Beetroot Idli Fry Recipe: ஹெல்தியான பீட்ரூட் இட்லி ஃப்ரை எளிதாக செய்யலாம் - இதோ ரெசிபி!
Beetroot Idli Fry Recipe: பீட்ரூட் இட்லி ஃப்ரை செய்வது எப்படி என்று காணலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்வது நல்லது என்கிறனர், ஊட்டச்சத்து நிபுணர்கள். பீட்ரூட் பலவகைகளில் உணவில் சேர்த்துகொள்ளலாம்.
பீட்ரூட் இட்லி ஃப்ரை:
நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக மிக்ஸில் அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். டயட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட் – கேரட் ஜூஸ் ஹெல்தியான காலை உணவு,் இல்லையெனில்,பகாலை உணவு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு இந்த ஜூஸை குடிக்கலாம். பீட்ரூட் ஜூஸ் செய்யும்போது அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்க்கலாம்.
மேலும் பீட்ரூட்- கேரட் ஜூஸில், நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் ஜூரணிக்க அதிக நேரம் எடுக்கும். அடிக்கடி பசியும் எடுக்காது என்பதால் உடல் எடை குறைக்கும். பயணத்தில் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1,வைட்டமின் பி2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது.
பீட்ரூட் தோசை, கேபாப், கட்லட், அடை என செய்யலாம். பீட்ரூட்டில் இட்லி செய்யவது பற்றி காணலாம்.
என்னென்ன தேவை?
இட்லி தயாரிக்க:
இட்லி அரிசி - 2 கப்
உளுந்து - 1 கப்
வெந்தயம் - 1/4 கப்
பீட்ரூட் - 2
இட்லி ஃப்ரை செய்ய:
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீ ஸ்பூன் (தேவையெனில்)
மிளகாய் தூள் - தேவையான அளவு
பெருங்காய தூள் - 1 டீ ஸ்பூன்
நெய் / எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
பீட்ரூட் இட்லி ஃப்ரை செய்ய அரிசி, உளுந்தை முதலில் ஊற வைக்க வேண்டும். அரிசி, உளுந்து இரண்டையும் நன்றாக சுத்தப்படுத்தி 6-7 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இதோடு சிறிதளவு வெந்தயம் ஊற வைக்க வேண்டும். இவற்றை நன்றாக இட்லி மாவு போல அரைத்து எடுக்க வேண்டும். 7 மணி நேரத்திற்கு பிறகு பீட்ரூட் அரைத்து இந்த மாவோடு சேர்க்க வேண்டும்.
இப்போது, 2-3 பீட்ரூட்டை நன்றாக தோல் நீக்கி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை இட்லி மாவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேவையெனில் தண்ணீர் சேர்த்துகொள்ளலாம். இப்போது இட்லி பானையில் இந்த மாவில் இட்லி ஊற்றி வைக்கவும். பீட்ரூட் இட்லி வெந்ததும் அதை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ரெடி:
அடுத்து, ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு, சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மஞ்சள் தூள், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், பெருங்காய தூள், உப்பு உள்ளிட்டவற்றை சேர்க்கவும். இந்த சமயத்தில், பீட்ரூட் இட்லி துண்டுகளை அதோடு சேர்த்து நன்றாக மொறுமொறுப்பான இருக்கும்வரை வதக்கவும். இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்தால் பீட்ரூட் இட்லி ஃப்ரை தயார். இதற்கு தேங்காய், வேர்க்கடலை சட்னி உடன் சாப்பிடலாம்.