News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Wheat Momos: ஆரோக்கியமான கோதுமை மோமோஸ் ...இப்படி செய்து அசத்துங்க!

Wheat Momos: கோதுமை மோமோஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

செய்முறை

ஒரு கப் கோதுமை மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து கோதுமை மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.கடைசியாக இதன் மீது எண்ணெய் தடவி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து விட வேண்டும். 

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை ஸ்பூன் சோம்பு, நறுக்கிய நான்கு பெரிய வெங்காயம், ஒரு சிறிய கேரட் துருவியது, முட்டைக்கோஸ் அரை கப் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும், இதனுடன் அரை ஸ்பூன் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் தனி மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி விட்டு இறக்கி கொள்ளலாம். இதனை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளலாம். 

பிசைந்து வைத்த மாவில் இருந்து சப்பாத்திக்கு மாவு உருண்டை எடுப்பதை விட சற்று சிறிய உருண்டையாக எடுத்து சப்பாத்தி திரட்டுவது போல் திரட்டிக் கொள்ள வேண்டும். இதனுள் நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை உங்களுக்கு தேவையான அளவு வைத்து மோமோஸ் போன்று மடித்துக் கொள்ளவும். இப்படி மடிக்கும் போது இந்த உருண்டையை மூடும் இடத்தில் சற்று அதிகமாக மாவு இருக்கும். அதிலிருந்து ஒரு சிறிய கோலி குண்டு அளவு மாவை நீக்கி விடலாம். இதை உள்ளங்கையில் வைத்து அழுத்தி கட்லெட் ஷேப்பிற்கு மாற்றி விடலாம். இதே போன்று அனைத்து மாவிலும் தயாரித்து எடுத்துக் கொள்ளவும். 

இதை இட்லி கொத்தில் அடுக்கி, இட்லி பாத்திரத்தில் வைத்து இட்லி அவிப்பது போல் அவித்து எடுத்துக் கொள்ளவும். 4-ல் இருந்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால் போதுமானது. இதை அப்படியே சாப்பிடலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றால் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குலோப் ஜாமுன் பொரிப்பது போல் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்தால் மொறு மொறுவென க்ரிஸ்பியாக இருக்கும். 

Published at : 20 Apr 2024 02:51 PM (IST) Tags: Wheat momos healthy momos momos procedure

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்

Breaking News LIVE: திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க - கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்

Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.

Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.

"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்

ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!

ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!