News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Paneer Roastie: சுவையான பனீர் ரோஸ்டி ரெசிபியை அசத்தலாக செய்வது இப்படித்தான்!

சுவையான பனீர் ரோஸ்டி ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

இது ரவை, தயிர், பனீர் மற்றும் காய்கறிகள் சேர்த்து மிக விரைவாக தயாரிக்க கூடிய ஒரு ஆரோக்கியமான காலை உணவு. புரதச்சத்து நிறைந்த காலை உணவுக்கு இது சரியான தேர்வாக இருக்கும். இந்த பனீர் ரோஸ்டி ரெசிபி மிகவும் சுவையானதாக இருக்கும். 

தேவையான பொருட்கள் 

1 கப் ரவை, 1 கப் தயிர், 1/4 கப் குடைமிளகாய், பொடியாக நறுக்கிய1/4 கப் வெங்காயம், 1 அங்குல பொடியாக நறுக்கிய இஞ்சி, 1 தேக்கரண்டி பூண்டு பொடியாக நறுக்கியது, 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது. 1/4 கப் கேரட் பொடியாக  நறுக்கியது, 1/4 கப் பீன்ஸ் பொடியாக நறுக்கியது.

150 கிராம் பனீர் துருவியது, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்,  உப்பு சுவைக்கேற்ப, 2 டீஸ்பூன் எண்ணெய், 2 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் பொடியாக நறுக்கியது, 1/2 தேக்கரண்டி சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள், 7-8 கறிவேப்பிலை இலைகள், 1 தேக்கரண்டி கடுகு,  11/2 கப் தண்ணீர், 1 pack fruit salt. 

செய்முறை

1.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை, தயிர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவை அப்படியே எடுத்து வைத்துவிட வேண்டு.

2.ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

3.அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும். இப்போது அதில் குடைமிளகாய், பீன்ஸ், கேரட் போட்டு வேக விட வேண்டும்.

4.மிளகாய்த்தூள், கருப்பு மிளகு தூள், உப்பு மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும். இப்போது அதனுடன் துருவிய பனீரை சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து வதக்க வேண்டும்.

5.மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் பனீர் கலவையை கலக்கவும். அதனுடன் பழ உப்பு ( fruit salt) சேர்த்து கலக்கவும்.

6.இப்போது ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, ஒரு கரண்டி மாவை எடுத்து கடாயில் பரப்பி, ஒரு மூடியால் மூடி, வேக விட்டு மறுப்பக்கம் திருப்பி வேக விடவும்.

7.இப்போது சுவையான பனீர் ரோஸ்டி தயாராகி விட்டது. இதை க்ரீன் சட்னியுடன் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும். 

மேலும் படிக்க

Tirupati Tirumala: மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை; கேமராவில் பதிவான நடமாட்டம் - பயத்தில் பக்தர்கள்!

Lunar Eclipse: பக்தர்கள் கவனத்திற்கு.. இன்று நள்ளிரவில் சந்திர கிரகணம்.. மாலையில் கோயில் நடைகள் அடைப்பு..!

Published at : 28 Oct 2023 11:54 AM (IST) Tags: Paneer Roastie recipe paneer breakfast paneer recipe

தொடர்புடைய செய்திகள்

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Paneer Broccoli Rice:ஆரோக்கியமான பனீர் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

Plantain Masala Fry: வீட்டில் பூஜையா? தயிர், சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா வாழை வறுவல்..

Plantain Masala Fry: வீட்டில் பூஜையா? தயிர், சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா வாழை வறுவல்..

Pudding: 5 பொருட்கள் போதும்.. சுவையான புட்டிங் செய்யலாம்..செய்முறை இதோ..

Pudding: 5 பொருட்கள் போதும்.. சுவையான புட்டிங் செய்யலாம்..செய்முறை இதோ..

டாப் நியூஸ்

IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!

IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!

PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு

Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா

Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா