மேலும் அறிய

Health Tips: தலைமுடி அடர்த்தியாக வளர மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்‌ என்ன?

அதிகப்படியான இரசாயன  பொருட்களின் பயன்பாடு மற்றும் தலை முடி மீது ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் ஆகியவற்றால் இத்தகைய அடர்த்தி குறைவான முடிகளை பெறக்கூடும்

சிலருக்கு பிறந்ததிலிருந்தே தலைமுடி மெல்லியதாக  இருக்கும். மாசுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்களாலும் சிலருக்கு அடர்த்தி குறைவான தலை முடி உருவாகிறது . மேலும் சிலரின் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால்  இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

 அதிகப்படியான இரசாயன  பொருட்களின் பயன்பாடு மற்றும் தலை முடி மீது ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் ஆகியவற்றால் கூட இத்தகைய அடர்த்தி குறைவான தலை முடிகளை பெறக்கூடும். இவற்றை தவிர்ப்பதற்கு, நீங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கூந்தலில் பயன்படுத்தலாம். இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்குகளையும் பயன்படுத்தலாம்.

 மெல்லிய கூந்தல் இருக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்களைப் பார்ப்போம்:

சிலர் முடியை உலர வைப்பதற்காக மின் வெப்பத்தை உள்ளே பயன்படுத்துகிறார்கள். இது முடியின் வளர்ச்சியை தடுத்துவிடும். உங்கள் முடி ஏற்கனவே மிகவும் மெல்லியதாக இருந்தால், வெப்பத்தைப் பயன்படுத்துவதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். அதிக ப்ளோ ட்ரை மற்றும் விரைவான நேராக்குதல் (ஸ்ட்ரைட்னிங்) ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். இது உங்கள் தலை முடி உதிர்தலை அதிகப்படுத்தும்.

உங்கள் முடி மெல்லியதாக இருந்தால், அதிகப்படியான ஜெல் அடிப்படையிலான ஸ்ப்ரேகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் தலைமுடியில் எண்ணெய் அல்லது ஜெல் அடிப்படையிலான ஸ்ப்ரேயை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் முடி ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். இது முடியின் அளவைக் காட்டாது.

 தலைமுடி காணப்படும் நேரத்தில் அதிக எண்ணெய் உபயோகித்தால், முடி இன்னும் ஒட்டும் மற்றும் மெல்லியதாக இருக்கும். முடி அடர்த்தியாக இருக்க, சிலர் விரைவாக எண்ணெய் தடவுவார்கள். 

சிலர் முடியை அடர்த்தியாக்க அல்லது வேர்களில் இருந்து வலுவாக வைத்திருக்க பல வகையான மாத்திரைகளை சாப்பிடத் தொடங்குகிறார்கள், ஆனால் முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க அவற்றை அதிகம் சார்ந்து இருப்பது சரியல்ல.

முடி வளர்ச்சிக்கான மாத்திரைகள் உங்கள் தலைமுடியை உடனடியாக அடர்த்தியாக மாற்றாது, ஆனால் அவை பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். முடி மிகவும் மெலிதாக இருக்கும் பொழுதும்,அதிகப்படியாக உதிரும் பொழுதும் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

சிறிய அளவில் எண்ணெய் தடவலாம். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே எண்ணெய் தடவவும், அதுவும் தடவிய பின், முடியை நன்கு ஷாம்பு செய்யவும்.

ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும்  கிரீம்கள்  மற்றும் ஜல்களை முடி பராமரிப்பிற்கு பயன்படுத்தாதீர்கள். நீங்கள் கெமிக்கல் ஹேர் மாஸ்க், சீரம் போன்றவற்றைப் பயன்படுத்தினால், அது முடியின் நிலையை ஒருபோதும் மேம்படுத்தாது. 

ரசாயன சத்து அதிகம் உள்ள பொருட்களை கூந்தலுக்கு தடவினால், அது அதிக பாதிப்பை ஏற்படுத்தும், எனவே சந்தையில் கிடைக்கும் முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கெமிக்கல் இல்லாத இயற்கை முறையிலான முடி பராமரிப்பு ஷாம்பூ மற்றும் ஹேர் ஜெல் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

உங்கள் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்க விரும்பினால், கண்டிஷனரைப் பயன்படுத்தவும்,  மேலும், தினமும் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டாம். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை  பயன்படுத்தவும்.

பொதுவாக கூந்தல் பராமரிப்புக்கென்று நம் வீடுகளில் முன்னோர்கள் இயற்கையாகவே இலை வகைகள், கீரை ,தேங்காய் என இவற்றை எண்ணையாக காய்ச்சி  கூந்தலில்  வேர்களில் தேய்த்து அடர்த்தியாக வளர்வதற்கு பயன்படுத்துவார்கள் .

அதே போல் பாரம்பரியமிக்க எண்ணெய் வகைகளை தேர்வு செய்து முடி அடர்த்தியாக வளர்வதற்கு நாம் அவற்றை பயன்படுத்தலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Gautam Gambhir: பாஜக தான் காரணம்..! கம்பீர் மீது அட்டாக்.. இவ்ளோ மோசமான சாதனைகளா, கடுப்பில் ரசிகர்கள்
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Pongal Movies Collections: லீவு ஓவர்.. பஞ்சரான பராசக்தி.. பொங்கல் படங்களின் வசூல் நிலவரம் என்ன?
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
Mari Selvaraj: பெரியாரை திட்டினால் பெரிய சிந்தனையாளரா? - விளாசிய மாரி செல்வராஜ்
Upcoming 7 Seater: பட்ஜெட்டா? ப்ரீமியமா? 4 புது 7 சீட்டர் எஸ்யுவிக்கள் - மெஜஸ்டர் தொடங்கி டெய்ரோன் வரை - லாஞ்ச் எப்போது?
Upcoming 7 Seater: பட்ஜெட்டா? ப்ரீமியமா? 4 புது 7 சீட்டர் எஸ்யுவிக்கள் - மெஜஸ்டர் தொடங்கி டெய்ரோன் வரை - லாஞ்ச் எப்போது?
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
IND Vs NZ ODI: விராட் சாதனை படைத்து என்ன பலன்..! கப்பும் போச்சு, சரித்திரமும் முடிஞ்சு போச்சு - நியூசி., சம்பவம்
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
துன்பங்களால் வேதனையா... அப்போ இந்த தலம்தான் உங்களுக்கு தீர்வு!!!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
Embed widget