Chinmayi's Hair Care | கருகரு கூந்தலுக்கு, கருவேப்பிலை பட்டர்மில்க்... சின்மயி கொடுத்த ஹேர் ரெசிப்பி..
கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக வளர வேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இருக்க முடியாது.
கூந்தல் அடர்த்தியாகவும், பளபளப்பாக கூடவே நீளமாகவும் ரெசிபி ஒன்றை சொல்லியுள்ளார் பாடகி சின்மயி. பாடகி பாட்டுக்கு மட்டும்தான் டிப்ஸ் சொல்ல வேண்டுமா என்ன?
ஏ.ஆர.ரஹ்மானின் இசையில் பாட ஆரம்பித்த சின்மயி, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் சின்மயி குரல் ஒளித்தது. இதன் பின்பு மற்ற மொழிப் படங்களிலும் குறிப்பாக இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் பின்னணி பாடினார் சின்மயி. பல நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார்.
இடையில் மீ டூ விவகாரம் என்று சர்ச்சைகளின் மையப்புள்ளியாக இருந்த அவர் சில ஆண்டுகளாகவே யூடியூப் சேனலில் ஆரோக்கியம், பியூட்டி டிப்ஸ் கொடுத்து வருகிறார்.
அப்படியாக கூந்தல் அடர்த்தியாகவும், பளபளப்பாக கூடவே நீளமாகவும் ரெசிபி ஒன்றை சொல்லியுள்ளார் சின்மயி.
கூந்தல் கருகருவென்று அடர்த்தியாக வளர வேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இருக்க முடியாது. முடியும் நீளத்தின் மீதான விருப்பம் வேண்டுமானால் மாறலாமே தவிர முடியின் அடர்த்தி மீதான ரசனை பெண்களுக்கு மாறுவதில்லை.
அவர்களுக்காகத்தான் இந்த டிப்ஸ்.
கருவேப்பிலை பட்டர்மில்க் செய்வது எப்படி?
ஒரு மிக்ஸி ஜாரில் கெட்டியான தயிர் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் ஒரு கைப்பிடியோ அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்பவோ கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரை மூடி நன்றாக அரைத்துக் கொள்ளவும் பின்னர் அதில் சிறிது உப்பு, பெருங்காயம், சீரகத்தூள் சேர்த்துவிட்டு தண்ணீர் ஊற்றி மீண்டும் மிக்ஸியை இயக்கவும். இப்போது கருவேப்பிலை பட்டர்மில்க் ரெடி.
இந்த கருவேப்பிலை பட்டர்மில்க்கை தான் 30 நாட்கள் தொடர்ந்து குடித்ததாகவும், அதில் நல்ல பலன் கிடைத்ததாகவும் கூறுகிறார் சின்மயி.
பாடகி சின்மயியின் முடியில் ஏற்பட்டுள்ள அடர்த்தியையும் பளபளப்பையும் நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
1.கருவேப்பிலை மோர் 2. தினமும் கீரை 3. ப்ரகோலி சூப் 4. நட்ஸ் அண்ட் ரெய்சின்ஸ் 5. ப்ரோபயாடிக் பானங்கள் ஆகியன நல்ல பலனைத் தரும் என்று பரிந்துரைக்கிறார் சின்மயி.
சின்மயி டிப்ஸுடன் சில கூடுதல் டிப்ஸ்:
சின்மயி கூறியுள்ள கருவேப்பிலை பட்டர்மில்க் ரெசிபியுடன் கூடவே நீங்கள் இதையும் ட்ரை பண்ணலாம். உங்களுடைய முடி கருகருவென்று அசைந்தாட காலை உணவில் தோசை சாப்பிடும்பொழுது செம்பருத்தி பூ சேர்த்து தோசை வார்க்கலாம். ... ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்த பின் தலைக்கு குளித்து வந்தால் முடியின் நிறம் மாறும். நரை முடி கூட கருமை அடைந்து விடும்.
உணவே மருந்து என்பதால் ஆரோக்கியத்தை உள்ளிருந்து கொண்டுவருவதே எப்போதும் நீடித்து நிலைத்து நிற்கும். பொதுவாக ஒரு நபரின் ஆரோக்கியத்தை அவருடைய கூந்தலைப் பார்த்தே சொல்லிவிடலாம். கூந்தலும், நகமும் சொல்லிவிடும் நம் ஆரோக்கியத்தை. ஆகையால் முறையான உணவுப்பழக்கத்தை வளர்த்துக் கொள்வோம். ஆரோக்கியம் பேணுவோம்.