கஃபே ஸ்டைலில் நுரை பொங்க காபி...வீட்டிலேயே செய்வது எப்படி?
நுரைபொங்க ஒரு காஃபி வேண்டும் என்றால் இந்த செய்முறை நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
நாம் அனைவரும் காபியை விரும்புகிறோம், ஆனால் நம் அனைவராலும் வீட்டிலேயே சரியான கப் காபியை உருவாக்க முடியாது. உங்களுக்கு காபி தேவைப்படும் ஒவ்வொரு முறையும் வெளியே செல்வதற்கு பதிலாக அல்லது ஆர்டர் செய்வதற்குப் பதிலாக, சுவையான காபியை உருவாக்க சில ஈசி குறிப்புகள் ஆன்லைனில் கிடைக்கப்பெறுகின்றன. வீட்டிலேயே கஃபே பாணியில் கப்புசினோ போன்றவற்றைத் தயாரிக்கலாம் என்றால் அதே போன்ற நுரை பொங்க வருவதே இல்லை. அப்படியான நுரைபொங்க ஒரு காஃபி வேண்டும் என்றால் இந்த செய்முறை நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
வீட்டிலேயே நுரைத்த காபியை எளிதாக தயாரிப்பதற்கான செய்முறையை நிபுணர் பங்கஜ் பதூரியா தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..
View this post on Instagram
Frothy Cappuccino Recipe I கஃபே-ஸ்டைல் காபி செய்வது எப்படி: 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் காபி பவுடர் எடுத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி இயந்திரத்தில் நன்றாக தூள் செய்ய கலக்கவும். மூன்று ஐஸ் கட்டிகளை சேர்த்து மீண்டும் அரைக்கவும். சில முறை சுற்றிய பிறகு, நிறுத்தி, மிக்ஸியின் பக்கங்களில் இருந்து காபியைத் துடைத்து, நுரை விழும் வரை மீண்டும் அரைக்கவும். இந்த மிக்ஸியில் அடித்த காபி பேஸ்ட்டை ஒரு கோப்பைக்கு மாற்றவும். அதன் மேல் சூடான பால் சேர்த்து நுரைத்த கப்புசினோவை பருகி மகிழுங்கள்.