மேலும் அறிய

Sukran Peyarchi 2023: டிசம்பர் மாதத்தில் கோடிகளில் செழிக்கப்போவது யார்? - 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் இதோ..!

Sukran Peyarchi 2023 in Tamil: 2023 ஆம் ஆண்டின் கடைசி மாதம் வந்துவிட்ட நிலையில், இந்த டிசம்பர் மாதம் நடைபெறும் சுக்கிரன் பெயர்ச்சி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டமாக அமையவுள்ளது என்பதை காணலாம். 

2023 ஆம் ஆண்டின் கடைசி மாதம் வந்துவிட்ட நிலையில், இந்த டிசம்பர் மாதம் நடைபெறும் சுக்கிரன் பெயர்ச்சி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டமாக அமையவுள்ளது என்பதை காணலாம். 

மேஷ ராசி : 

 2023 கன்னி ராசியில் இருந்து சுக்கிரன் டிசம்பர் மாதம் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் எதிலும் வெற்றி நோக்கி பயணிக்க போகிறீர்கள். உங்கள் இரண்டாம் வீட்டுக்கும் ஏழாம் வீட்டுக்கும் அதிபதி சுக்கிரன் அமர்வதால் பண  வரவு தாராளமாக இருக்கும்.  தடைபட்ட  வேலைகள் மிக சுலபமாக நடக்கும். பொலிவு கூடி புத்துணர்வு பிறக்கும். வீடு, மனை,  வாகனம் வாங்கும் யோகம் சிறப்பாக அமையும்.  திருமணம் கைகூடுவதோடு நீங்கள் எதிர்பார்க்கும் அழகான மனைவி அமைவார். தடைபட்ட திருமண பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும்.

ரிஷப ராசி : 

2023 கன்னி ராசியில் இருந்து சுக்கிரன் டிசம்பர் மாதம் துலாம்  ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி வீட்டில் அமர்கிறார்.  மலையளவு கடன் இருந்தாலும் கடுகு அளவு சின்னதாகும் அளவிற்கு  கடன் சுமை குறையும்.  உங்களை எதிர்த்தவர்கள் தடம் தெரியாமல் போகப் போகிறார்;கள்.  வங்கியில் கடன் வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களுக்கு  உடனடியாக கடன் கிடைக்கும்.  வேலையில் சுபிட்சமும்.  தொழிலில் முன்னேற்றமும்.  வருமானம் உயர்தலும் ஏற்படும்.

 ராசியாதிபதி ஆறாம் வீட்டில் அமர்வதால் அரசு அரசு உத்தியோகம் போன்றவை சாதகமாக முடியும்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறப் போகிறீர்கள்.  கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது. விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கப் போகிறது.  வாழ்க்கைத் துணையுடன்  வெளி மாநிலம், வெளிநாடு என்று சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.  

சுக்கிரனின் பார்வை  6,7,8 ஆகிய இடங்களில் பதிவாவதால்  உங்கள் முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றமாக அமையும். சிறு சிறு உடல் உபாதைகள் வந்து செல்லும் என்பதால் கவலை வேண்டாம். அது பெரிய அளவில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. துலாம் ராசியாக இருந்து நீங்கள்  முதலாளியாக இருந்தால் தொழிலாளியிடம் சற்று பக்குவமாக நடந்து கொள்ளுங்கள் அவர்கள் உங்களுக்கு எதிராக போர் கொடி உயர்த்த வாய்ப்புண்டு . வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அனுகூலமாக அமையும். 

 மிதுன ராசி : 

 2023 டிசம்பர் மாதம் கன்னி ராசியில் இருந்து  தனது சொந்த ஆட்சி வீடான துலாம்  ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார்.  வாழ்க்கையில் தொழில் விஷயமாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நீங்கள் உங்களுக்கு ஐந்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டிலேயே  ஆட்சி பெறுவதால் நல்ல முன்னேற்றமான வாழ்க்கை அமையும்.  குழந்தை பேருக்காக காத்திருந்தவர்களுக்கு மழலை செல்வங்களுக்கான  நல்ல  செய்தி வரும்.  மிதுன ராசியின் பிள்ளைகள் மூலமாக முன்னேற்றமும் அன்பும் பாசம் அரவணைப்பு போன்றவை கிடைக்கும்.  

