உப்புசமா?.. ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் 5 பானங்கள் இதோ..
உணவுக்குப் பின்னர் உப்புசமாக இருந்தால் ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் இந்த பானங்களை எடுத்துக் கொள்வோம்.
உணவுக்குப் பின்னர் உப்புசமாக இருந்தால் ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் இந்த பானங்களை எடுத்துக் கொள்வோம்.
வயிறு உப்புசம் என்றால் என்ன?
சிலர் இப்படி புலம்புவதைக் கேட்டிருப்போம். `வயிறு கல் மாதிரி இருக்கு, பசி எடுக்குறதே இல்லை, சரியா சாப்பிடவும் முடியலை...’ இதுதான் உப்புசத்தின் அறிகுறி. எதுவும் சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு வயிறு உப்புதல் என்பது அடிக்கடி நிகழும் பிரச்னை. சிலருக்கு, கடுமையான வயிற்றுவலியும் சேர்ந்து படுத்தி எடுத்துவிடும்.
இந்த உப்புசத்தை சரி செய்ய டயட்டீசியன் மன்ப்ரீத் கல்ரா 5 விதமான கசாயங்களை அதிலும் வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய கஷாயங்களைப் பற்றி விளக்கமாக செய்முறையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை அவ்வப்போது செய்து கொள்ளலாம். வெளியில் செல்லும்போதும் எடுத்துச் செல்லலாம்.
1. சீரகம், ஓமம் தண்ணீர் (Jeera and Ajwain Water)
சீரகம் மற்றும் ஓமத்தில் ஜீரணத்திற்கு தேவையான என்சைம்கள் இருக்கின்றன. இந்த கசாயத்தில் வயிறு உப்புசத்தைக் குறைக்கும் தன்மை இருக்கின்றது. இது அசிடிட்டியையும் சரி செய்கிறது என்று மன்ப்ரீத் கூறுகிறார்.
செய்முறை: கால் டீஸ்பூன் சீரனம், கால் டீஸ்பூன் ஓமம் எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான நீரில் போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து பயன்படுத்தலாம்.
2. சோம்பு தண்ணீர் ( Fennel Water )
சோம்பு தண்ணீரில் தைமால் இருக்கின்றது. இது ஜீரணத்திற்கான தேவையான என்சைம்களை உருவாக்குகிறது. சோம்பு ஜீரண மண்டலத்தில் உள்ள அழற்சியைப் போக்கும்.
செய்முறை: கால் டீஸ்பூன் சோமை எடுத்து நன்றாக அரைத்து பவுடராக்கி அதை ஒரு கோப்பை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து அருந்தினால் உடனடியாக அதன் பலன் தெரியும்.
3. லெமன் வாட்டர் (Lemon Water with Rock Salt)
ராக் சால்ட் சேர்த்த லெமன் வாட்டர் அருந்தலாம். இதில் உள்ள சிட்ரிக் அமிலம் ஜீரண என்சைம்களை உருவாக்கும். மேலும் உடலில் அல்கலைன் எனப்படும் காரத்தன்மையைத் தூண்டும். இதனால் உப்புசம் நீங்கும். ராக் சால்ட் எனப்படும் உப்பு வகை குடல் அழற்சியை போக்கும். வயிற்று வலியையும் தீர்க்கும்.
4. ஆப்பிள் செடார் வினிகர் (Apple Cider Vinegar with Water)
ஆப்பிள் செடார் வினிகர் வயிற்றின் பிஹெச் (pH) மதிப்பீட்டை பேணும். ஆனால் ஆப்பிள் செடார் வினிகரை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் வேறு சில உபாதைகள் ஏற்படலாம். அதனால் உங்களின் மருத்துவர் அறிவுரையோடு ஆப்பிள் செடார் வினிகர் வித் வாட்டரை பயன்படுத்தலாம்.
செய்முறை: ஆப்பிள் செடார் வினிகர் மார்க்கெட்டில் ரெடிமேடாகக் கிடைக்கும். அதை வாங்கி ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
5.மின்ஸ்ட் மின்ட் லீவ்ஸ் கசாயம் (Minced Mint Leaves)
புதினா சாறு கொண்ட இந்த கசாயம் பைல் எனப்படும் கல்லீரல் நீர் சுழற்சியை சீராக்கும்.
செய்முறை: சில புதினா இலைகளை நன்றாக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதை ஒரு டம்ப்ளர் வெதுவெதுப்பான நீரில் போட்டுவைத்து சிறிது நேரம் கழித்துப் பருகலாம்.
View this post on Instagram