![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ஃபுட் பாய்சன் என எங்க பேர சொல்லி சிக் லீவ் எடுக்காதீங்க… திங்கள் விடுமுறை குறித்து சொமேட்டோ வெளியிட்ட பதிவு வைரல்!
உடல் நிலை சரியில்லாமல் போனதாக கூறும் காரணங்களிலேயே, விடுப்பு கொடுப்பவர்களால் தவிர்க்கவே முடியாத காரணம் வயிற்றுப் பிரச்சினைகள் தான். அதனால் உலகெங்கிலும் அதிகம் பயன்படுத்தும் காரணமாக அது உள்ளது.
![ஃபுட் பாய்சன் என எங்க பேர சொல்லி சிக் லீவ் எடுக்காதீங்க… திங்கள் விடுமுறை குறித்து சொமேட்டோ வெளியிட்ட பதிவு வைரல்! Do not take sick leave in the name of food poisoning from Zomato post about Monday leave has gone viral ஃபுட் பாய்சன் என எங்க பேர சொல்லி சிக் லீவ் எடுக்காதீங்க… திங்கள் விடுமுறை குறித்து சொமேட்டோ வெளியிட்ட பதிவு வைரல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/15/d8f06e432026360fbb3cb3a28d44a5e01692087918715109_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொதுவாகவே செவ்வாய் அன்றோ, வியாழன் அன்றோ அரசு விடுமுறை வந்தால் வேலை செய்பவர்கள் சிந்திப்பது இடையில் உள்ள வெள்ளியோ, திங்களோ விடுப்பு எடுத்து விடுமுறையை நான்கு நாட்களாக மாற்றலாம் என்பதுதான். அதன் மூலம் சொந்த ஊருக்கோ அல்லது வேறு எதோ செயலுக்கோ நேரம் ஒதுக்கலாம் என்பது பாரம்பரியமாக செய்யபட்டு வரும் நடைமுறை. சில நிறுவனங்களில் மிக ஸ்ட்ரிக்ட்டாக அந்த ஒரு தினம் மட்டும் விடுப்பு எடுக்க கூடாது என்று கூறி விடுவார்கள். ஆனாலும் சிலர் முன் கூட்டியே விடுப்பு எடுக்காமல், அந்த தினத்தன்று காலையில் உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பு எடுப்பார்கள். அந்த விஷயத்தை வைத்து தங்களது ஆப்-இன் புரோமோஷனுக்கு மைலேஜ் தேற்றி உள்ளது உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ!
guys mummy kasam hai please don't use food poisoning from zomato as an excuse for taking sick leave on monday
— zomato (@zomato) August 11, 2023
திங்கடகிழமை விடுப்பு
இந்த ஆண்டு சுதந்திர தினம், (ஆகஸ்ட் 15, 2023) செவ்வாய்கிழமையான இன்று வந்துள்ளது. எனவே, நேற்று (ஆகஸ்ட் 14) திங்கட்கிழமை ஆகும். முந்தைய தினம் ஞாயிறு என்பதால் பலரும் இந்த திங்கள் விடுப்பு எடுத்திருக்க வாய்ப்புகள் உள்ளன. உடல்நிலை சரியில்லை என்பது பொதுவான விடுப்பு காரணங்களில் ஒன்று. அதுபோக அந்தந்த விடுப்புகளுக்கு வித்தியாசமான காரணங்கள் பல கண்டுபிடித்து கூறுவார்கள். ஆனால் உடல் நிலை சரியில்லாமல் போனதாக கூறும் காரணங்களிலேயே, விடுப்பு கொடுப்பவர்களால் தவிர்க்கவே முடியாத காரணம் வயிற்றுப் பிரச்சினைகள் தான். அதனால் உலகெங்கிலும் அதிகம் பயன்படுத்தும் காரணமாக அது உள்ளது.
விளம்பரத்திற்கு பயன்படுத்திய சொமேட்டோ
இதனை சம்பந்தப்படுத்தி சொமேட்டோ தங்கள் நிறுவனத்தை புரோமொட் செய்யும் விதமாக ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுமுறை எடுக்கத் திட்டமிட்டு இருந்தவர்களை நோக்கி ஒரு செய்தியை வெளியிட்டது. அந்த வயிற்றுப் பிரச்சனைக்கு சொமேட்டோவில் ஆர்டர் செய்த உணவுதான் காரணம் என யாரும் சொல்லி விடாதீர்கள் என்றும், அதைக் கூறி யாரும் லீவ் எடுக்காதீர்கள் என்றும் ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளது.
what’s your excuse? pic.twitter.com/iH2BHejqbG
— Swiggy (@Swiggy) August 11, 2023
வைரலான 'சிக் லீவ்' கான்செப்ட்
இந்த பதிவு 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது. அதோடு நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளது. திங்கள்கிழமை 'சிக் லீவ்' எடுக்கும் சம்மந்தமான இந்த பதிவு, இணைய பயனர்களிடையே வைரல் ஆனது. இது குறித்து பல ட்விட்டர் பயனர்கள் தங்களின் பதில்கள், மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகளை வெளியிட்டு சிலாகித்தார்கள். Zomato மட்டுமின்றி Swiggy, Pizza Hut போன்ற பல உணவுப் பிராண்டுகளும் இந்த டிரெண்டிங் தலைப்பில் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டன. Swiggy வேறு என்ன காரணங்கள் எல்லாம் கூறலாம் என்று ஐடியா கொடுக்கும் விதமாக பல விஷயங்களை பட்டியலிட்டு ஒரு பதிவை வெளியிட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)