காஃபி பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஆச்சரியம் தரும் சமீபத்திய ஆய்வு முடிவுகள்!
சமீபத்திய ஆய்வுகளின்படி, காபி குடிப்பவர்கள் சற்றே தாமதமாக உயிரிழப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது காபி பிரியர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தரலாம்.
காஃபி..
காஃபி பிரியர்களிடம் `ஏன் காபி பிடிக்கும்?’ என்று கேட்டால் அதனைக் கொண்டாடுவதற்காக நூறு காரணங்களைப் பட்டியலிடுவார்கள். எனினும், அதிகமாக காஃபி குடிப்பது உடல்நலத்திற்குத் தீங்காக அமையும் எனக் கூறி பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
எனினும், சமீபத்திய ஆய்வுகளின்படி, காஃபி குடிப்பவர்கள் சற்றே தாமதமாக உயிரிழப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது காஃபி பிரியர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தரலாம்.
பிரிட்டிஷ் காஃபி அசோசியேஷனின் தரவுகளின் படி, பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு சுமார் 98 மில்லியன் கப் காஃபி பருகப்படுகிறது. நாம் இத்தனை ஆண்டுகளாக காஃபி உடலுக்குக் கேடானது என நம்பிக் கொண்டிருப்பது பொய் எனவும், காஃபி பருகுவது நமது உடலுக்கும், மனதுக்கும் நன்மை தரும் என சமீபத்திய ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன.
ஆய்வு முடிவு..
சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தற்போது கண்டுபிடித்ததில், தினமும் காஃபியை அளவாக குடிப்போர், காஃபி குடிக்காதவர்களை விட 7 ஆண்டுகள் அதிகமாக வாழ்கின்றனர். மேலும், இந்தக் காபியில் சர்க்கரை சேர்ப்பதும், சேர்க்காமல் இருப்பதும் இந்த ஆய்வு முடிவுகளில் பொருந்தும்.
Annals of Internal Medicine என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், பிரிட்டனில் சுமார் 1.71 லட்சம் பேரின் தரவுகளைப் பயன்படுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கடந்த 2006 முதல், சுமார் 5 லட்சம் பேரின் மரபுமாற்றம், வாழ்க்கை முறை, உடல்நலம் முதலானவற்றோடு காபி குடிக்கும் பழக்கங்களின் தரவுகளும் பெறப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளுக்குள் உயிரிழந்த 3177 பேரின் தகவல்களையும் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் வயது, பாலினம், தேசிய இனம், கல்வித் தகுதி, புகைப்பழக்கம், உடற்பயிற்சி பழக்கம், டயட் முதலானவை கண்கானிக்கப்பட்டு, அதில் காபி குடிக்காதவர்களை விட, சர்க்கரை சேர்க்கப்படாத காஃபி குடித்தவர்களின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது.
தினமும் 2.5 முதல் 4.5 கப் வரை காஃபி குடிப்போருக்குச் சுமார் 29 சதவிகிதமாக மரணம் ஏற்படும் வாய்ப்பு குறைந்திருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆய்வில் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அனைவரிடம் காபி குடிக்கும் பழக்கமும், அதனுடனான பிற பழக்கங்களும் மட்டுமே கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. எனவே, காபியில் அதிகளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டால் விளைவுகள் என்னவாகும் என்பது குறித்த தகவல்கள் கிட்டவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்