Coffee : காபிக்கும், உடல் எடை அதிகரிப்புக்கும் தொடர்பு இருக்கா? இதை உடனே படிங்க பாஸ்..
தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி இப்படி பல நேரங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபி தான். உலகம் முழுவதுமே காபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது.
தலைவலி, டென்ஷன், சந்தோஷன், திடீர் பசி இப்படி பல நேரங்களில் மனிதர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது காபிதான். உலகம் முழுவதுமே காபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது.
ஆனால் அடிக்கடி காபி குடித்தால் பித்தம் வரும், காபி குடித்தால் தலை நரைக்கும், உடல் எடை கூடும் என பல்வேறு பக்க விளைவுகளும் அடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காபியில் இருக்கும் கஃபைன் எனும் வேதிப்பொருள் பின்னால் ஆயிரமாயிரம் விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
உண்மையில் காபி குடித்தால் உடல் எடை கூடுமா? வாருங்கள் பார்ப்போம். உண்மையில் காபி குடிப்பதால் எடை கூடாது ஆனால் காபியை பதப்படுத்தி அதிக இனிப்புடன் ஒரு Complex ட்ரிங்காக அருந்தும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாம்.
ஒரு கப் ப்ளாக் காபி அல்லது அதில் கொஞ்சம் பால் சேர்த்த காபி என்றால் அதில் உள்ள நன்மைகளை உடல் சீக்கிரம் கிரஹித்துக் கொள்ளுமாம். ஆனால் நீங்கள் இரவில் ஒரு கப் ஜாவா காபி குடித்தால் அது தவறுதான் எனக் கூறுகின்றனர் நிபுணர்கள். ஃப்ராபுசினோஸ், லட்டேஸ், விப்ட் க்ரீம் ஆகியனவற்றை அருந்தினாலும் இதே விளைவுதானாம். பட்டியல் இன்னும் இருக்கிறது கேண்டி கேன்ஸ், பெப்பர்மின்ட் மோச்சா, பம்ப்கின் சிரப்ஸ் ஆகியனவும் உங்கள் உடல் எடையை அதிகரிக்குமாம்.
அதாவது காபியில் தேங்காய் எண்ணெய், வெண்ணெய், எம்சிடி ஆயில் ஆகியனவற்றை சேர்த்து அருந்துவது கீட்டோ மற்றும் பேலியோ டயட் பின்பற்றுவோர் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இவற்றை அளவாக அருந்தாவிட்டால் உடல் எடை அதிகமாகும்.
ஹை கேலரி ஸ்வீட், ஃபேட்டி காபி ஆகியன ஆரோக்கியமான உணவிற்கு ஈடாகவே ஆகாது. இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும் இது போன்ற பானங்களை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படும்.
ஆனால் நாம் முன்னோர்கள் சொன்னது போல் அளவுக்கு மிஞ்சினால் தான் நஞ்சு. ஏதோ ஒரு நாள் அத்தி பூத்தது போல் நீங்கள் உங்கள் காபியில் க்ரீம் சேர்த்து அருந்தினால் அதனால் எந்த ஆபத்தும் இல்லை. அதுவே அடிக்கடி அருந்த ஆரம்பித்தால் உடல் எடை கூடுவது நிச்சயம்.
காபியை ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு மாதிரி பருகிறார்கள். அதை அறிந்துகொள்வதும் ஒரு சுவாரஸ்யம்தான்.
- இத்தாலி நாட்டில் காபி குடிப்பதை பூஜையைப்போல் செய்கின்றனர். காப்பசினோவை ஒரு போதும் இரவில் அருந்த மாட்டார்கள். காலை முதல் மாலை வரை தான் அங்கு காப்பசினோ அருந்தப்படுகிறது. இல்லாவிட்டால் பகல் பொழுதில் எஸ்ப்ரஸோ அருந்துகின்றனர்.
- துருக்கி நாட்டில் காபிக்கு ஒரு கவிதையே வைத்துள்ளனர். ஒரு கோப்பை காபி நரகத்தைப் போல் கருமையாக, சாவைப் போல் கடினமாக, காதலைப் போல் இனிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். துருக்கியர்கள். அவர்கள் காபியை வெண்கலப் பாத்திரத்தில் தயாரிக்கிறார்கள்.
- ஆப்பிரிக்காவின் எதியோபியா தான் காபியின் தாய்நாடு. அராபிகா என்ற செடியில் இருந்து தான் காபி கொட்டைகள் எடுக்கின்றனர். அங்கே ஜெபேனா எனப்படும் மண் குவளையில் தான் காபியை தயாரிக்கின்றனர்.
- மெக்சிகோவில் காபியை களிமண் கோப்பையில் தயாரிக்கின்றனர். காபியை காலையில் எழுந்தவுடன் மட்டுமல்ல தூங்கும் முன்னரும் குடிக்கின்றனர்.
- அயர்லாந்து நாட்டில் காபியை ஆல்கஹாலுடன் சேர்த்து குடிக்கின்றனர். சூடான காபியில் கொஞ்சம் விஸ்கி, சர்க்கரை, விப்ட் க்ரீம் சேர்த்து அருந்துகின்றனர். 1940களில் தான் இந்த முறையை பழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
- ஆசிய நாடான வியட்நாம் மக்கள் நாள்தோறும் காபி அருந்துகின்றனர். காலை, மதியம் என்றெல்லாம் அவர்களுக்குக் கணக்கில்லை. அலுமினியம் அல்லது ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் காபியை அவர்கள் செய்கின்றனர். ரோபஸ்டா காபி பீன்ஸைத் தான் பயன்படுத்துகின்றனர்.
அடேங்கப்பா காபிக்கு இத்தனை சுவையான பின்னணியா என்று வியக்கவைக்கிறது அல்லவா?
காபி... ஸ்வீட் காபி.. <3