டயாபட்டீஸ் பயமா? ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் கிச்சன் மூலிகைகள்!
இந்த மூலிகை சிகிச்சைகள் கணையத்தை வலுப்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
நீரிழிவு நோய், உடலின் இன்சுலின் மற்றும் ரத்த சர்க்கரை அளவில் முதன்மையாக பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு பொதுவான வாழ்க்கை முறை சார்ந்த நோய் இது.
கணையத்தால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலை அல்லது உடல் போதிய அளவு இன்சுலினை பயன்படுத்த முடியாத நிலையோ நீரிழிவு நோயால் ஏற்படுகிறது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுள் சுமார் 17.6 முதல் 28.9 சதவிகிதம் வரையிலான நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் உழைப்புச் சக்தி குறைவதற்கும், பொருளாதார சரிவுக்கும் இந்த நோயின் பாதிப்பு மறைமுக காரணமாக அமைகிறது.
நீரிழிவு நோய் மோசமான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தாலும் அதை எளிதாகவும் திறமையாகவும் கையாள முடியும்.
குறிப்பாக ஆயுர்வேத மருத்துவம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பல்வேறு மூலிகை சிகிச்சைகளை பரிந்துரைக்கிறது. இந்த மூலிகை சிகிச்சைகள் கணையத்தை வலுப்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உங்கள் சமையலறைகளில் எளிதில் கிடைக்கும் இந்த ஆயுர்வேத மூலிகைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.
திரிபலா:
திரிபலா இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பது உள்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது கணைய செயல்பாட்டை சீராக்க உதவி, இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது.
View this post on Instagram
வேம்பு:
வேப்ப இலையைக் கொண்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். வேப்ப இலைகளை நன்கு கசக்கி சாறெடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை வடிகட்டி டிகாஷனை எடுத்துக்கொள்ளவும்.
குளுக்கோஸால் ஏற்படும் ஹைப்பர் கிளைசீமியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மிகச் சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
நெல்லிக்காய்:
நெல்லிக்காய் தோல், முடி, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியான வைட்டமின் சி இதில் நிறைய இருப்பதால், நீரிழிவு நோய்க்கு ஆயுர்வேத மருத்துவர்கள் நெல்லிக்காயை பரிந்துரைக்கின்றனர்.
பாகற்காய் சாறு:
கசப்பான காய்கறி ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். உண்மையில், இந்த காய்கறி உடல் முழுவதுமாக குளுக்கோஸ் செலுத்தப்படுவதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இதன் மூலம் முக்கியமாக பலன் பெறலாம்.