மேலும் அறிய
Advertisement
Home Cooking Tips: வீட்டிலேயே செய்யலாம்..! பக்கா ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் விங்ஸ்.. அதற்கான சில டிப்ஸ்கள் இதோ!
சிக்கன் விங்க்ஸ், சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ், சிக்கன் லாலிபாப் எல்லாம் நவீன கால நாகரிக ஃபாஸ்ட் ஃபுட்ஸ். இவற்றில் சிக்கன் விங்ஸுக்கு ஒன்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவை ஹோட்டல்களில் வாங்கும்போது கொஞ்சம் காஸ்ட்லியாகவே இருப்பதால் அதை வீட்டிலேயே ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிக்கன் விங்க்ஸ், சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ், சிக்கன் லாலிபாப் எல்லாம் நவீன கால நாகரிக ஃபாஸ்ட் ஃபுட்ஸ். இவற்றில் சிக்கன் விங்ஸுக்கு ஒன்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவை ஹோட்டல்களில் வாங்கும்போது கொஞ்சம் காஸ்ட்லியாகவே இருப்பதால் அதை வீட்டிலேயே ருசியாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
- சிக்கன் விங்ஸை வாங்கியவுடன் அதை நன்றாக பேட் ட்ரை செய்யுங்கள். இவ்வாறாக அதை பேட் ட்ரை செய்வதால் மொறுமொறுப்பான சிக்கன் கிடைக்கும். சிக்கனில் இயல்பாகவே ஈரப்பதம் இருக்கும். பேட் ட்ரை செய்வதால் அதிலிருக்கும் அதிகப்படியான ஈரம் சென்றுவிடும். அதன் பின்னரும் கூட ஈரம் இருக்கலாம். எனவே டிஸ்யூ பேப்பர் கொண்டு அதை ஒத்தி எடுத்துவிடவும்.
- பின்னர் மேரினேட் செய்த மிக்ஸில் கொஞ்சம் பேகிங் பவுடர் சேர்க்கவும். மேரினேஷனுக்கு மைதா, கார்ன்ப்ளவர், கரம் மசாலா பொருட்கள் சேர்த்துக் கொள்ளவும்.
- இப்போது வறுத்தெடுக்க வேண்டியதுதான். அதற்கு எண்னெய்யை நன்றாக காயவைத்து சரியான சூட்டில் வறுத்தெடுக்கவும். மிதமான சூட்டில் சமைத்தால் எல்லா பக்கமும் சீராக வெந்து மசாலா நல்ல ருசியில் கிடைக்கும்.
- சிக்கனை டபுள் ஃப்ரை செய்யுங்கள். அது முழுமையாக எண்ணெய்யில் மூழ்கும் படி பார்த்துக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் ரெஸ்டாரண்ட் பதத்திற்கு மொறு மொறு விங்ஸ் கிடைக்கும்.
- வறுத்தெடுத்தவுடன் அதிகப்படியாக இருக்கும் என்ணெய்யை வடிகட்டிவிடவும். டிஸ்யூ பேப்பர் கொண்டு கூட எடுக்கலாம்.
View this post on Instagram
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion