News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

House Hold Tips: அரிசியில் உள்ள புழு, பூச்சி நீங்க... சூடான இட்லி தட்டிலிருந்து ஒட்டாமல் எடுக்க: பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!

அரிசியில் பிடித்த புழு, பூச்சி நீங்கவும், சூடான இட்லி தட்டில் இருந்து ஒட்டாமல் இட்லியை எடுக்கவும் எளிய டிப்ஸ்

FOLLOW US: 
Share:

இட்லி தட்டில் ஒட்டாமல் இட்லியை எடுக்க டிப்ஸ்

இட்லியை அடுப்பில் இருந்து இறக்கிய உடன் இட்லி தட்டில் இருந்து இட்லியை எடுத்தால் அது முழுதாக வராது. இட்லி தட்டில் பாதி ஒட்டிக் கொண்டு வரும். இதனால் நாம் அவசரத்திற்கு இட்லியை எடுக்க முடியாது. இனி நீங்கள் இட்லி தட்டின் சூடு போகும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இட்லி வெந்ததும் இட்லி தட்டை ஒரு துணி பிடித்து இறக்கி அதை சிங்கின் அருகே கொண்டு செல்லவும். இட்லி தட்டின் அடிபாகத்தில் தண்ணீரை ஊற்றவும். இப்படி ஒரு 30 நொடிகள் செய்ய வேண்டும். இப்போது இட்லி தட்டில் உள்ள சூடு நீங்கி விடும். இப்போது இட்லியை எடுத்தால் இட்லி தட்டில் ஒட்டாமல் வரும். 

அரிசியில் பிடித்த புழு, பூச்சி வெளியேற 

அரிசியில் பூச்சி வண்டு வந்து விட்டால் அதை சுத்தம் செய்ய நீண்ட நேரம் எடுக்கும். இந்த டிப்ஸை பயன்படுத்தி அரிசியில் உள்ள பூச்சி, வண்டுகளை எளிதில் நீக்கலாம். அதற்கு தோல் நீக்காத மூன்று பூண்டு பற்களை எடுத்து, கத்தியை கொண்டு அதன் நடுவில் ஆழமாக கீறி விட வேண்டும். இப்போது கீறிய இடுக்கில் சிறிது காபி தூளை திணிக்கவும். இப்போது பூச்சி பிடித்த அரிசியை ஒரு தட்டில் பரப்பி விட்டு அதன் நடுவில் இந்த பூண்டு பற்களை வைக்கவும். இப்போது இந்த தட்டை மற்றொரு தட்டால் சற்று இடைவெளி விட்டு மூடி விடவும். இப்படி வைத்தால் அரிசியில் உள்ள வண்டு பூச்சி எல்லாம் அரியில் இருந்து வெளியேறி விடும். மீண்டு அந்த அரிசியை கழுவி விட்டு நீங்கள் பயன்படுத்தலாம். 

குங்குமம் கட்டிப்படாமல் இருக்க டிப்ஸ்

நம் வீட்டில் பூஜைக்காகவும், நெற்றியில் வைக்கவும் குங்குமத்தை பயன்படுத்துவோம். இந்த குங்குமத்தை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருந்தால் அந்த குங்குமம் கட்டிப்பட்டு விடும், மேலும் குங்குமத்தின் நிறம் மாறிவிடும். இப்படி ஆகாமல் இருக்க, ஒரு சிறிய கற்பூரத்தை தூளாக்கி அதை குங்குமத்துடன் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இந்த குங்குமத்தை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இருக்கமாக மூடி வைக்க வேண்டும். இப்படி வைத்தால் குங்குமம் நீண்ட நாட்கள் கட்டிப்படாமல் இருப்பதுடன் அதன் நிறமும் மாறாமல் இருக்கும். 

Published at : 17 Apr 2024 09:02 PM (IST) Tags: house hold tips rid of worms rice take idli hot without sticking take idli

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம்.. தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி சம்பவம்.. தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் உண்ணாவிரதம்

AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!

AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!

Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்

Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்

Indian 2: இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Indian 2: இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!