மிதுன ராசியின் மகனோ மகளோ வெளிநாடு செல்வதற்கோ அல்லது வெளி மாநிலம் சென்று உத்தியோகம் ரீதியாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை இந்த டிசம்பர்  மாதம் ஏற்படுத்தித் தரப் போகிறது.  தெளிவான சிந்தனை, புது  ஆற்றல் போன்றவை உருவாகும்.  உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டிற்கும் 11ஆம் வீட்டிற்கும் அதிபதி செவ்வாயின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது கடனை அடைப்பீர்கள்.  வீடு கட்டுவதற்கான முயற்சிகள் தொடங்கலாம்.  புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம்.  நிச்சயமாக உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய காலகட்டம் இது.  வாழ்க்கையில் எதையும் சுலபமாக அடையாமல் வெற்றி என்ற குறிக்கோளை ஒன்றை இலக்காக வைத்துக் கொண்டு ஓடுகின்ற நீங்கள்  டிசம்பர் மாதத்தில் வெற்றியை மட்டும் அடையப் போகிறீர்கள். 

 கடக ராசி:

 2023 டிசம்பர் மாதத்தில் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார்.  இந்த சுக்கிர பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.  கடினமான பாதைகளை கடந்து வரும் நீங்கள் மூச்சு விடுகின்ற  அளவிற்கு நல்ல முன்னேற்றத்தை காணப் போகிறீர்கள்.  உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் அவர் நீங்கள் புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க போகிறீர்கள்.  புதிய வாகனத்தை வாங்கப் போகிறீர்கள். இடம் மனை போன்றவை லாபகரமாக அமையும்.

 உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சௌகரியமாக இருப்பதற்கு என்ன திட்டங்களை போட்டு இருந்தீர்களோ அந்த திட்டங்கள் நிறைவேறும் காலம் வந்து விட்டது  இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு பொன்னான காலகட்டமாக அமையப்போகிறது. ஏற்கனவே குரு பகவான் வக்ரஹதியில் உங்கள் ராசிக்கு பாக்கிய அதிபதியாக ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார் தற்போது சுக்கிர பகவானும் லாபாதிபதியாகி உங்கள் நான்காம் வீட்டில் வந்து உங்களுக்கு கம்போர்ட் என்று சொல்லக்கூடிய  சௌகரியமான இடத்தில் உங்களை வைக்கப் போகிறார்.  

அனைத்தும் நல்லபடியாக முடியும். புதிய வேலை தொழில்  மாற்றம் போன்றவை சாதகமாக அமையும்.  நீண்ட நாட்களாக காத்திருந்த ஒன்று இந்த டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு கைக்கூடி வரப்போகிறது.  கணவன் மனைவியே ஒற்றுமை அதிகரித்து அன்பு கூடும். வெளியூர்களுக்கு சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.  


 சிம்ம ராசி:

2023 டிசம்பர் மாதத்தில் கன்னி ராசியில் இருந்து சுக்கிர பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.  சிம்ம ராசிக்கு இரண்டாம் பாவத்தில் கேது பகவானும் எட்டாம் பாவத்தில் ராகு பகவானும் ஏற்கனவே அமர்ந்து உங்களுக்கு சிறு சிறு தொல்லைகளை கொடுத்து வந்தாலும்  உங்களின் தொழில் ஸ்தான அதிபதியான சுக்கிரன் மூன்றாம் பாவத்தில் ஆட்சி பெறுவதால் நீங்கள் வைப்பது தான் சட்டமாக இருக்கும். 

