Bloating Tips : ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடிச்சதும், வயிறு உப்புசமா ஃபீல் பண்றீங்களா? இதை உடனே படிங்க..
சிலருக்கு வயிறு புண் காரணமாக கூட வயிறு உப்புசம் பிரச்சனை வரும். சில உணவுகள் கூட வயிறு உப்புச பிரச்சனையை ஏற்படுத்தும்.
அளவுக்கு அதிகமாக உணவு எடுத்து கொண்டாலே, விருந்துக்கு சென்று பிடித்த உணவுகளை எடுத்து கொண்டாலோ, ஹோட்டல் சென்று பிடித்த பல வகை உணவை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டாலோ, வயிறு உப்புசம் வரும். சிலருக்கு வயிறு புண் காரணமாக கூட வயிறு உப்புசம் பிரச்சனை வரும். சில உணவுகள் கூட வயிறு உப்புசம் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனையை சரி செய்ய சில எளிமையான டிப்ஸ் இங்கே
பிடித்த உணவு என்பதால் அதிகமாகச் சாப்பிடுவது வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும். அதனால் எதையும் அளவோடு உண்பதை பழக்கிக் கொள்ளவும்.
வாயு ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை சாப்பிடுவது வயிறு உப்புசம் ஏற்படுத்தும். அவற்றையும் உணவில் தவிர்ப்பது நல்லது. இதுதவிர வயிறு உப்புசம் பெரும்பாலும் உணவு ஒவ்வாமையால் ஏற்படுகிறது. சிலருக்கு பால் போன்ற உணவுகள் வயிறு உப்புசம் ஏற்படுத்தும். அதனால் அவற்றை உணவுகளில் தவிர்ப்பது நல்லது.
மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கும் வயிறு உப்புசம் ஏற்படும் அவர்கள் மலப்போக்கை எளிதாக்கும் உணவுகளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.
உப்புச்சத்தை போக்கும் உணவுகள்
தயிர் - தயிர் அல்லது மோர் வயிறு உப்புசம் பிரச்சனையை தீர்க்கும் சிறந்த உணவாகும். இது குடலில் இருக்கும் நல்லது செய்யும் பாக்டீரியா வளர்வதற்கு உதவியாக இருக்கும். செரிமான சக்தியை அதிகபடுத்தும். மேலும், உணவு செரிமானம் அடைந்து வெளியேறுவதற்கு உதவியாக இருக்கும்
வெள்ளரிக்காய் - நீர் சத்து அதிகம் இருக்கும் காய்கள் பழங்கள் எடுத்து கொள்வது, வயிறு உப்புசம் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காய், தர்பூசணி, அன்னாசிப்பழம், திராட்சை வயிறு உப்புசம் குறைக்க உதவும். வயிறு உப்புசம் வரமால் தடுக்கும். இந்த பழங்களை ஸ்னாக்ஸ் ஆக எடுத்து கொள்ளலாம்
இஞ்சி - இஞ்சி கஷாயம், இஞ்சி டீ போன்றவை எடுத்து கொள்வது, வயிறு உப்புசம் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் இது செரிமானத்தை துரித படுத்தும். குடல் தசை இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
வாழை பழம் - இதில் பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. வாழை பழம் சாப்பிடுவது, உப்புசம் பிரச்சனையை தீர்க்கும்.சாப்பிட்டு முடிந்த 1 மணி நேரத்தில் எடுத்து கொள்ளலாம். சிலர் மூச்சு முட்ட முட்ட சாப்பிட்டு பின்னர் அவதி படுவார்கள். அந்த பிரச்சனைக்கு வாழை பழம் சிறந்த தீர்வு
எலுமிச்சை - எலுமிச்சை ஜூஸ் உடன் உப்பு சேர்த்து குடிப்பது, வயிறு உப்புசம் சரி செய்ய உதவும். இதில் சோடா சேர்க்காமல் வெறும் எலுமிச்சையுடன் உப்பு சேர்த்து குடிப்பது நல்லது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )