"தினமும் இதை செய்ய மறக்காதீங்க.... என் உடல் நலத்துக்கான சீக்ரெட் இது தான்" - நடிகை ஹீமா குரேசி டிப்ஸ்!
உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ள சக்ராசனத்தை தினமும் மேற்கொண்டால் நம்முடைய ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.
தினமும் ஒரு முறையாவது சக்ராசனத்தை செய்தால் போதும் வாழ்நாள் முழுவதும் உடல் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியோடும் இருக்க முடியும் என திரைப்பட நடிகையும், மாடல் அழகியுமான ஹுமா குரேஷி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகைகளான மலாய்கா அரோரா மற்றும் ஷில்பா ஷெட்டி முதல் கரீனா கபூர் மற்றும் ஆலியா பட் வரை பெரும்பாலான நடிகைகள் தங்களின் உடலைக்கட்டுக்குள் வைத்திருக்க யோகாசனத்தையே தேர்வு செய்கிறார்கள். இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மன அழுத்தம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பதை நிரூபித்தும் காட்டியுள்ளனர். இந்த வரிசையில் பிரபல திரைப்பட நடிகையும்,மாடல் அழகியுமானஹுமா குரேஷியும் இடம் பெற்றுள்ளார். இதுக்குறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சக்ராசனம் செய்தபடியான போட்டா ஒன்றினை வெளியிட்ட இவர், இந்த ஆசனைச் செய்தால் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும், என் வாழ்வில் அதனை உணர்ந்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். எனவே இதுவரை உங்களது யோகாசனத்தில் நீங்கள் சக்ராசனத்தை சேர்க்கவில்லை என்றால், இனி கண்டிப்பாக சேர்த்துவிடுங்கள் என்றும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
மற்ற ஆசனங்களை விட இந்த சக்ராசனத்தில் என்ன உள்ளது? என்ற சந்தேகம் எழுகிறதா? வாங்க இதனால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.
தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிட்ட தகவலின் படி, பெண்களுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் முதுகெலும்பு பிரச்சனைக்கு சிறந்த தீர்வை இந்த சக்ராசனம் அளிப்பதாக 2015 ஆம் ஆண்டின் வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சக்ராசனத்தை மேற்கொள்ளும் போது 12 வாரங்களில் தசை வலிமை அதிகமாகும் எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி சக்ராசனம் செய்யும் போது மார்பு பகுதி விரிவடைவதால் நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கிறது. எனவே இந்த ஆசனம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ளது.
முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதோடு நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கூன் முதுகு வராமல் தடுக்கவும் உதவியாக உள்ளது.
இதயத்தின் செயல்திறனை அதிகரிப்பதோடு இதய நோய்கள் குணமாக்குவதற்கு உதவியாக உள்ளது. மேலும் நரம்பு மண்டலத்தை சீராக்கவும், உடல் எடையைக்குறைக்கவும் இந்த சக்ராசனம் உதவியாக உள்ளது.
சக்ராசனம் மேற்கொள்ளும் போது முகம் மற்றும் உச்சந்தலையில் முதல் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் ஒளிரும் தோல் மற்றும் நீண்ட காலத்திற்கு சிறந்த முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
சக்கர போஸ் உங்களை உற்சாகமாக உணரவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியாக உள்ளது.
இதோடு சக்ராசனம் மேற்கொள்ளும் போது நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டுகிறது மற்றும் உகந்த வளர்சிதை மாற்ற விகிதத்தை பராமரிக்க உதவுகிறது.
இதுப்போன்று பல்வேறு உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக உள்ள சக்ராசனத்தை தினமும் மேற்கொண்டால் நம்முடைய ஆயுள் காலம் அதிகரிக்கும் என்பதை நினைவில் வைத்து செயல்பட வேண்டும்.