Idli Bajji | மீதமான இட்லிகளில் மொறு மொறு ஸ்னாக்ஸ்.. இட்லி மசாலா பஜ்ஜி ரெசிபி டிப்ஸ் ரெடி..
சூர்யவம்சம் படத்திலிருந்து பிரபலமான இட்லி உப்புமாவை நாம் செய்துபழகிவிட்டோம். இனி கொஞ்சம் மாத்தி யோசித்து சிற்றுண்டியாக மீதமான இட்லியில் சுவையாக பஜ்ஜி செய்யலாம்.
மீதமான இட்லியை வைத்து வெறும் 5 நிமிடத்தில் இட்லி பஜ்ஜி ரெசிபியை வீட்டிலேயே சுலபமாக நீங்களே செய்து பார்க்கலாம்.
ஸ்நாக்ஸ் என்றால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று யாருமே சொல்லமாட்டோம். அதிலும் லாக்டவுன் சமயத்தில் வீட்டில் முடங்கி கிடந்த நேரத்தில் ஸ்நாக்ஸ் என்ன செய்வது? என்று கூகுளில் தேடாத ஆட்கள் இருக்கவே முடியாது. இதற்காக பெரும் நேரத்தைக்கூட நாம் செலவழித்திருப்போம். இனி அந்த கவலை வேண்டாம்.. ஈஸியாக ஒரு ஸ்நாக்ஸ் செய்யும் வழிமுறை என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
ஒவ்வொரு வீட்டிலும் காலை டிபன் பெரும்பாலும் இட்லியாகத்தான் இருக்கும். ஆனால் சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக இட்லியை செய்துவிடுவோம். பின்னர் மாலையில் சூர்யவம்சம் படத்திலிருந்து பிரபலமான இட்லி உப்புமாவை நாம் செய்துபழகிவிட்டோம். இனி கொஞ்சம் மாத்தி யோசித்து சிற்றுண்டியாக மீதமான இட்லியில் சுவையாக பஜ்ஜி எப்படி தயார் செய்து என இங்கே பார்க்கலாம்..
மீதமான இட்லியில் பஜ்ஜி செய்வதற்குத் தேவையானப் பொருட்கள்:
வேக வைத்த இட்லி
உருளைக் கிழங்கு
மிளகாய் தூள்
வெங்காயம்
சீரகம் மற்றும் பஜ்ஜி மாவு
அரிசி மாவு
எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு
செய்முறை
மீதமான இட்லியில் பஜ்ஜி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். இறுதியில் இந்த மாவை வடை போல் தட்டிக்கொள்ளவும்.
இதனுடன் மீதமான இட்லிகளை எடுத்து இரண்டு துண்டுகளாக வெட்டி வடை போல் தட்டி வைத்துள்ள மசாலாவில் வைக்க வேண்டும்.
இதன்பின்னர், ஒரு அகலமான பாத்திரம் எடுத்து, அதில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு , மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜிக்கான மாவு தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பஜ்ஜி மாவில், ஸ்டஃப் செய்த இட்லியை மூழ்கடித்து சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது டேஸ்டியான இட்லி பஜ்ஜி தயாராகிவிடும். இதற்கு உங்களுக்கு பிடித்த சட்னி, சாம்பார் சேர்த்து பரிமாறினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இனி டக்குன்னு ஸ்நாக்ஸ் செய்யனும்னு நினைச்சிங்கன்னா… இந்த சுவையான இட்லி பஜ்ஜியை கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள்..