"அடிச்சது போதும் க்விட் பண்ணுங்க…", புகைப்பிடித்தலை கைவிட சிரமப்படுகிறீர்களா… இதோ எளிய வழிகள்!
புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கு ஒரு நீண்ட செயல்முறை என்பது கண்டிப்பாக வேண்டும். அதற்காக பல முயற்சிகளை எடுக்கலாம். அதற்கான வழிகளை உங்களால் கண்டறிய முடியவில்லை என்றால் இதை படியுங்கள்.
புகைப்பழக்கத்தை கைவிடுவது பலருக்கு கைகூடும் விஷயமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் அதற்கு தேவைப்படும் மனா உறுதியும் அர்ப்பணிப்பும்தான். ஆனால் முடியவே முடியாதது அல்ல. இதற்கென நிகோடின் மாற்று சிகிச்சை, மருந்துகள் போன்றவையும் உள்ளன, நம் பழக்கவழக்கங்கள் மூலம் மாற்றும் சிகிச்சைகளும் உள்ளன. முக்கியமாக, வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவதும் புகைபிடிப்பதை விட்டுவிட உதவும். புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கு ஒரு நீண்ட செயல்முறை என்பது கண்டிப்பாக வேண்டும். அதற்காக பல முயற்சிகளை எடுக்கலாம். அதற்கான வழிகளை உங்களால் கண்டறிய முடியவில்லை என்றால் இதை படியுங்கள்.
ஒரு நாளைக்கு ஒரு முறை
புகைபிடிப்பதை உடனே விட்டுவிடுவது எளிதானது அல்ல. அதற்கு பதிலாக, முதலில் ஒரு நாளில் ஒரே ஒரு முறை மட்டும் புகைப்பது என்ற முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து, 'இன்று ஒருநாள் மட்டும் நான் புகைபிடிக்கப் போவதில்லை' என்று நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். அதை அப்படியே வைத்திருக்க கடினமாக முயற்சி செய்யுங்கள். இதையே, புகைபிடிக்காமல் ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் செல்லும் வரை அந்த மந்திரத்தை அடுத்த நாளும், அடுத்த நாளும் மீண்டும் தொடர வேண்டும்.
ஏன் என்ற கண்டறியவும்
புகைபிடிப்பதை ஏன் கைவிட விரும்புகிறீர்கள்? இது ஆரோக்கியத்திற்காகவா? பணத்தை சேமிக்கவா? பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்றா? இதில் காரணம் எதுவாக இருந்தாலும், அதை நன்றாக மனதிற்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அதை ஒரு ஸ்டிக்கி நோட்டில் எழுதி குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைக்கவும். தொலைபேசியில் ரிமைண்டர் வைத்துக்கூட அந்த செய்தியை ஞாபக்கப்படுத்திக் கொள்ளலாம். இது இலக்கில் கவனம் செலுத்த உதவும்.
எது புகைக்கத் தூண்டுகிறது என்று அறியவும்
சில சூழ்நிலைகள் அல்லது செயல்பாடுகள் புகைபிடிப்பதற்கான ஞாபக்தை, நினைவை தூண்டலாம். அது மன அழுத்தமாக இருக்கலாம், சலிப்பாக இருக்கலாம், அல்லது புகைபிடிக்கும் நண்பர்களுடன் உள்ள பழக்கமாக இருக்கலாம். அவற்றில் எது என்று கண்டறிந்து அவற்றை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். மன அழுத்தத்தின் போது அதனை சமாளிக்க, புகை இல்லாமல் வேறு வழியே யோசிக்க வேண்டும். உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானம் போன்றவைகளை பயன்படுத்தலாம்.
மற்றவர்களிடம் பேசுங்கள்
இதை தனியாக செய்ய வேண்டியதில்லை. புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான முடிவைப் பற்றி குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசி, அவர்களின் ஆதரவைக் கேளுங்கள். உங்களைப் போலவே புகைப்பழக்கத்தை விடும் எண்ணத்தில் உள்ளவர்களிடம் பழகலாம், அதுபோன்றவர்கள் உள்ள குழுவில் இணையலாம். மருத்துவர் அல்லது ஆலோசகர் போன்ற சுகாதார நிபுணரின் உதவியையும் நாடலாம். பெரும்பாலும் புகைபிடிப்பதை நிறுத்தும் சுகாதார நிபுணர், புகைபிடிக்கும் விருப்பத்தை நீக்கி, புகைபிடிப்பதை நிறுத்த உதவும் மருந்துகளைத் தருவார்கள்.
கைகளை பிஸியாக வைத்திருங்கள்
புகைபிடித்தல் என்பது கைகளையும் வாயையும் இணைக்கும் ஒரு பழக்கமாகும். பழக்கத்திலிருந்து விடுபட, கைகளை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள். ப்ரெஷர் பந்து வாங்கி அழுத்திக்கொண்டிருக்கலாம், பின்னல்கள் மூல ஆர்ட்ஒர்க் செய்யலாம், ஃபிட்ஜெட் ஸ்பின்னர் பயன்படுத்தலாம், ஏதோவொரு விளையாட்டை விளையாடலாம், செஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
உங்களுக்கு நீங்களே வெகுமதி அளிக்கவும்
புகைபிடிப்பதை விட்டுவிடுவது ஒரு பெரிய சாதனையாகும், எனவே அதனை கடக்கும் வழியில் உங்களுக்கு நீங்களே வெகுமதி அளிக்க மறக்காதீர்கள். ஒரு புதிய ஆடை அல்லது ஒரு சிறப்பு உணவு மூலம் உங்களை நீங்களே உபசரிக்கவும். வெகுமதியில் புகைபிடித்தல் அல்லது புகைபிடிப்பதற்கான தூண்டுதலைத் தூண்டக்கூடிய எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மனம் தளரக்கூடாது
புகைபிடிப்பதை நிறுத்துவது ஒரு பயணம், வழியில் பின்னடைவுகள் இருக்கலாம். நழுவி சிகரெட் புகைத்தால், உங்களை நீங்களே கெடுத்துக்கொள்வதற்கு சமம். ஏன் விலகுகிறீர்கள் என்பதை நீங்களே நினைவுபடுத்திக் கொண்டு மீண்டும் பாதையில் செல்லுங்கள். புகைபிடிப்பதை விட்டுவிடுவது ஒரு தீவிரமான விஷயம்தான், ஆனால் அதனை செய்யும்போதும் எல்லாமே தீவிரமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, நல்ல திரைப்படங்களை பார்க்கலாம், வீட்டுக்குள் நடனம் ஆடலாம், கேம்ஸ் விளையாடலாம், அல்லது பிடித்த ஏதோ ஒன்றை செய்யலாம். சிரிப்பு மற்றும் பாசிட்டிவாக இருப்பது புகைபிடிப்பதை விட்டுவிட உதவும் சக்திவாய்ந்த கருவியாக இருக்கும். 'சொல்லுதல் யாவர்க்கும் எளிய'தான், அதை செய்து முடிப்பதில்தான் நீங்கள் தனித்து தெரிவீர்கள்!