News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

கோடை வெயிலை எதிர்கொள்ள குளு குளு சம்மர் ட்ரிங்ஸ்.. ரெசிபி இதோ..

கோடைக்காலம் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள கீழ் வரும் சம்மர் டிரிங்ஸை குடிக்கலாம்.

FOLLOW US: 
Share:

கோடைக்காலம் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள கீழ் வரும் சம்மர் டிரிங்ஸை குடிக்கலாம். 

கோடை வெயில் இன்னும் தொடங்கவில்லை ஆனால் வெயிலின் தாக்கம் என்பது அதிகமாகவே உள்ளது. சில தினங்களுக்கு முன் மழை பெய்து வந்தது, தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் பகல் நேரங்களில் கடுமையாக இருக்கிறது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் நேரத்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் வர வேண்டாம் என அறிவுருத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள கீழ் வரும் சம்மர் ட்ரிங்ஸை குடிக்கலாம். 

1. நுங்கு இளநீர்: 

கோடை என்றாலே நம் நினைவுக்கு வருவது இளநீரும் நுங்கும் தான். இளநீர், அதில் வரும் வழுக்கை, நுங்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். உடல் உஷ்ணத்தை தணிக்கும் என கூறுகின்றனர்.

2. தர்பூசணி மற்றும் லெமன்: 

கோடையில் பிரதானமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. வழக்கமான தர்பூசணி ஜூஸ் இல்லாமல், தர்பூசணி உடன் சிறிது லெமன் சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்கலாம். சுவை வித்தியாசமாக இருந்தாலும் புத்துணர்ச்சியளிக்கும் பாணம் இது.

3. நுங்கு ரோஸ் மில்க்: 

நன்கு சுண்டக்காய்சிய பால் ஆரவைத்து அதில் தேவையான அளவு சர்க்கரை, ரோஸ்மில்க் சேர்த்து, துண்டு துண்டாக நறுக்கிய நுங்கை சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைத்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். 

4. தர்பூசணி ரோஸ் மில்க்: 

பாலில் சர்க்கரை மற்றும் ரோஸ் மில்க்கை சேர்த்து பொடியாக நறுக்கிய தர்பூசணியை சேர்த்து குடிக்கலாம். வெளியே சென்று வருபவர்களுக்கு இதனை கொடுக்கலாம். 

5. மிண்ட் ஜூஸ்: 

லெமன், புதினா, சர்க்கரை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு ஜூஸ் போட்டு குடிக்கலாம். உடல் உஷ்னத்தை இது தணிக்கும். 

6. லெமன் ஜிஞ்சர் ஜூஸ்: 

லெமன், இஞ்சி, சர்க்கரை சேர்த்து தண்ணீர் அல்லது சோடா கலந்து குடிக்கலாம். வெயிலில் பலருக்கும் அஜீரன கோளாறு ஏற்படும். இந்த ஜூஸ் குடித்தால் அது சரியாகும். 

7. நன்னாரி இளநீர் சர்பத்: 

இளநீரில் தேவையான அளவு நன்னாரி சர்பத்தை சேர்த்து கலந்து, இளநீரில் இருக்கும் வழுக்கையை பொடியாக நறுக்கி போட்டு குடிக்கலாம். 

மேல் குறிப்பிட்ட சம்மர் ட்ரிங்ஸ் இந்த கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். மேலும் வெயிலில் இருந்து வரும்போது இந்த ஜூஸ்களை குடித்தால் உடல் சோர்வாக இருந்தாலும் புத்துணர்ச்சியை அளிக்கும் என கூறப்படுகிறது. 

Published at : 30 Mar 2023 11:26 AM (IST) Tags: summer Summer drinks refreshing drinks

தொடர்புடைய செய்திகள்

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

Karuveppilai Sadham : செம்மையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.. கருவேப்பிலை சாதம் செஞ்சு இப்படி கலக்குங்க..

Plantain Masala Fry: வீட்டில் பூஜையா? தயிர், சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா வாழை வறுவல்..

Plantain Masala Fry: வீட்டில் பூஜையா? தயிர், சாம்பார் சாதத்துக்கு ஏற்ற சுவையான மசாலா வாழை வறுவல்..

Pudding: 5 பொருட்கள் போதும்.. சுவையான புட்டிங் செய்யலாம்..செய்முறை இதோ..

Pudding: 5 பொருட்கள் போதும்.. சுவையான புட்டிங் செய்யலாம்..செய்முறை இதோ..

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

தின்ன தின்ன திகட்டாத திருநெல்வேலி சொதிக்கு ஈடேது மக்களே! வாங்க செஞ்சு அசத்துவோம்..!

டாப் நியூஸ்

Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்

Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்

TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?

TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?

GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!

GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!

Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..

Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..