Fruit Mixture: ஜில்லுனு ஆரோக்கியமான ஃப்ரூட் மிக்ஸர்! இப்படி செய்து கொடுத்து அசத்துங்க!
வெயிலுக்கு இதமாக ஜில்லுனு ஒரு ஃப்ரூட் மிக்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பழங்கள் - உங்களுக்கு வேண்டிய அளவில்
நன்னாரி சர்பத் - தேவையான அளவு
சர்க்கரை -தேவையான அளவு
செய்முறை
ஒரு அகலமான கிண்ணம் எடுத்துக் கொள்ளவும், ரஸ்தாளி அல்லது பூவன் பழத்தை இரண்டு எடுத்து இதை கிண்ணத்தில் வெட்டி சேர்த்து நன்றாக மசித்து விட்டுக் கொள்ள வேண்டும். ஒரு ஆப்பிளை எடுத்து அதன் தோல் நீக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். ஒரு மாதுளையின் முத்துக்களை இதனுடன் சேர்த்து லேசாக மசித்து விட வேண்டும்.
தோல் நீக்கிய ஒரு கப் மாம்பழத்தை சேர்த்து லேசாக மசித்து விட வேண்டும். ஒரு கப் நறுக்கிய தர்பூசணி சேர்த்து மசித்து விட வேண்டும். நன்னாரி சர்பத் இரண்டரை ஸ்பூன் அளவு சேர்க்கவும். உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சில ஐஸ் ஸ்கியூப்களை சேர்த்து மிக்ஸ் செய்து விடவும். அவ்வளவு தான் ஃப்ரூட் மிக்சர் தற்போது பரிமாற தயாராக உள்ளது. இந்த ஃப்ரூட் மிக்ஸ் தயாரிக்க நீங்கள் உங்களுக்கு வேண்டிய எந்த ஃப்ரூட்டை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு ஃப்ரூட் மிக்ஸரை இந்த முறையில் செய்ய சிரமமாக இருந்தால், உங்களிடம் இருக்கும் நான்கைந்து பழங்கலை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் உங்கள் இனிப்புக்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அனைத்து பழங்களும் ஒன்றும் பாதியுமாக மசிவது போல் மசித்து விட்டுக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் சிறிது நன்னாரி சர்பத் சேர்த்து ஐஸ் கியூப்ஸ் சேர்த்து கலந்து விட்டு பரிமாறலாம். ஐஸ் கியூப்ஸ் இல்லையென்றால் சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பின் பரிமாறலாம். இது வெயிலுக்கு இதமாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும்.
மேலும் படிக்க:
One-Pot Pasta Recipe: ஸ்நாக்ஸ் க்ரேவிங்கா? ஒன் பாட் பாஸ்தா ரெசிபி இதோ!