உங்களுக்கு எவ்வளவு பெரிய கடினமான வேலைகளை கொடுத்தாலும் அதை அசால்டாக செய்து முடிப்பீர்கள்.  இதுவரை எந்த ஒரு காரியத்தையும் தயங்கி தயங்கி செய்த நீங்கள் தைரியமாக இந்த டிசம்பர் மாதத்தில் முடிவுகளை எடுக்கப் போகிறீர்கள். அடுத்தவர்கள் உங்களை கேட்டு முடிவுகளை எடுக்கக்கூடிய சூழ்நிலைக்கு நீங்கள் வரப் போகிறார்கள்.  சிங்கம் எப்படி கர்ஜிக்குமோ அப்படி ஒரு கர்ஜனையை டிசம்பர் மாதத்தில் நீங்கள் எதிர் பார்க்கலாம்.  குறிப்பாக கலைத்துறையில்  இருக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு ஒரு பொற்காலம்.  வீடு மனை வாகனம் போன்றவை சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.  வருகின்ற டிசம்பர் மாதம் உங்களுக்கு பொற்காலமாகவே இருக்கப்போகிறது. 

கன்னி ராசி:

2023 டிசம்பர் மாதத்தில் கன்னி ராசியில்  இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சுக்கிர பகவான்.  இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.  கன்னி ராசிக்கு லக்னத்தில் கேது பகவான் அமர்ந்து சில சில சங்கடங்களை கொடுத்து வந்தாலும்  அந்த சங்கடங்களை தீர்ப்பதற்காகவே உங்களுக்கு பாக்யாதிபதியான சுக்கிரன் இரண்டில் அமர்ந்து குடும்ப மேன்மை குடும்பத்தின் சேமத்தை உயர்த்தப் போகிறார்.  கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சில பிரச்சினைகள் அகன்று ஒற்றுமை கூட போகிறது. 

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்க போகிறது.  குடும்பத்தினருடன் அதிக காலங்கள் செலவழிப்பதற்கான  நேரம் இதுவே. உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் அகன்று வரவேண்டிய விஷயங்கள் வந்து சேரும்.  நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் . பணம் அதிகமாக கையில் இருக்கிறது என்று யாரையும் நம்பி எதிலும் முதலீடு செய்ய வேண்டாம்.  ஒரு தொழிலுக்கு இரண்டு தொழில் பார்த்து வருமானத்தை கூட்ட போகிறீர்கள். 

 துலாம் ராசி:

 2023 டிசம்பர் மாதத்தில்  சுக்கிர பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  துலாம் ராசி கடந்த ஒன்றரை வருடங்களாக  பிரச்சனையை சந்தித்து வந்த நீங்கள் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி உங்கள் லக்னத்தில் இருந்து கேது விலகி  உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்து இருப்பார்.  

தற்போது உங்களுடைய ராசி அதிபதி ஆன சுக்கிரன் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் வம்பு வழக்குகளில் வெற்றி போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் போன்றவை சாதகமாக அமையும்.  உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் உங்களுக்கு நண்பர்களாக திரும்பி  உங்களிடமே வந்து சேர்வார்கள்.  நீண்ட நாட்களாக காத்திருந்த பணம் கைக்கு வந்து சேர போகிறது உங்களுக்கு எதிராக சதி செய்தவர்களின் சதி வலையை முறியடிப்பீர்கள்.  நாம் இதுவரை எதை இழந்திருக்கிறோம் என்று கணக்கு பார்த்து அதை மீட்டெடுப்பதற்கான வழி வகைகளை இந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க போகிறீர்கள்.  வாழ்க்கை ஒளிமயமாக அமையப்போகிறது 

 விருச்சக ராசி: 

 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுக்கிர பகவான் கன்னி ராசி யிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு போகிறது என்பதை பார்க்கலாம் .  விருச்சக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடப்பதால் எதிலும் சற்று தாமதமாகவே செயல்படுவது நல்லது.  ஆனால் உங்கள் ராசிக்கு ஏழாம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் செலவுகள் கட்டுக்குள் வரும்.  வீட்டில் நடக்கும் சுப காரியங்களுக்கு சுபச் செலவுகளை செய்ய வேண்டி வரும்.

