News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Black Salt Benefits : சாதாரண உப்புக்கும், இந்துப்புக்கும் என்ன வித்தியாசம்? பலன்கள் என்ன தெரியுமா?

சாதாரண உப்புக்கும் இந்துப்புக்குள் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று ஒரு பழ மொழி உண்டு. உப்பு பயன்படுத்தி சமைக்காத உணவை நிச்சயம் சாப்பிட முடியாது. உப்பு இல்லையென்றால் அந்த உணவு சுவை அற்றதாக மாறிவிடும். தற்போதைய காலக்கட்டத்தில் நம்மில் ஏராளமானோர் சுத்திகரிக்கப்பட்ட தூய வெள்ளை நிறத்திலான உப்புகளையே அதிகம் பயன்படுத்துகிறோம். அதுவே சுத்தமானது மற்றும் ஆரோக்கியமானது என நம்புகின்றோம். அதே நேரத்தில்  ஹிமாலயன் உப்பு அல்லது பிங்க் சால்ட் என்றழைக்கப்படும் இந்துப்பை நம்மில் சிலர் அறிந்திருப்போம்.  இந்த இரண்டு உப்புகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பது குறித்துப் பார்க்கலாம். 

பொதுவாக ஏராளமானோர் வீடுகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்பட்டது.  இது ஆலைகளில் சுத்தம் செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு கிடைக்கின்றன. ஹிமாலயன் உப்பு இந்திய துணை கண்டத்தில் உள்ள புதையல் என்று சொல்லப்படுகின்றது.  இது அதன் தனித்துவமான நிறம் மற்றும் கந்தக வாசனைக்கு பெயர் பெற்றது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எரிமலை  பகுதிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்துப்பு ஒரு தனித்துவமான உற்பத்தி செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றது. 

வழக்கமான உப்பின் சுவை அனைவரும் அறிந்ததே. இது ஒரு உணவில் உள்ள பொருட்களின் இயற்கையான சுவைகளை நுட்பமாக மேம்படுத்துகிறது.  இந்துப்பு ஒரு வித்யாசமான, விரும்பும்படியான சுவையை கொண்டிருக்கும். அதே நேரத்தில் இது  ஒரு தனித்துவமான, காரமான மற்றும் சற்று கசப்பான சுவையை கொண்டுள்ளது. இந்த வித்யாசமான சுவை காரணமாக பாரம்பரிய இந்திய மற்றும் தெற்காசிய உணவு வகைகளில் இந்துப்பு ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

வழக்கமான வெள்ளை உப்பை மிதமாக உட்கொள்வது அவசியம் எனக் கூறப்படுகிறது.  அதிக சோடியம் உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், இருதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் போன்ற உடல்நல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்துப்பு, ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.  சல்ஃபர் செரிமானத்திற்கு உதவுவதாகவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், வீக்கத்தை போக்குவதாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், மற்ற உப்பைப் போலவே,  இந்துப்பை மிதமாகப் பயன்படுத்துவது அவசியம். எனவே, உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் பல்வேறு உப்புகளில் எது ஆரோக்ய நலனுக்கு உகந்தது என்பதை அறிந்து அல்லது மருத்துவரை ஆலோசித்து பயன்படுத்தலாம். 

மேலும் படிக்க, 

எனவே, உடல் நலனில் அக்கறை உள்ளவர்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் பல்வேறு உப்புகளில் எது ஆரோக்ய நலனுக்கு உகந்தது என்பதை அறிந்து பயன்படுத்தாலாம். 

NLC Issue : '5 கோடி இழப்பீடு கொடுத்தாலும் தேவையில்லை': என்.எல்.சி போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு..

Published at : 29 Jul 2023 10:37 AM (IST) Tags: Difference benefits Black salt Table Salt

தொடர்புடைய செய்திகள்

Kaara Kozhukattai :கார கொழுக்கட்டை : ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக் ரெசிபி செய்முறை!

Kaara Kozhukattai :கார கொழுக்கட்டை : ஆரோக்கியமான மாலை நேர ஸ்நாக் ரெசிபி செய்முறை!

Green Peas Rice : பிரியாணியை மிஞ்சும் சுவையில் பச்சை பட்டாணி சாதம்.. செய்முறை இதோ..

Green Peas Rice : பிரியாணியை மிஞ்சும் சுவையில் பச்சை பட்டாணி சாதம்.. செய்முறை இதோ..

Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?

Banana Poli: அடிபோலி! வாழைப்பத்தில் சூப்பர் சுவையில் போளி செய்வது எப்படி?

Vermicelli Sweet: சேமியா ஸ்வீட்! குறைந்த பொருட்களை வைத்து வீட்டிலே செய்யலாமா?

Vermicelli Sweet: சேமியா ஸ்வீட்! குறைந்த பொருட்களை வைத்து வீட்டிலே செய்யலாமா?

Orange Ice Cream: கெமிக்கல் இல்லாத டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் க்ரீம்! வீட்டிலே செய்வது எப்படி?

Orange Ice Cream: கெமிக்கல் இல்லாத டேஸ்டியான ஆரஞ்சு ஐஸ் க்ரீம்! வீட்டிலே செய்வது எப்படி?

டாப் நியூஸ்

Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா

Vijayakanth Padma Bhushan: பத்மபூஷன் விருதுபெற்ற 8 தமிழர்கள்....விஜயகாந்த் சார்பாக விருதை பெற்றுக்கொண்ட பிரேமலதா

”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்

”ரொம்ப வருத்தமா இருக்கு” சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்

Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!

Star Movie: ஸ்டார் படம் பார்த்துட்டு இத பண்ணாதீங்க ப்ளீஸ்.. இயக்குநர் இளன் ரசிகர்களுக்கு வைத்த கோரிக்கை!

TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?

TN Heat Wave: கொளுத்தும் வெயில்.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு - எதுக்குனு தெரியுமா?