எடை குறைக்கணுமா? இனி இதை ட்ரை பண்ணுங்க.. கொட்டிக்கிடக்கும் நார்ச்சத்து! சைலியம் ஹஸ்க் பலன்கள்!
எடை குறைப்புப் போராட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்த விஷயம், நார்ச் சத்துகள் எடையை இழக்க உடலுக்கு எப்படி உதவுகிறது என்பது. அந்த வரிசையில், எடை இழப்பு சந்தையில் புதிதாகப் பரவலாகும் ஓர் உணவு – சைலியம் ஹஸ்க்
எடை குறைப்பு இன்று பலருக்கும் தலை வலியாய் இருக்கும் விஷயம். பிடித்தமான உணவுகளைத் தியாகம் செய்வது, உடல் வலிக்க பயிற்சிகள் செய்வது, உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்காமல் திண்டாடுவது என நமது எடை நமது நிம்மதியுடன் விளையாடுவது அதிகம் பேருக்கு நடக்கிறது. பிரவுன் அரிசி, பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள் என்று குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை நாம் தேடித் போக துவங்கி விட்டோம்.
எடை குறைப்புப் போராட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்த விஷயம், நார்ச் சத்துகள் எடையை இழக்க உடலுக்கு எப்படி உதவுகிறது என்பது. அந்த வரிசையில், எடை இழப்பு சந்தையில் புதிதாகப் பரவலாகும் ஓர் உணவு – சைலியம் ஹஸ்க். இதனை இசப்கால் என்றும் கூறுவர். ப்லான்டகோ ஒவாட்டா என்னும் செடியின் விதைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள் இது. ஆச்சரியப்படுத்தும் வகையில் இதனிடம் நார்ச்சத்து குவிந்து கிடக்கிறது. அதனால்தான், எடை இழப்பு சந்தையில் இதன் பெயர் அதிகம் அடிபடுகிறது.
இது பவுடராக கிடைக்கிறது, பாலுடனோ பழச்சாருடனோ இதனை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து வயிறை நிரப்புவதுடன், கொழுப்பு சேர்ப்பை எதிர்க்கும் திறனையும் உடலுக்குக் கடத்துகிறது. மேலும், நமது சீரண செயல்பாட்டை சுத்திகரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. இதயத்திற்கும் கணையத்திற்கும் வலு சேர்க்கும் உணவுப் பொருள் இது. உடலின் நீர் அளவை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் இருப்பதும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இதனை நமது வழக்கமான உணவு வேளைகளுக்கு நடுவில் எடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் இதனை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருப்பின், மருத்துவருடன் கலந்தாலோசித்து விட்டு இதனை எடுத்துக்கொள்வது நல்லது. கர்ப்பிணி பெண்களும் மருத்துவ ஆலோசனைக்குப் பின் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்