News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

அதிகப்படியான உப்பு உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் அபாயம்.. எச்சரிக்கை ரிப்போர்ட் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு..

அதிகப்படியான சோடியம் உட்கொள்வது உலகளவில் இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய பங்கு வகிக்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

FOLLOW US: 
Share:

அதிகப்படியான சோடியம் உட்கொள்வது உலகளவில் இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய பங்கு வகிக்கிறது என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சோடியம் உட்கொள்வதை மக்கள் குறைப்பது பற்றிய அதன் முதல் அறிக்கையில் WHO இவ்வாறு கூறியுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்குள் சோடியம் உட்கொள்வது 30 சதவீதம் மக்கள் குறைக்க வேண்டும் என்ற இலக்கை உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியது.  சோடியம் உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும், ஆனால் அதன் அதிகப்படியான அளவு இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறு வயதில் மரணம் ஆகியவற்றினை  அதிகரிக்கும். table salt சோடியத்திற்கான (சோடியம் குளோரைடு) முக்கிய ஆதாரமாக இருக்கிறது.  WHO இன் உலகளாவிய அறிக்கையின்படி,  (cost effective sodium) சோடியததின் அளவை மக்கள் குறைத்துக்கொண்டால் சுமார் 7 மில்லியன் உயிர்களை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேசில், சிலி, செக் குடியரசு, லிதுவேனியா, மலேசியா, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் மட்டுமே இந்த கொள்கையை தீவிரமாக பின்பற்றும் சூழல் உள்ளதாக கூறியுள்ளது.  

உலக  சுகாதார அமைப்பானது ஒருவர் உட்கொள்ளும் உப்பின் அளவு என்பது 5 கிராமாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் இது 10.8 கிராமாக உள்ளது என தெரிவித்துள்ளது.  WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸின் கூற்றுப்படி ”ஆரோக்கியமற்ற உணவு முறைகள் உலகளவில் மக்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்க முக்கிய காரணியாக உள்ளது. குறிப்பாக மக்கள் அதிக அளவு சோடியம் உட்கொள்வதால்  அதிக நோய் ஏற்படுகிறது எனவே மக்களுக்கு நோய் ஏற்படுத்துவதற்க்கு முக்கிய பங்கு சோடியத்திற்கு உள்ளது. பெரும்பாலான நாடுகள் சோடியம் குறைப்புக் கொள்கைகளை இன்னும் கடைப்பிடிக்கவில்லை, இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் மக்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. WHO அனைத்து நாடுகளுக்கும் சோடியம் குறைப்புக்கான 'Best Buys' ஐ செயல்படுத்துமாறும், உணவில் உள்ள சோடியம் உள்ளடக்கத்திற்கான WHO அளவுகோல்களை செயல்படுத்த உற்பத்தியாளர்களுக்கும் கோரிக்கை முன்வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

சுகாதார நிறுவனத்தின் நான்கு 'Best Buys' (குறைந்த சோடியம் உள்ள உணவை தேர்ந்தெடுக்கும் முறை) பரிந்துரை செய்துள்ளது:

 1. உப்பைக் குறைக்கும் வகையில் உணவுகளை மறுசீரமைத்தல் மற்றும் உணவு மற்றும் உணவில் உள்ள சோடியத்தின் அளவுக்கான இலக்குகளை நிர்ணயித்தல்

2. மருத்துவமனைகள், பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் போன்ற பொது நிறுவனங்களில் உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்த பொது உணவு கொள்முதல் கொள்கைகளை நிறுவுதல்

3. சோடியம் குறைவாக உள்ள தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க நுகர்வோருக்கு உதவும் வகையில் Front-of-package labelling இருக்க வேண்டும். அதாவது அவர்கள் வாங்கும் பொருட்களில் இருக்குக் சோடியத்தின் அளவை குறிக்கும் வகையில் முன் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். 

4. உப்பு/சோடியம் பயன்பாட்டை குறைக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அதிகம் உப்பு உணவில் சேர்த்துக்கொண்டால் இரைப்பை புற்றுநோய், உடல் பருமன், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் சிறுநீரக நோய் அகிய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என கூறியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.      

Published at : 15 Mar 2023 01:00 PM (IST) Tags: WHO salt sodium chloride excessive sodium reducing sodium intake global target

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!

IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!

ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை

ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு