Cooking Tips:தயிர் கெட்டியா வரணுமா? மிருதுவான சப்பாத்தி வேணுமா? குறைந்த எண்ணெயில் அப்பளம் பொரிக்கலாம்.. சமையல் டிப்ஸ்
தயிர் கெட்டியாக கிடைக்கவும், குறைந்த எண்ணெயில் அப்பளம் பொரித்தல் உள்ளிட்ட டிப்ஸ்களை பார்க்கலாம்.
நாம் ஒரு சில எளிய டிப்ஸ்களை பயன்படுத்தினால்போதும் சமையல் பிடிக்காதவர்கள் கூட அதை விரும்பி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். தற்போது நாம் இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள சில எளிய சமையல் டிப்ஸ்களை பார்க்கலாம் வாங்க.
குறைந்த எண்ணெயில் அப்பளம் பொரிக்க டிப்ஸ்
அப்பளம் பொரிக்க இனி அதிக எண்ணெய் வேண்டாம் குறைவான எண்ணெயிலேயே பொரித்து எடுக்கலாம். அதற்கு அப்பளத்தை நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்து சற்று அகலம் குறைவான கடாயில் வழக்கமாக சேர்ப்பதை விட பாதியளவு எண்ணெய் அல்லது 50 கிராம் எண்ணெய் சேர்த்து பொரித்தெடுக்கலாம். அப்பளத்தின் சைஸ் சிறியதாக இருப்பதால் இது குறைவான எண்ணெயிலேயே அழகாக பொரிந்து வந்துவிடும்.
அப்பளம் கெட்டுப் போகாமல் இருக்க
அதைப்போல் அப்பளம் கூடுதல் நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. நாம் அப்பளம் வைக்கும் பாத்திரத்தின் அடியில் கால் டீஸ்பூன் அரிசியை தூவி விட்டு அதன் மேல் ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டு பின் அதன் மேல் அப்பளத்தை வைத்து டைட்டாக மூடி வைத்தால் அப்பளம் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
சப்பாத்தி மிருதுவாக இருக்க
சப்பாத்திக்கு மாவு பிசையும் போது சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசைந்து அதன் மீது எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் ஒரு தட்டு அல்லது ஈரத்துணி போட்டு மூடி வைக்க வேண்டும். பின் இந்த மாவில் சப்பாத்தி செய்தால் சப்பாத்தில் மிருதுவாக இருக்கும்.
கெட்டி தயிர் டிப்ஸ்
வீட்டில் தயிர் தயாரிக்கும் போது அது கெட்டியாக வரவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க. தயிர் தயாரிக்கும் போது எப்போதும் நாம் பாலுடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து வைத்தால்தான் பால் தயிராக மாறும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இனி காய்ச்சிய பாலுடன் தயிர் சேர்ப்பதற்கு முன் அந்த தயிரை ஸ்பூனால் நன்று கட்டிகள் இல்லாமல் கலக்கி விட்டு பின் காய்ச்சி ஆற வைத்த பாலில் சேர்க்க வேண்டும்.
பின் அதே ஸ்பூன் வைத்து தயிர் பாலுடன் கலக்குமாறு லேசாக கலக்கி விட வேண்டும். தயிர் வைத்திருக்கும் பாத்திரத்தை ஹாட் பாக்சில் வைத்து மூடி வைத்து விட வேண்டும். இதை 8 மணிநேரத்திற்கு பின் திறந்து பார்த்தால் தயிர் நன்கு கெட்டியாக உறைந்து இருக்கும். பாலை தண்ணீர் அதிகமாக தண்ணீர் சேர்த்து காய்ச்சினாலும் கெட்டியான தயிர் கிடைக்காது.