மேலும் அறிய
Advertisement
Green Coriander Rice:சிவப்பு அரிசியில் சுவையான கொத்தமல்லி சாதம்.. இந்த மாதிரி செய்யுங்க...சூப்பரா இருக்கும்...
சிவப்பு அரிசியை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
கொத்தமல்லி சாதம் சிவப்பு அரிசியில் தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமான உணவாகும். இதன் சுவையும் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ரெசிபியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் சிவப்பு அரிசி
- 1 பச்சை குடைமிளகாய் பெரியது
- 1 மீடியம் சைஸ் வெங்காயம்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 30 மிலி தயிர்
- 2 டீஸ்பூன் கொத்தமல்லி புதினா மற்றும் பச்சை மிளகாய் விழுது
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 2 வளைகுடா இலைகள்
- 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
- 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
- சுவைக்கேற்ப உப்பு
செய்முறை
1.அடிகனமான பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி சீரகம் சேர்க்க வேண்டும்.
2. விதைகள் வெடித்ததும், வளைகுடா இலைகளைச் சேர்த்து, மெதுவாகக் கிளறி, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
3. இப்போது பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி புதினா விழுது மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா நன்கு வெந்தவுடன், ஒரு நல்ல நறுமணம் வரும். இப்போது கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்த்துக் கிளற வேண்டும்.
4. 4-5 நிமிடங்கள் வெந்த பின் குடை மிளகாய் சேர்க்க வேண்டும். பின் அரிசி மற்றும் 1 1/2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்
5. பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, 15 நிமிடங்கள் அல்லது அரிசி வேகும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.
சிவப்பு அரிசியின் நன்மைகள்
சிவப்பு அரிசியில் “புரதம், நார்ச்சத்து, போன்ற வேதி கலவைகள் அதிகம் இருப்பதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே உடலை அதிகமாக வருத்திக்கொள்ளும் அளவிற்கு வேலை பார்ப்பவர்கள் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு இந்த அரிசியில் செய்யப்படும் உணவுகள் மிகவும் நல்லது.
விரைவில் உடல் எடை குறைக்க காலை உணவாக சிவப்பு அரிசி புட்டு, இடியப்பம் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடையை விரைவில் குறைக்க முடியும் என சொல்லப்படுகிறது.
குழந்தைகள் ஆரோக்கியம், நல்ல உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு சிவப்பு அரிசி மிகவும் உகந்தது என சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
மதுரை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion