Vinayagar Chathurthi 2022 : கொலஸ்ட்ரால் இருக்கா? கவலைய விடுங்க.. விநாயகர் சதுர்த்திக்கு டயட் பலகாரங்கள் இதோ..
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்துக்கள் இப்போதிருந்தே விநாயகர் சதுர்த்திக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்துக்கள் இப்போதிருந்தே விநாயகர் சதுர்த்திக்கு தயாராகி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு:
விநாயகர் சதுர்த்தி உலகில் பரவலாக வசிக்கும் இந்து மதத்தினரால் பெரும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக நமது வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது முழுமுதற் கடவுளான விநாயகர் ஒருவரே ஆகும். ஏனென்றால் விநாயகர் என்பவர் அனைவராலும் பெருமளவில் ஈர்க்கப்பட்ட கடவுளில் ஒரு கடவுள்.
நமது கிராமங்களில் விநாயகரை கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுபவர் நம்முடைய பிள்ளையார் தான் என்று அனைவராலும் சொல்லப்படுகின்ற ஒரு கடவுள் ஆவார். பிள்ளையார் மேல் உள்ள பாசத்திற்கும் பக்திக்கும் நமது ஊர்களில் பஞ்சமே இருக்காது. இத்தகைய எப்பொழுதும் இவ்வளவு பாசம் மற்றும் பக்தி உள்ள பிள்ளையாரின் உருவம் ஆனது ,நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும். இந்த நாளானது அவரது பிறந்த நாளாகும் கருதப்படுகிறது.
விநாயகர் தோற்றம் நிகழ்ந்த இன்றைய நாளில் நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்பது நம்முடைய நம்பிக்கை. விநாயகரை இப்படித் தான் கும்பிட வேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது. நாம் மனதார ஒருமுறை அவரின் பெயரை உச்சரித்தாலே அவர் மனம் நிறைந்து நம்முடன் வந்து விடுவார் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி பட்சணங்கள்
விநாயகர் சதுர்த்தி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கொழுக்கட்டை தான். மோதகம், கொழுக்கட்டை இல்லாத வீடே இருக்காது. இந்த விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொலஸ்ட்ரால் ஃப்ரீ இனிப்புகளை செய்து பார்க்கவும்.
சுரைக்காய் கீர்
என்னடா இது பெயரே வாயில் நுழையவில்லையே என்று யோசிக்காதீர்கள். செய்வது எளிதுதான். இது பாலில் செய்யும் இனிப்பு வகை.
தேவையான பொருட்கள்:
400 கிராம் சுரைக்காய்
1 டேபிள் ஸ்பூன் நெய்
15 முந்திரிப் பருப்பு
15 உலர் திராட்சை
150 கிராம் சீனி
1/2 லிட்டர் பால்
100 கிராம் சின்ன ஜவ்வரிசி
தேவைக்கு தண்ணீர்
5 ஏலக்காய்
சுரைக்காய் பாயாசம் செய்ய முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் 2. ஒரு சுரைக்காயை எடுத்து தோல் மற்றும் விதைகளை நீக்க வேண்டும் 3. மீதமுள்ள சுரைக்காயை நன்கு துருவி வைக்கவும் 4. கடாயில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும் சுரைக்காய் பாயாசம் செய்ய முதலில் ஜவ்வரிசியை தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும் 2. ஒரு சுரைக்காயை எடுத்து தோல் மற்றும் விதைகளை நீக்க வேண்டும் 3. மீதமுள்ள சுரைக்காயை நன்கு துருவி வைக்கவும் 4. கடாயில் நெய் ஊற்றி சூடேற்றிய பின்பு அதில் துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும் 5. பின்பு அதில் பாலை ஊற்றி கொத்திக்க விடவும். 6. அதன்பின்னர் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும்.
பழ யோகர்ட்
ஃப்ரூட் யோகர்ட் செய்வது எளிது. இது குடல்நலத்தைப் பேணும். ஐஸ்க்ரீம், கஸ்டர்டுக்கு மாற்றாக இருக்கும். புளிக்காத தயிரில் உலர்பழங்கள், கொட்டைகள் இனிப்புக்கு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து பரிமாறவும்.
ட்ரை ஃப்ரூட் கொழுக்கட்டை
மோதகம் செய்யும் முறையை அப்படியே பின்பற்றி அதில் கொஞ்சம் உலர்கொட்டைகளை அரைத்து நொறுக்கி வெள்ளப்பாகுடன் கலந்து சேர்த்து மோதகம் செய்தால் அதுதான் ட்ரைஃப்ரூட் மோதகம்.
சிறுதானிய லட்டு
குதிரைவாலி சிறுதானியத்தில் செய்யக்கூடியது இந்த மக்கானா லட்டு. இதில் வெல்லம், உலர் கொட்டைகள் சேர்த்து செய்தால் சுவையும் மனமும் அலாதியாக இருக்கும்.