Spicy Food : காரசாரமான உணவுதான் என் ஃபேவரைட் என்கிறீர்களா? அப்போ இதைப் படிங்க முதல்ல..
எனக்கு காரசாரமான உணவுதான் பிடிக்கும் எனக் கூறுகிறீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
எனக்கு காரசாரமான உணவுதான் பிடிக்கும் எனக் கூறுகிறீர்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
காரமாக சாப்பிடும்போது அது நமது வயிற்றின் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதை நாம் அறிவதில்லை. இதனால் நமது வயிற்றுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?
ஆம். காரசாரமான உணவை அடிக்கடி அதிகப்படியாக சாப்பிட்டால் அதனால் உடலில் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மிளகாயில் கபாசிஸின் என்ற மூலப் பொருள் உள்ளது. இது நாவில் உள்ள சுவையுணர்வை தூண்டுகிறது. அதனால் காரசார உணவு மீது ஈர்ப்பு வருகிறது. அது மட்டுமல்லாமல் அதை சாப்பிட்டவும் தொண்டை எல்லாம் எரியும் தன்மை ஏற்படுகிறது. அதிகளவு காரம் சாப்பிடுவதால் இதய துடிப்பு அதிகரிக்கும். உடல் சூடு குறையும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.
அதிக காரமான உணவை சாப்பிடுவதால் வயிற்றில் அமில சுரப்பு அதிகரிக்கும். கபாசிஸின் என்ற மூலப் பொருள் காஸ்ட்ரின் ஹார்மோன் சுரப்பதை அதிகரிக்கும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பதும் அதிகரிக்கும். இதன் காரணமாக நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ், இன்னும் பிற கேஸ்ட்ரோ இண்டஸ்டினல் தொந்தரவுகள் ஏற்படும்.
பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மிளகாய்தூள், கருப்பு மிளகு உள்பட காரமான மசாலா பொருட்களை கொண்டுதான் இந்திய உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன. அவை உணவுக்கு ருசி சேர்த்தாலும் மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறது அந்த ஆய்வு.
தொடர்ந்து உணவில் காரத்தின் தன்மை அதிகரிக்கும்போது நினைவுத்திறன் பாதிப்பு, சிந்தனை திறன் குறைதல், அல்சைமர் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதிலும் வயதானவர் களுக்கு பாதிப்பின் தன்மை அதிகமாக இருக்கும்.
மிளகாயில் உள்ளடங்கி இருக்கும் கேப்சைஸின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் தன்மை கொண்டது. கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. எனினும் அதிகம் பயன்படுத்தக்கூடாது என்பதை ஆய்வு முடிவு சுட்டிக்காட்டுகிறது.
அதிக மசாலா உணவுகளை உட்கொள்வது, உணர்திறன் மியூகோசல் புறணி அல்லது சிறு குடலில், டூடெனினம் எனப்படும் அல்லது சில நேரங்களில் உணவுக்குழாயில் கூட புண்களை மோசமாக்கும். இந்த புண்கள் மிகவும் வேதனையை ஏற்படுத்தும். மேலும் வயிற்று வலி, குமட்டல், வாந்தி மற்றும் எடை இழப்பை ஏற்படுத்துகின்றன.
வயிற்றைக் கட்டுப்படுத்தும் சவ்வு இரைப்பை சளிச்சுரப்பியின் வீக்கத்தால் இரைப்பை அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் அவ்வப்போது அஜீரணத்தால் ஏற்படும் இரைப்பை அழற்சியை அனுபவிக்கின்றனர். கடுமையான இரைப்பை அழற்சியில் வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தலைவலி மற்றும் மலம் மற்றும் வாந்தியில் இரத்தத்துடன் அறிகுறிகள் இருக்கலாம்.
கார உணவுகளை குறைந்த அளவு சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.