News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Cauliflower 65: சைவப் பிரியர்களே! சிக்கன் 65க்கே டஃப் கொடுக்கும் காலிஃப்ளவர் 65 - எப்படி செய்வது?

ஞாயிற்றுக்கிழமையான இன்று அசைவ சுவையில் காலிஃப்ளவர் 65 எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தயிர் சாதத்துடன் ஊறுகாய், காராபூந்தி, சிப்ஸ் உள்ளிட்டவற்றை வைத்து சாப்பிட்டால் நல்ல காம்பினேஷனாக இருக்கும். இவற்றையெல்லாம் விட சுவையான ஒரு சைடிஷ்ச நீங்க ட்ரை பண்ணி பார்த்து இருக்கிங்களா?

காலிப்ளவர் பக்கோடா தயிர் சாதத்துக்கு ஒரு சூப்பர் காம்பினேஷனாக இருக்கும். தயிர் சாதத்துக்கு மேலும் சுவை கூட்ட காலி பிளவர் பக்கோடா உதவும். புலாவ் உடன் வைத்து சாப்பிடவும் காலிஃப்ளவர் 65 ஒரு நல்ல காம்பினேஷனாக இருக்கும்.  வாங்க காலிபிளவர் பக்கோடா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் - 1/2 கிலோ
மஞ்சள் - 1/2 டேபிள் ஸ்பூன்

ஊற வைக்க

கடலை மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன், மைதா - 1 1/2 டேபிள் ஸ்பூன், சோள மாவு - 1 1/2 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்,  சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. 

செய்முறை :

காலிஃப்ளவரை சுத்தம் செய்துவிட்டு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் காலிஃப்ளவர் , மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வர வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மைதா, சோள மாவு, கரம் மசாலா,  சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். பின் வேக வைத்த காலிஃப்ளவரை துண்டுகளாக்கி இந்த கலவையில் சேர்த்து  கலந்துகொள்ள வேண்டும்.

காலிஃப்ளவரில் மசாலா நன்கு இறங்க வேண்டும். 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் கடாய் வைத்து தேவையான அளவு  எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும் காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுவையான காலிபிளவர் 65 தயார். 

காலிஃப்ளவரின் பயன்கள் 

காலிஃப்ளவரில் பீட்டா- கரோட்டின், குவர்செட்டின், சின்னமிக் அமிலம், பீட்டா கிரிப்டோசேந்தின் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன.இவை ரத்தத்தில் பிராண வாயு கிரகிப்பதை அதிகரித்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதாக கூறப்படுகிறது.

மேலும் காலிபிளவரில் பியூரின் வேதிப்பொருள் அதிகம் இருக்கின்றன. உடலில் மூட்டுக்களில் வலி, வீக்கம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் காலிபிளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் அவர்களின் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணமாக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க 

தூதர்கள் வெளியேற்றம்; இந்தியா எடுத்த நடவடிக்கை - கனடாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு

Naanum Rowdy Dhaan: வெட்கப்பட்ட நயன், விக்னேஷ் சிவன்.. கலாய்த்த விஜய் சேதுபதி.. வைரலாகும் ஃப்ளாஷ்பேக் போட்டோ!

Published at : 22 Oct 2023 08:37 AM (IST) Tags: cauliflower recipe cauliflower 65 side dish curd rice

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை

Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை

சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!

சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!

மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?

Indian 2 Trailer Review: