கமகமக்கும் கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?
பின்னர் ஃபிரஷான வாழை இலை உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கடையிலோ இருந்தால் அதனை வாங்கி வந்து , மசாலா தடவிய மீனை வைக்கவும்.
வாழை இலையில் கேரளா ஸ்டைலில் வேகவைத்த மீன் செய்வது எப்படி, நீங்கள் கடல் உணவுகளை விரும்புபவராக இருந்தால், இந்த ரெசிபி கண்டிப்பாக உங்களில் ஃபேவெட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.தன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பேசுகையில், இது ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது.ஏனெனில் வேக வைக்கும் பொழுது அதன் சத்துக்கள் வெளியேறாமல் தக்க வைக்கப்படுகிறது. சரி எப்படி செய்வது இந்த வேக வைத்தம் yummy மீன் ரெசிபி என பார்க்கலாம்.
மீன் வேக வைக்க தேவையான பொருட்கள்:
வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள்
பெரியவெங்காயம் – ஒன்று அல்லது சின்ன வெங்காயம் இரண்டு கைப்பிடி அளவு.
தக்காளி – ஒன்று
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி.
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
வாழை இலை - 2 துண்டுகள்.
வாழை இலையில் வேகவைத்த மீன் செய்முறை:
முதலில் வாங்கி வந்த மீனை சுத்தமாக கிளீன் செய்து எடுத்துக்கொள்ளுங்கள். முடிந்த வரையில் மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டாமல் முழு மீனாகவே சுத்தம் செய்வது சிறந்தது. ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் மீன் துண்டுகள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு இந்த கலவையை ஊற வைக்க வேண்டும் . இப்போது தேங்காய், கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு மற்றும் சீரகத்தை மிக்ஸி சாரில் சேர்த்து ஒரு பேஸ்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இதனை தக்காளி , வெங்கயத்துடன் சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள் .
பின்னர் இந்த பேஸ்டை இதனை ஊர வைத்திருந்த மீனை எடுத்து , அதில் அரைத்து வைத்த மசாலா கலவையை எல்லா இடத்திலும் சேரும்படியாக தடவிக்கொள்ளுங்கள் (மீனை வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம்). பின்னர் ஃபிரஷான வாழை இலை உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கடையிலோ இருந்தால் அதனை வாங்கி வந்து , மசாலா தடவிய மீனை வைக்கவும். வாழை இலையை சுத்தமான தண்ணீராக கழுவ மறந்துவிடாதீர்கள். வாழை இலையை மடித்து , அதனை நூல் கொண்டு கட்டிவிடுங்கள். ரெடியான மீன் வாழை இலையை இட்லி வேக வைக்கும் பாத்திரம் அல்லது தவா உதவியுடன் வேக வைத்துக்கொள்ளுங்கள். மிதமான சூட்டில் வேக வைப்பது அவசியம் . வாழை இலை முற்றிலுமாக வெந்த பிறகு எடுத்து பிரித்தால் , அட ! அட! கமகமக்கும் கேரளா ஸ்பெஷல் வேக வைத்த மீன் தயார்!
Also Read | June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!