News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Carrot Cake: கேரட் கேக் பிடிக்குமா? செய்யுறது ரொம்ப ஈசி... வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்

சுவையான கேரட் கேக் வீட்டிலேயே மிக எளிமையாக செய்யலாம்.

FOLLOW US: 
Share:

கேக் என்றால் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும். அதன் சாஃப்டான, நாவில் வைத்தால் கரையும் அலாதி சுவையை யாருக்கு தான் பிடிக்காது. கேக்கில், சாக்கலேட் கேக், ஸ்ட்ராவ்பெர்ரி கேக், பாதாம் கேக், ப்ளம் கேக், வெல்வெட் கேக், ஆரஞ்சு கேக் போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கேக் பிடிக்கும். இந்த வரிசையில் கேரட் கேக் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாக இருக்கும். மிக எளிமையாக வீட்டிலேயே செய்து விடலாம். வாங்க கேரட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

மைதா - 3/4 கப், கோதுமை மாவு - 1/4 கப் , துருவிய கேரட் - 1/2 கப்,  ஆலிவ் ஆயில் - 1/4 கப், தயிர் - 3/4 கப் , பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன்,  சர்க்கரை - 1/2 கப்,  வெனிலா எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்,  ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்,  பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,  பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன் , உப்பு - 1/4 டீஸ்பூன்,  வால்நட்ஸ் - ஒரு கைப்பிடி அளவு.

செய்முறை

வால்நட்ஸை கொர கொரவென பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பவுலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து  சர்க்கரை கரையும் வரை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும்.

பின்பு அதில் ஏலக்காய் பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவு ஆகியவற்றை சேர்த்து, வால்நட்ஸை பொடித்து போட்டு, கட்டிப்படாதவாறு  நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை பரப்பி, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்ற வேண்டும்.

மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும் (வேக வைக்க வேண்டும்). அடுத்து கேக் நன்கு வெந்து விட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்க வேண்டும்.  டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5லிருந்து 10 நிமிடம் வரை  பேக் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான், சுவையான சாஃப்டான கேரட் கேக் தயார். 

மேலும் படிக்க

Chandrayaan-3 Rover: நாடே எதிர்பார்ப்பு..! -200 டிகிரி கடும் குளிர், இன்று மீண்டு வருமா சந்திரயான் 3-இன் பிரக்யான் ரோவர்?

Diwali Crackers: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு...உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி...ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க..!

Published at : 23 Sep 2023 05:35 PM (IST) Tags: carrot cake cake recipe Carrot Cake recipe

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி

Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்

Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?