Tirupati Laddu: திருப்பதி பிரசாத லட்டுவின் அளவு குறைவதாக புகார்.. என்ன நடந்தது?
Tirupati Laddu: திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு அளவு குறைந்துவிட்டதாகவும் சரியான அளவில் வழங்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு அளவு குறைந்துவிட்டதாகவும் சரியான அளவில் வழங்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு வயது 308 ஆகிறது. லட்டு பிரசாதம் மூலம் ஆண்டுக்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லட்டுகளை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.
கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.
திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம், புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. விஷேச நாட்களில் 750 கிராம் எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது கல்யாணோத்வ லட்டு தயாரிக்கப்படும். இது அளவில் சற்று பெரியதாக இருக்கும். கோயில் உற்சவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அதோடு, 175 கிராம் எடை கொண்ட புரோக்தம் லட்டு பக்தர்களுக்கு கட்டணமின்றி (ஒரு லட்டு) வழங்கப்படுவதாகும். இப்படி பல வகைகளில் லட்டு வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்று கொண்டு லட்டு வாங்கலாம். பணம் செலுத்தி கூடுதல் லட்டு பெற்று கொள்ளலாம்.
புவிசார் குறியீடு
2009 ஆம் ஆண்டு திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீட்டு வழங்கப்பட்டது. பினனர், திருப்பதி லட்டுக்கு காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாராலும் இதை தயாரிக்க முடியாது.
பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படும் லட்டுவின் எடை எடை 175 கிராம் கொண்டது. இதுதான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. சமீப நாட்களாக, பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு சிறியதாக இருப்பதாகவும் எடை குறைவாக உள்ளதாகவும் பக்தர்கள் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5, ரூ.10, ரூ.25 விலைகளில் 3 வகையான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.50-க்கு லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவின் அளவை சரியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் மூன்று வகையான லட்டு தயாரிக்கப்படுகின்றன. ‘அஸ்தானம்’, கல்யாணோத்வசம் புரோக்தம் என மூன்று வகைகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. விஷேச நாட்களில் 750 கிராம் எடையுடன் தயாரிக்கப்படும் லட்டு முக்கியமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. iது பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது கல்யாணோத்வ லட்டு தயாரிக்கப்படும். இது அளவில் சற்று பெரியதாக இருக்கும். கோயில் உற்சவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு இது பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதோடு, 175 கிராம் எடை கொண்ட புரோக்தம் லட்டு பக்தர்களுக்கு கட்டணமின்றி (ஒரு லட்டு) வழங்கப்படுவதாகும். இப்படி பல வகைகளில் லட்டு வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்று கொண்டு லட்டு வாங்கலாம். பணம் செலுத்தி கூடுதல் லட்டு பெற்று கொள்ளலாம்.