செக்ஸுக்கு பிறகு அழுகை.. கோவம் வருவது இயல்பா? வந்தால் என்ன செய்வது? நிபுணர்கள் கூறுவது இதுதான்!
புணர்ச்சி நம் எல்லா வகையான உணர்ச்சிகளையும் தூண்ட வாய்ப்பு உள்ளது.
உடலுறவு எப்போதும் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் ஒரு உறவில் நெருக்கத்தை ஆழப்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. இருப்பினும், சில பெண்கள் உடலுறவுக்குப் பிறகு துன்பத்தை அனுபவிக்கிறார்கள். பலர் உடலுறவுக்கு பிறகு அழுவதாக கூட தெரிவித்து உள்ளனர். அதற்கான காரணம் என்ன?
இப்படி உடலுறவுக்கு பிறகு அழுவது ஒரு மிகவும் பொதுவான உணர்ச்சி எனவே நீங்கள் மட்டும் தான் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று நினைக்க வேண்டாம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பாலியல் மருத்துவத்திற்கான சர்வதேச சங்கம் என்ன கூறுகிறது என்றால், சில பெண்கள் உடலுறவுக்குப் பிறகு உணர்ச்சிகளின் வேகத்தை அனுபவிக்கிறார்கள், இதனால் அவர்கள் அழும் வாய்ப்பு உள்ளது, பாலியல் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்கிறது ஆய்வு. உடலுறவின்போது துணை அன்பாகவும் திருப்திகரமாகவும் இருந்தபோதிலும் இது நிகழக்கூடும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதே மாதிரி உடலுறுவின் போது பெண்கள் ஆக்ரோஷமாகி வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும் உண்டு. ஆனால் இந்த உணர்ச்சிகளுக்கான காரணங்கள் குறித்து பெண்களுக்கே தெரிவதில்லை. சில நேரங்களில் புணர்ச்சி காரணமாக வெளிப்படும் என்றும் கூறுகின்றனர். புணர்ச்சி நம் எல்லா வகையான உணர்ச்சிகளையும் தூண்ட வாய்ப்பு உள்ளது. அப்படி தூண்டப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் உடனடியாக அமைதிபடுத்துவதற்காக இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுகிறது என்று உளவியல் நிபுணர் கூறுகிறார்.
அதே போல உடலுறுவுக்கு பிறகு பெண்கள் அழுவதற்கு வலியை தவிர வேறு பல காரணங்களும் உள்ளன. மருத்துவரின் கூற்றுப்படி பெண்கள் உடலுறுவுக்கு பிறகும் சிறு அரவணைப்பை விரும்புகிறார்கள். உடலுறவுக்கு பிந்தைய உரையாடல், அரவணைப்பு போன்ற விஷயங்கள் இணையர்களுக்கு தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி பேசுவது உணர்ச்சி முழு திருப்தி அடைவதற்கு வழிவகுக்கிறது. மறுபுறம் உடலுறவு முடிந்ததும் எந்தவொரு உடல் தொடர்பையும் வைத்துக்கொள்ளலாமல் இருப்பது, புறக்கணிக்கப்பட்டதாக ஒருவரை உணரச்செய்யக் கூடும் என்றும் பாதிப்பு உணர்வை உருவாக்குவதற்கு இது வழி வகுக்கும் என்றும் கூறுகின்றனர். இதுவும் தங்கள் இணையரை அதிகமாக உணர்ச்சிவசப்பட வைக்கும். அதன் மூலம் கூட அழுகை வரலாம் என்று கூறுகின்றனர்.
மேலும் பாலியல் தாக்குதல் பெரும்பாலும் உளவியலில் ரீதியாக பலருக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் உடலுறுவு மேற்கொண்ட பிறகு, சொந்த கருத்துக்கள், அவமானங்கள், குற்ற உணர்வு காரணமாக சிலருக்கு இந்த பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் உருவ பிரச்சினைகள் கூட போஸ்ட்காய்டல் டிஸ்ஃபோரியாவுக்கு வழிவகுக்கும் மற்றொரு காரணியாக உள்ளது. சில பெண்கள் இதனால் அவமானமான உணர்வை உணர்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
உடலுறவுக்குப் பிறகு அதிகப்படியான ஆற்றலை இழப்பது கூட சிலரை அழ வைக்கும். ஆனால் இது சந்தோஷக் கண்ணீராக கூட இருக்கலாம். மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வை சந்திக்கும் பெண்கள் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கின்றனர். அந்த நேரத்தில் உடலுறவு கொள்வது அழுகின்ற உணர்ச்சிகளைத் தூண்டக்கூடும். பொதுவாகவே மகப்பேற்றுக்கு பிறகான பெண்களில் மனச்சோர்வு விகிதம் அதிகமாக உள்ளது. இது தொடர்ச்சியான பிரச்சனையாக இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது. 32 முதல் 46 சதவீதம் பெண்கள் மகப்பேற்றுக்கு பின்னான மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆண்களைப் போலவே பெண்களும் அனிஸிடிட்டி பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். அனிஸிடிட்டி என்றால், துணையை திருப்திபடுத்த முடியாத தன்மை போன்ற விஷயங்கள் சிலருக்கு கவலைகளை தூண்டலாம். இருப்பினும் உடலுறுவுக்கு பிறகு அழுவது என்பது முற்றிலும் சாதாரணமான ஒன்று. இது குறித்து கவலை கொள்ள தேவையில்லை என்று மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
எனவே நீங்கள் உடலுறுவுக்கு பிறகு தனியாக உணர்வது மாதிரி உணர்ந்தால் உங்க துணையுடன் பேசலாம். அது உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும், உங்க உணர்ச்சியை கட்டுப்படுத்த உதவி செய்யும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )