மேலும் அறிய

Rain Alert:தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: 

1. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 
2. தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

02.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை,  தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
TN Weather:இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
Chennai Weather: சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
TN Weather:இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
Chennai Weather: சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
TN Weather: இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
"காலம் மாறும்! பதில் சொல்லத் தயாரா இருங்க" அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை கண்டனம்
Embed widget