல் பார்த்துக் கொள்ள முடியும். அரிசியை மொத்தமாக வாங்கினால், பூச்சிகளைத் தடுக்க, சில வளைகுடா இலைகள் (பிரியாணி இலைகள்), வேப்ப இலைகள் போன்றவற்றை அரிசி இருக்கும் பையில் அல்லடு பாத்திரத்தில் போட்டு சேமித்து வைக்கவும். 

4. மற்ற பொருட்களிலிருந்தும் அரிசியை பாதுகாத்து வைக்கவும்:

நறுமணப் பொருட்களையும் அரிசியையும் ஒன்றாகச் சேர்த்து வைக்காதீர்கள், ஏனெனில் அரிசி மசாலாப் பொருட்களின் வாசனையை உறிஞ்சும் வாய்ப்பு அதிகம். இது சமைக்கும் போது அரிசியின் சுவையை கெடுக்கலாம். அதாவது, பட்டை, கிராம்பு போன்றவற்றை தவிர்ப்பது முக்கியம். 

5. சமைத்த அரிசியை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும்:

சமைத்த அரிசி மாசுபடுவதற்கு வாய்ப்புள்ளது அதாவது, சாப்பாடு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் கெட்டுப் போகும். ஆனால் இன்றைய குக்கர் சாப்படுகள் கெட்டுப்போவதற்கு  இயல்பான நேரத்தைவிடவும் கூடுதலான  நேரத்தினை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் வெயில் காலத்தில் மிகக்குறுகிய காலத்திலேயே கெட்டுப்போகும்.  எனவே, அதை கவனமாக சேமித்து வைப்பது மிகவும் முக்கியம். அரிசியை எப்போதும் குளிர்வித்து, மாசுபடாமல் இருக்க காற்றுப்புகாத பெட்டியில் சேமித்து வைக்கவும். சரியான வெப்பநிலையில் வைத்திருந்தால், சமைத்த அரிசியை  அதாவது சாப்பாட்டினை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு புதியதாக வைத்திருக்கலாம். USDA இன் படி, சமைத்த அரிசியை ஐந்து டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் குறைவாக வைக்க வேண்டும். மேலும் சாப்பிடுவதற்கு முன் அதை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தவேண்டும் என்பதையும் மறந்து விடக்கூடாது. 

Published at : 08 Aug 2023 04:13 PM (IST) Tags: Rice how to store rice keep fresh

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!

TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!