 நீண்ட தூர பிரயாணம் மேற்கொள்ளப் போகிறீர்கள்.   வெளி தேசம் வெளிநாடு போக வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு பொன்னான காலகட்டம்.  ஏழாம் அதிபதி 12ஆம் வீட்டில் வீட்டு இருப்பதால் மனைவியுடன் சில சில சண்டைகள் வந்து போகும். ஆனால் அதைப் பற்றி எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்  அன்போடு அதை கடந்து செல்வது நல்லது.  தொழில் ரீதியாக ஒரு பெரிய முன்னேற்றத்தை காண்பீர்கள். 

தனுசு ராசி:

 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  சுக்கிர பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார் இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம்.  இதுநாள் வரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் வீற்றிருந்த ராகு பகவான் நான்காம் இடத்திலும், கேது பகவான் பத்தாம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார் . மற்ற ராசிகளை காட்டிலும் தனுசு ராசிக்கு சிறப்பான எதிர்காலம்  இருக்கிறது  என்று சொல்ல வேண்டும்.

 உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டு அதிபதி பதினோராம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் எதிலும் வெற்றி தான் கிட்டும்.   நோய் இருந்தால் அது இடம் தெரியாமல் போய்விடும்.  பெரிய பெரிய நோய்கள் இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்ப்பதன் மூலமாக அதை சுலபத்தில் குணப்படுத்த முடியும்.  எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள்.  உங்கள் மீது யாரேனும் வழக்கு தொடர்ந்தால் அந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக முடிவது மட்டுமல்லாமல் லாபமாகவும் முடியப்போகிறது.  

நீங்கள் எதிர்பார்த்த ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் இந்த டிசம்பர் மாதத்தில் கைக்கு வந்து சேர போகிறது.  நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பாராதது என்று அனைத்துமே வெற்றியாக முடியப்போகிறது.  நீங்கள் இதனால் வரை அலுவலக வேலை பார்த்து வந்தீர்கள் என்றால் நிச்சயமாக வீட்டிலிருந்தபடியே மிகப்பெரிய தொகையை சம்பாதிப்பதற்கான வழிவகையை 11 ஆம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் உங்களுக்கு ஏற்படுத்தப் போகிறார்.  அனைத்துமே வெற்றி வெற்றி.  கலைத்துறையினருக்கு ஏற்றமான காலகட்டம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும்.  பிரிந்திருந்த தம்பதி ஒன்று கூட போகிறார்கள்.  அனைத்துமே வெற்றி வாகை சூட போகிறீர்கள்.

 மகர ராசி: 

 2023 டிசம்பர் மாதத்தில் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சுக்கிர பகவான் பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு என்ன செய்யப் போகிறது என்பதை பார்க்கலாம்.  உங்களுக்கு ஐந்தாம் வீட்டு அதிபதி  பத்தாம் இடத்தில் ஆட்சி பெறுவதால் நிச்சயமாக உங்கள் தொழிலில் மிகப்பெரிய லாபத்தை ஈட்டப் போகிறீர்கள்.  நான் என்னால் முடிந்த  அளவிற்கு என் திறமையை காட்டி விட்டேன் என் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த உங்களுக்கு சரியான நேரம் வந்துவிட்டது.  

ஐந்தாம் அதிபதி பத்தாம் பாவத்தில் அமர்வதால் உங்கள் எண்ணங்கள் புது வடிவத்தை பெற்று  நீங்கள் வேலை செய்யும் இடத்திலே முதன்மையான நபராக திகழப் போகிறீர்கள்.  வேலை ஸ்தலத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ அதையே உங்கள் மேல் அதிகாரி  அங்கீகரிக்கப் போகிறார்.  போட்டிகளில் வெற்றி, காதலில் வெற்றி.  காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கான வழியை இந்த டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்து கொடுக்கும்.  

