மேலும் அறிய

கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!

மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை

பிரசவ காலத்தில் பெண்கள் எதிர்க்கொள்ளும் உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சனைகள் ஏராளம். அது அனைத்துமே குழந்தையின் வளர்ச்சி மற்றும் அதன் நலம் சார்ந்தது . எனவே கர்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் அதில் ஒன்றுதான் இரத்த சோகை. ஆங்கிலத்தில் அனிமிக் என்பார்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருப்பதுதான் இரத்த சோகைக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது குழந்தையில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் தீப்தி .


கர்ப்பகாலத்தில் இரத்தசோகை பிரச்சனையா? - மருத்துவர் தரும் அட்வைஸ் இதோ!
மருத்துவர் கூறும் அறிவுரை பின்வருமாறு :

“என்னிடம் நிறைய கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். எனக்கு ஹீமோ குளோபினின் அளவும் மிகவும் குறைவாக இருக்கிறது. எனது குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்குமா என பார்த்து கூறுங்கள் என்பார்கள். அதே போலத்தான் நான் ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருக்கும் பொழுது , தாயைத்தான் பரிசோதிப்பேன். நிறைய மருத்துவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு அதாவது , வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் மூன்று மாதங்களுக்கு பிறகு இருக்காது. அந்த சமயத்தில் அயர்ன் மற்றும் கால்சியம் மாத்திரைகளை கொடுப்பார்கள். ஆனால் எதற்காக மருத்துவர்கள் அதனை கொடுக்கிறார்கள் என்பது பலருக்கு தெரிவதில்லை. கர்ப காலத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உடலில் 30 முதல் 40 சதவிகிதம் வரையில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். கர்பகாலத்தில் 10 இல் ஹீமோகுளோபின் அளவு தொடங்கினால் , அது 8 வரையிலும் குறைய வாய்ப்பிருக்கிறது. இது கர்ப காலத்தில் நடக்கும் சாதாரண நிகழ்வுதான் என்றாலும் கூட , அதனை தடுக்கத்தான் 3 மாதங்களில் இருந்தே மருத்துவர்கள் அயர்ன் மாத்திரைகளை பரிந்துரை செய்கிறார்கள்.அடர்ன் மாத்திரைகளை சாப்பிடும் பொழுதோ அல்லது சாப்பிட்ட பிறகு உடனடியாகவோ எடுத்துக்கொண்டால்  அந்த மாத்திரைகளின் பலன் அதிகமாகவே கிடைக்கும். அடுத்ததாக அயர் மற்றும் கால்சியம் மாத்திரைகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது. கால்சிய்ம மாத்திரைகளை இரவு பாலுடனும் , அயர்ன் மாத்திரைகளை மதிய உணவுடனும் சாப்பிடுவதுதான் சரி. மாத்திரைகளை தவிர்த்து, அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் முருங்கை கீரை, பேரிச்சம்பழம் , மாதுளை பழம் எல்லாம் சாப்பிடலாம்.ஜூஸாக பழங்களை சாப்பிடுவதை தவிர , பழங்களாக சாப்பிடுவதுதான் சிறந்தது. அதுதான் உடலுக்கு ஏற்ற நார் சத்துக்களை அதிகம் தரும் . மிக்ஸியிலோ அல்லது ஜூஸரிலோ பழத்தை அரைக்கும் பொழுது நார் சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் பழங்களாக சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படாது “ என்கிறார் மருத்துவர் தீப்தி.

தலைப்பு செய்திகள்

Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Washing Machine: வாஷிங் மெஷினில் இந்த 6 வகையான துணிகளை ஒருபோதும் துவைக்கக் கூடாது..!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget