Sadhguru On Sleep | உறங்கும் முன்பு இந்த 5 விஷயங்களை செய்யணும்.. இதை நினைவில் வைங்க... சத்குரு சொல்வது இதுதான்..
நம் உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் நிறைந்தது, அதன் மீது தண்ணீர் ஊற்றும்போது பெரும் மாற்றங்கள் ஏற்படும். இது தோலை மட்டும் அல்லாமல் நம் மனதையும் சுத்தம் செய்கிறது.
"இரவில் நன்கு துாங்கிவிட்டால் காலையில் குறைவான நேரத்தில் கூடுதலான காரியங்களைப் பார்க்க முடியும். சுறுசுறுப்பாக இயங்க முடியும்.சரியான துாக்கம் இல்லாவிட்டால், எதற்கெடுத்தாலும் கோபம் வரும். சிடுசிடுக்க வைக்கும். வேலையில் குளறுபடி ஏற்படும். முடிவெடுப்பதில் குழப்பம் வரும். பணியிடங்களில் அடிக்கடி கொட்டாவி வரும். ஏதோ பாதிக்கப்பட்ட மனிதர்போல உலவுவீர்கள். நல்ல துாக்கம் இல்லாது போனால் உங்களுடைய படைப்பாற்றல் குன்றும். இரவு படுக்கப்போகிற நொடி வரை வேலை பார்க்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரம் முன்பாகவே உங்களுடைய வேலைகளில் இருந்து விடுபட்டுவிட வேண்டும்.குறைந்த நேரத் துாக்கம்வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள விரும்புகிறவர் துாக்கத்தில் நேரத்தைத் தொலைக்கக் கூடாது. குறைவான நேரம் துாங்கி எழுந்தாலும் நன்றாகவே உணர்வீர்கள்; அதிகமாகவே சாதிப்பீர்கள். வாரத்தில் நீங்கள் மிச்சம் பிடிக்கிற நேரம், உங்களுடைய சக்தியை அதிகரிக்கும். வருடத்தில் கணக்கிட்டுப் பார்க்கிறபோது உங்களிடம் கணிசமான நேரம் கையிருப்பாக இருந்திருக்கும். டேல் ஹான்ஸன்பர்க் ஒரு பத்திரிகை வெளியீட்டாளர். அவர் தன் உறக்கத்தைத் திட்டமிட்டுக் கொண்டவர். தனக்கு உண்மையில் தேவைப்படும் உறக்க நேரத்தில் அரைமணி முன்னதாகவே எழுந்து கொண்டு விடுவார்" என்று உறக்கத்தை பற்றி பேசிய சத்குரு தூங்குவதற்கு முன் செய்யவேண்டிய விஷயங்களாக ஐந்து விஷயங்களை பரிந்துரைக்கிறார்.
அவற்றை பின்பற்றினால் அமைதியான வாழ்வையும் ஆரோக்கியமான உடலையும் பெறலாம் என்று கூறுகிறார். அந்த ஐந்து விஷயங்கள்:
இரவில் இறைச்சி மற்றும் மீல்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுவது சிறந்தது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் செரிமானம் முடிய வேண்டும். அதன் பிறகு குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடித்துவிட்டு படுக்கைக்குச் செல்லவேண்டும்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளிக்கவும்; இந்த பழக்கம் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் இதனை பின்பற்றுவது கடினமாக இருக்கலாம். அதற்காக சூடான தண்ணீரில் குளிக்கக்கூடாது, முடிந்த அளவுக்கு சாதாரண தண்ணீரிலேயே குளிக்க முயற்சி செய்யலாம். இது உங்களை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது, அதற்காக அந்த புத்துணர்ச்சி நமது தூக்கத்தை கெடுத்து விடாது, அரை மணி நேரம் சென்ற பிறகு தானாக தூக்கம் வரும். நம் உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் நிறைந்தது, அதன் மீது தண்ணீர் ஊற்றும்போது பெரும் மாற்றங்கள் ஏற்படும். இது தோலை மட்டும் அல்லாமல் நம் மனதையும் சுத்தம் செய்கிறது. நம் கவலைகளை அகற்றுகிறது.
தூங்கும் அறையில் எங்கோ ஒரு இடத்தில் இயற்கை எண்ணெயில் விளக்கேற்றவும். அது எந்த எண்ணெயாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆலிவ் எண்ணெய் மிகவும் சிறந்தது.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் யோகா பயிற்சிகள் செய்யவேண்டும். படுக்கையில் உட்கார்ந்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். நீங்கள் சுமார் அறுபது வருடங்கள் வாழ்ந்தால், சராசரியாக பெரும்பாலான மனிதர்கள்
1100 முதல் 1400 டன் வரை உணவு சாப்பிடுகிறார்கள். அதனால் நம் உடல் என்று நாம் நினைப்பது இது அல்ல. நம் உடல் ஒவ்வொரு நாளும் மாறுகிறது; புதிய உள்ளீடு நடந்துகொண்டே இருக்கிறது மற்றும் பழைய விஷயங்கள் நம்மை விட்டு சென்றுகொண்டே இருக்கிறது. அதனால் 1400 டன்கள், நம்மிடம் இருக்கிறது, அவ்வளவு எடையை இப்போதே சுமக்க வேண்டும். இப்போது நீங்கள் உடலாக என்ன வைத்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிந்துகொள்ள யோகா அவசியம். அதனால் இரவு ஒரு 15 நிமிடங்கள் யோகாவிற்காக செலவிட வேண்டும்.
கடைசியாக, "இந்த உடல் உண்மையில் நாம் இல்லை. பயன்பாட்டிற்கு இப்போது என்னுடையது, ஆனால் அது உண்மையில் நான் அல்ல." என்று மனதிற்கு புரிய வைக்க வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால், அதை நம் சுவாசத்துடன் இணைக்கவும். உள்ளிழுக்கும்போது, நான் உடல் அல்ல; வெளியில் விடும்போது, நான் மனம் கூட இல்லை என்று பழக்கி கொள்ளலாம். இதனை ஒரு 10 முதல் 12 நிமிடங்கள் செய்தால் போதுமானது.