உங்களுடைய ராசிக்கு மூன்றாம் பாவத்தில் ராகு பகவான் அமர்ந்து எதிலும் வெற்றியை தரப் போகிறார் அதே போன்று உங்களுடைய பத்தாம் ராசியில் சுக்கிர பகவான் ஆட்சி பெற்று எதிலும் மேன்மையை தரப் போகிறார் தொழில் ரீதியாக லாபத்தை தர போகிறார்.  கணவன் மனைவி இடையே பரஸ்பரமான அன்பு மேலோங்கும்.  இதனால் வரையில் மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்து வந்த நீங்கள் மிகப்பெரிய ஆறுதல் அடைந்து அனைத்திலும் நல்ல பாதையை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் வணக்கம் வாழ்த்துக்கள். 

 கும்ப ராசி: 

 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுக்கிர பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.  கும்ப ராசிக்கு இரண்டாம் பாவத்தில் ராகு பகவானும் எட்டாம் பாவத்தில் கேதுவும் அமர்ந்து குடும்பத்தில் சில சலசலப்புகளை உருவாக்கக்கூடும் தம்பதியினரிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக் கூடும்.  இது போன்ற சிக்கல்கள் இருந்து உங்களுக்கு நான்காம் பாவாதிபதி ஒன்பதாம் பாவத்தில் அமர்ந்து அனைத்தையும் நல்லபடியாக முடித்து வைக்கப் போகிறார்.  

வீடு,வாகனம் போன்றவை உங்களுக்கு லாபமாக அமையப்போகிறது.  எடுக்கும் காரியங்களில் வெற்றி அடையப் போகிறீர்கள்.  இது நாள் வரையில் உங்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த நபர்களைக் கண்டறிந்து உங்களை விட்டு துரத்த போகிறீர்கள்.  நீண்ட தூர பிரயாணம்,  ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருதல் போன்ற பயணங்களை நீங்கள் இந்த டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம்.  தொழிலில் மேன்மை தொழிலில் லாபம் போன்றவை வெற்றிகரமாக அமையப்போகிறது. உங்கள் வங்கி சேமிப்பு உயரும்.  எதிலும் வெற்றியைத்தான் சந்திக்க போகிறீர்கள். 

மீன ராசி:

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுக்கிர பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  மீன ராசியில் ராகு பகவான் அமர்ந்திருந்து உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார்.  இதுவரை யாரும் பார்க்காத புது முகத்தை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு வாழ்க்கைத் துணை இடம் காட்டப் போகிறீர்கள்.  

அமைதியாக சரணமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த உங்களது வாழ்க்கை சுறுசுறுப்பாகவும்  உத்வேகத்துடன் இயங்கப் போகிறது.  நீங்கள் எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அதை எல்லாம் சாதிக்க போகிறீர்கள்.  புதிய முயற்சிகள் கைகூடும்.  புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  மற்றவர்கள் சாதாரணமாக செய்யும் எந்த ஒரு காரியத்தையும் நீங்கள்  அசாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

அந்த வகையில் இந்த மாதம் உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றத்தின் மாதமாக அமையப் போகிறது.  தொழிலில் இரட்டிப்பு லாபம் முன்னேற்றம்   போன்றவை கைக்கு வந்து சேரும்.  உங்களின் மூன்றாம் அதிபதி எட்டாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நீங்கள் இடம் பெயர் வாய்ப்பு உண்டு.  உடல் தேக ஆரோக்கியம் கூடும் உங்கள் உடலில் மறைந்திருந்து வியாதிகள் வெளிப்பட்டு அதற்கான தீர்வும் கிடைக்கும்.  இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு முன்னேற்றமான மாதமாகவே இருக்கப்போகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget