News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Atta Maggi Noodles: வீட்டிலேயே ஆட்டா மேகி நூடுல்ஸ் தயாரிக்கலாம்! செய்முறை இதோ!

வீட்டிலேயே ஆட்டா மேகி நூடுல்ஸ் எளிமையாக எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

சிலர் கடைகளில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிடுவதை விரும்புவதில்லை. ஆனால் குழந்தைகளோ விளம்பரங்களில் பார்க்கும் நூடுல்ஸ்களை பார்த்து அதை சாப்பிட வேண்டும் என அடம் பிடிப்பார்கள். ஆனால் இனி உங்கள் குழந்தைகள் நூடுல்ஸ் கேட்டால், நீங்கள் வீட்டிலேயே நூடுல்ஸ் தயாரிக்கலாம். இது ஆரோக்கியமானதாக இருக்கும். கோதுமை மாவு, தண்ணீர், உப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு மிக எளிமையாக நூடுல்ஸ் செய்து விட முடியும். வாங்க வீட்டிலேயே மேகி நூடுல்ஸ் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 2 கப் முழு கோதுமை மாவு 
  • 1/2 கப் தண்ணீர் 
  • 1/2 தேக்கரண்டி உப்பு

செய்முறை

1.ஒரு பெரிய  கிண்ணத்தில், முழு கோதுமை மாவு மற்றும் உப்பு  சேர்த்து மாவை மென்மையாக கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை கட்டிப்படாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். மாவை கரைக்கும் போது படிப்படியாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். 
 
2. மாவை மூடி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். 
 
3. இப்போது மாவை சப்பாத்தி செய்ய சிறு  சிறு உருண்டைகளாக எடுப்பது போன்று எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

4. ஒவ்வொரு பகுதியையும் மெல்லியதாக உருட்டிக் கொள்ளவும். 
 
5.ஒரு கூர்மையான கத்தியால், உருட்டிய மாவை மெல்லிய கீற்றுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  நூடுல்ஸ் தயாரிக்கும் கருவி மூலம் தயாரித்துக் கொள்ளலாம். 
 
6. அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
7.வீட்டில் தயாரிக்கப்பட்ட அட்டா மேகி நூடுல்ஸை கொதிக்கும் தண்ணீரில்  போட்டு 2-3 நிமிடங்கள் அல்லது அவை மேற்பரப்பில் மிதக்கும் வரை வேக வைக்க வேண்டும்.
 
8.நூடுல்ஸை வடிகட்டி, ஒட்டாமல் இருக்க குளிர்ந்த நீரில் போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் தயாராகி விட்டது. இதை நீங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து தயாரித்து பறிமாறலாம். 
 
Published at : 02 Dec 2023 08:50 PM (IST) Tags: @food Atta Maggi Noodles Home Made Noodles

தொடர்புடைய செய்திகள்

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

Poha Recipes: உடல் எடையை நிர்வகிக்க உதவும் அவல்;ரெசிபிகள் சில!

Poha Recipes: உடல் எடையை நிர்வகிக்க உதவும் அவல்;ரெசிபிகள் சில!

Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை செய்வது இவ்வளவு எளிதானதா? இதைப் படிங்க!

Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை செய்வது இவ்வளவு எளிதானதா? இதைப் படிங்க!

டாப் நியூஸ்

BREAKING : காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன? சுகாதாரத்துறை என்ன சொல்கிறது?

BREAKING : காஞ்சிபுரம் : 30-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, திடீர் பாதிப்புக்கு காரணம் என்ன? சுகாதாரத்துறை என்ன சொல்கிறது?

Breaking News LIVE: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார் அமைச்சர் மஸ்தான்

Breaking News LIVE: கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தார் அமைச்சர் மஸ்தான்

Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!

Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!

Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..

Latest Gold Silver Rate: மகிழ்ச்சியான செய்தி.. இன்னைக்கு தங்கம் விலை சரிவு.. விலை நிலவரம் இதோ..