மேலும் அறிய
Advertisement
Anti-Inflammatory spices: அழற்சி தொந்தரவா? இந்த மூலிகைகளும், மசாலாவும்தான் பெஸ்ட்.. உடனே படிங்க.. ஹெல்த்தை பாருங்க..
அன்றாட வாழ்வில் உங்களுக்கு ஏற்படும் அழற்சியை சில மசாலா பொருட்கள் அல்லது அழற்சி எதிர்ப்பு மூலிகை பொருட்களை உங்களின் தினசரி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் தீர்வு காணலாம்.
எண்ணெயில் வறுத்த அல்லது பொறித்த உணவு, சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவு அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பதன் மூலம் சிலருக்கு அஜீரண கோளாறு, குடல் வீக்கம், குடல் எரிச்சல், மலசிக்கல், போன்ற பிரச்சனைகள் வரலாம். இது நாள்பட்ட பிரச்சனையாக இருந்தால் தைராய்டு பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அல்லது ஹார்மோன் கோளாறுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. அழற்சி சில சமயங்களில் உள்ளிருக்கும் நோய் எதிர்ப்பு கோளாறுகளையும் பாதித்து முடக்குவாதம் போன்ற பிரச்சனையில் தள்ளி விடும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உங்களின் அன்றாட உணவில் சில மூலிகை மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள்.
மஞ்சள் & மிளகு :
இந்திய உணவுகளில் இது இன்றியமையாதது. இதில் இருக்கும் குர்குமின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் கருப்பு மிளகில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் இரண்டும் சேர்த்து உங்களின் குடலை பாதுகாக்கும். இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வாகும்.
ஏலக்காய் & இலவங்கப்பட்டை :
இதில் உள்ள நறுமணம் மற்றும் இனிப்பு சுவை அழற்சியை குறைக்கும். மேலும் கல்லீரல் கொழுப்பையும் கட்டுப்படுத்தும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இலவங்கப்பட்டை பயன்படுத்திவதன் மூலம் வீக்கத்தை குறைக்க முடியும். இருப்பினும் இதை சிறிதளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இஞ்சி & பூண்டு:
இஞ்சி & பூண்டு:
சமையலில் இஞ்சியை சேர்ப்பதை தவிர பல மருத்துவ குணங்கள் அதில் உள்ளன. சளி, ஒற்றை தலைவலி, மூட்டு வலி, வீக்கம், குமட்டல், உயர் ரத்த அழுத்த, மாதவிடாய் பிடிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாகும் இஞ்சி. பூண்டும் பாரம்பரியமாக மருத்துவ குணங்களுக்கு பயன்பட்டு வருகிறது. இருமல், கீல்வாதம், மலசிக்கல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. பூண்டில் அதிக அளவிலான சல்பர் கலவைகள் இருப்பதால் அவை அழற்சியை எதிர்த்து சரிசெய்யும்.
வெந்தயம்:
மலசிக்கல், வயறு உப்புசம், மூட்டு வலி மற்றும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுத்தப்படும். வெந்தயத்தை சேர்த்த சூடுநீரில் நீராவி எடுப்பதன் மூலம் சுவாச குழாயில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
ஓமம் :
ஓமம் :
உணவின் சுவையை கூட்டுவதற்காக பயன்படும் ஓமத்தில் அழற்சியை எதிர்த்து போராடும் தன்மையும் ஆன்டி மைக்ரோபியல் தன்மையும் இருப்பதால் முடக்கு வாதத்திற்கு சிகிச்சை அளிக்கும்.
ரோஸ்மேரி & கிரீன் டீ :
ரோஸ்மேரியில் உள்ள பாலிபினால்கள் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டன. கிரீன் டீ அழற்சி குடல் நோய்கள், ஈறு நோய்கள் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி போன்றவற்றை குறைக்க உதவும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion