Health Tips: எலுமிச்சை, புதினா கலந்த சீரகத் தண்ணீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்!
சீரகம், புதினா மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் பானமானது நமக்கு சிறப்பான நன்மைகளைத் தரும்.
இந்திய உணவுகள், குறிப்பாக தென்னிந்திய உணவுகளில் காரம் அதிகமாகவும், மசாலாக்களின் கலவை அதிகமாகவும் இருக்கும். மேலும் கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் மற்றும் பால் பொருட்கள் என்பன தமிழக உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.
செரிமான பிரச்சினைகள்:
இத்தகைய உணவுகள் உடலுக்கு செரிமான பிரச்சனைகள் மற்றும் அதிகப்படியான கொழுப்புக்களையும் உண்டாக்குகிறது.இவற்றை தவிர்ப்பதற்காக வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, செரிமானத்திற்கும், உடலின் ஊட்டச்சத்துக்கும் மற்றும் கொழுப்பை கரைத்து சமப்படுத்துவதற்கும் பானங்களை தயாரித்துக் கொள்ளலாம்.
சீரகம் புதினா மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படும் பானமானது நமக்கு சிறப்பான நன்மைகளைத் தரும்.
சீரகத்தின் நன்மைகள்:
செரிமான பிரச்சனைகள், வாயு தொந்தரவு, ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது,ரத்த சோகையை தடுப்பது, முடி வளர்ச்சியை அதிகரிப்பது, உடலுக்கு தேவைப்படும் விட்டமின் சி யை தருவது, தூக்கமின்மையை சரி செய்து ஆழ்ந்த உறக்கத்தை தருவது மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையை சரி செய்வது என எண்ணிலடங்கா நன்மைகள் இந்த சீரகத்தை உட்கொள்வதினால் கிடைக்கிறது.
எலுமிச்சை சுவையைத் தருவதோடு, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. இதில் அளவில் வைட்டமின் சி உள்ளது. பழைய திசுக்களுக்கு பதிலாக புது திசுக்கள் உற்பத்தி மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு இந்த விட்டமின் சி யானது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அருமை பிரச்சனைகளுக்கு எலுமிச்சை ஆகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது செரிமானத்தை சரி செய்கிறது. அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. முகப்பரு நகங்களின் வளர்ச்சி மற்றும் உடலில் ஏற்படும் எப்படியான துர்நாற்றம் என அனைத்தையும் சரி செய்யும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு
புதினாவினால் கிடைக்கும் நன்மைகள்:
புதினாவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்திருப்பதால் மன அழுத்தத்தை குறைக்கிறது.அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் வாயு பிரச்சனை,வயிற்றுவலி, தொப்பை மற்றும் மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகள் சரி செய்கிறது.
நார்ச்சத்து,வைட்டமின் ஏ, மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது.விட்டமின் ஏ நிறைந்திருப்பதினால் கண் பார்வை சார்ந்த பிரச்சனைகள்,புதினா சாப்பிடுவதனால் குணமாகிறது. எடை குறைப்பு,கொழுப்பை கரைப்பது, மற்றும் புத்துணர்ச்சி அளிப்பது என புதினாவினால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படி பயன் நிறைந்து காணப்படும் புதினா, சீரகம் மற்றும் எலுமிச்சையை கலந்து சத்தான பானத்தை செய்வது எப்படி என்பதை காணலாம். சீரகத்தை ஈரம் நீங்கி,வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கடைகளில் கிடைக்கும்,புதினா தழைகளை வாங்கி வந்து,சுத்தம் செய்து,வெண்ணை போல நன்றாக அரைத்து,ஒரு கொள்கலனின் அடைத்து,ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இதுபோலவே எலுமிச்சையை வாங்கி வந்து, அதை சாறு எடுத்து, ஒரு கொள்கலனில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
இறைச்சி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடும் நேரங்களில் தேவைக்கு ஏற்ப குளிரான பானம் ஆகவோ அல்லது வெதுவெதுப்பான சூடான பானமாகவோ எலுமிச்சை புதினா சீரகம் கலந்த பானத்தை தயாரிக்கலாம். முதலில் உங்கள் தேவைக்கு ஏற்ப குளிர்ந்த நீரோ அல்லது மிதமான சூட்டில் இருக்கும் நீரையோ ஒரு கிளாஸ் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது கல் உப்பை சேர்க்க வேண்டும். பொடி செய்து தூளாக்கி வைத்திருக்கும்,சீரகத்தின் தூளை கால் டீஸ்பூன் அளவிற்கு அதில் சேர்க்க வேண்டும். இது போலவே கால் டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.மேலும் வெண்ணெய் போல் நன்றாக அரைத்து வைத்திருக்கும் புதினாவை. கால் டீஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும்.இப்போது இந்த பானத்தை நன்றாக கலக்க வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடும் காலங்களில் இத்தகைய பானங்களை தயார் செய்து பருகலாம். அப்படி இல்லாவிட்டாலும் கூட வாரத்திற்கு மூன்று முறை சாப்பிட்டதுக்கு பிறகு, இந்த பானத்தை அருந்தினால்,உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களோடு, செரிமான கோளாறு மற்றும் உடல் எடை கூடாமல் இருப்பது என நிறைய நன்மைகளை பெறலாம்.