Smoothie Recipes : கோடை வெயிலை சமாளிக்க ஆரோக்கியமிக்க ஸ்மூத்தி ரெசிபிகள் இதோ!
Delicious Smoothie Recipes : அவசர வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சவாலானது. இல்லையா? ஒரு நல்ல ஸ்மூத்தி காலை உணவு, மதிய உணவு அல்லது சிற்றுண்டிகளுக்கு முற்றிலும் ஏற்றது.
அவசர வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் சவாலானது. இல்லையா? ஒரு நல்ல ஸ்மூத்தி காலை உணவு, மதிய உணவு அல்லது சிற்றுண்டிகளுக்கு முற்றிலும் ஏற்றது. எனவே, உங்கள் வாழ்க்கையை சற்று எளிதாக்க, வாரம் முழுவதும் நீங்கள் சாப்பிடக்கூடிய சில அருமையான ஸ்மூத்தி ரெசிபிகளை இங்கு காணலாம்.
பெர்ரி ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
பெர்ரி (ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி) -1 கப்
வாழைப்பழம் -1 கப்
யோகர்ட் -1 கப்
சியா விதைகள் - 1 தேக்கரண்டி
பாதாம் பால் -1 கப்
செய்முறை:
எல்லா பழங்களை ஸ்மூத்தாக ப்ளண்ட் செய்யவும். கோடைக்காலம் நெருங்கிவிட்டதால் குளிர்ச்சியான ஸ்மூத்தியை விரும்பினால் இதோடு ஐஸ் சேர்க்கலாம். இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கலாம்.
பலன்கள்:
இந்த பெர்ரி ஸ்மூத்தியில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது உடற்பயிற்சியின் சாப்பிடுவதற்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது.
பெர்ரிகளில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதேசமயம் சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு சத்துகள், நார்ச்சத்து மிகுந்துள்ளது.
பாலக்கீரை ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2
பாலக்கீரை - 1 கப்
இளநீர் - 1 கப்
பேரீட்சை - 3 அல்லது தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பழத்தை இரவு முழுவதும் ஃபீரிசரில் வைக்கவும். காலையில் இந்தப் பழம், பேரீட்சை, பாலக்கீரை மற்றும் இளநீர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். இதனுடன் ஐஸ் சேர்த்து, தேவையான அளவுக்கு ஸ்மூத்தியாக செய்யவும். சுவையான ஸ்மூத்தி தயார்.
அவகோடா ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
க்ரீன் ஆப்பிள் - 2
வெள்ளரிக்காய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
அவகோடா - ஒரு பழத்தில் பாதி
எலுமிச்சை - ஒரு பழச்சாறு
செய்முறை:
கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரிக்காய் உள்பட அனைத்தையும் நறுக்கி மிக்ஸியில் ஸ்மூத்தாக அரைத்தெடுத்து கொள்ளவும். இதனுடன் ஐஸ் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இதை அப்படியே அருந்தலாம் அல்லது வடிகட்டியும் அருந்தலாம்.
பலன்கள்:
அவகேடோ உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
கற்றாழை ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்:
கற்றாழை மடல் -ஒன்று
அவகோடா - ¼ பழம்
பாலக்கீரை - 100 கிராம்
வாழைப்பழம் - 1
எலுமிச்சை - இரண்டு துண்டுகள்
தண்ணீர் - 150 மில்லி
செய்முறை:
கற்றாழை, அவகேடோ, பாலக்கீரை உள்ளிட்டவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். எந்த அளவுக்கு இலகுவாக வேண்டுமோ, அந்த அளவுக்கு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். ஸ்மூத்தி தயார்.
மாம்பழ ஸ்மூத்தி
தேவையான பொருட்கள் :
தேங்காய் பால் - 1/2 கப்
குளிர்ந்த பால் - 1/4 கப்
தயிர் -2
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 4
உலர் திராட்சை -4
செய்முறை:
மாம்பழத்தை தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் மாம்பழம், தேங்காய் பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். சுவையான மாம்பழ ஸ்மூத்தி தயார்.
தினமும் பழங்களை சாப்பிடுவது நல்லது. சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் ஆரோக்கியமான உடலுக்கு அவசியமானவை. பாக்கெட்களில் அடைத்து விற்படும் உணவுகளைத் தவிப்பது உடலில் நச்சு சேருவதைத் தவிர்க்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பலரும் ஆர்கானிக் உணவுகள், சிறுதானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை தினமும் டயட் லிஸ்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தந்த பருவநிலைக்கு ஏற்றார்போல கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். கோடைகாலம், மழைகாலம் ஆகியவற்றிற்கு ஏற்றார்போல நம் உணவு இருக்க வேண்டும். உடலில் 70% தண்ணீரை பராமரித்தாக வேண்டும். அவ்வாறு செய்தால் உடலில் உள்ள கழிவுகள் வியர்வை மற்றும் சிறுநீராக வெளியேறிவிடும் என்று நிபுணர்கள் அறிவுத்துகின்றனர்.