Warm Water : வெதுவெதுப்பான நீர் உடல் எடையை குறைக்குமா? வேறு நன்மைகள் என்ன? இதை உடனே படிச்சிடுங்க..
வெந்நீர் உடல் எடை குறைப்பதில் உதவி செய்கிறதா?
உடல் எடையை குறைக்கும் பயணத்தில் யோகா,உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் இருக்க அதோடு நாம் இணையத்தில் பரவும் டிப்ஸ்களையும் பின்பற்றியிருப்போம். இல்லையா? டயட் ரொட்டீன், கீட்டோ டயட் உள்ளிட்ட பலவற்றை முயற்சித்தும் பலருக்கும் நல்ல பலன் கிடைத்திருக்காது. நமக்கு கிடைக்கும் அறிவுரைகளை பின்பற்றி எப்படியாது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நோக்கமாக இருந்திருக்கும்.
பொதுவாக கிடைக்கும் தகவல்கள் எல்லாருக்கும் உதவிடாது. அப்படியானற்றில், வெதுவெதுப்பான நீர் உடல் எடையை குறைக்க உதவும் என்ற தகவல்களை நாம் கடந்து வந்திருப்போம். அதை தொடர்ந்து கடைப்பிடித்தும் வருந்திருப்போம். ஆனால், உண்மையிலேயே இளம்சூடான வெந்நீர் உடல் எடையை குறைக்குமா? ஆனால், பலரும் தினமும் ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரை அருந்துவிட்டு தொடங்குங்கள் என்று சொல்வதுண்டு. உடலின் ஃபிட்னெஸ் சீக்ரெட்டாக வெந்தீர் குடிப்பது சொல்லுவதுண்டு.
நம்மில் சிலர் இந்த வழக்கத்தை பின்பற்ற முயற்சித்திருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது பயனுள்ளதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் அறிவியல் என்ன? கவலைப்பட வேண்டாம். இந்தக் கேள்விகளுக்கான பதிலை இக்கட்டுரையில் காணலாம்.
View this post on Instagram
உடல் எடை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
இது தொடர்பாக, அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், உணவுக்குப் பிறகு வெந்நீரைக் குடிப்பது எடையைக் குறைக்க உதவும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால்,அது உண்மையல்ல! இருப்பினும், அது செரிமானத்திற்கு உதவலாம்." என்று குறிப்பிட்டுள்ளார்.
"வெந்நீர் செரிமானத்திற்கு உதவுகிறது. உணவுக்குப் பிறகு இளம்சூடான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. ஆனால், வெந்நீர் குடிப்பதால் உங்கள் உடல் எடை குறையாது.” என்று விளக்கமளித்துள்ளார்.
வெந்நீருக்கும் உடல் எடை குறைப்பிற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது நமக்கு விளங்கியிருக்கும். ஆனால், உடல் எடை குறைப்பு பயணத்தில் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து சில டிப்ஸ்கள் இங்கே:
Detox water:
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தினமும் காலை மூலிகை டீ, உள்ளிட்டவற்றை குடிக்கலாம். இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது உடல் எடை குறைக்கும் பணியை துரிதப்படுத்தும்.
ஆரோக்கியமான காலை உணவு:
காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பது நாம் அறிந்ததே. இது நமக்கு அன்றைக்கான ஆற்றலை தருகிறது. உடல் எடையை குறைக்க அல்லது கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோர் காலையில் சத்தான உணவை உண்ண வேண்டும்.
பழங்கள்:
அடிக்கடி எதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தவிக்க உதவுவது பழங்கள். மேலும், இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு தேவையான கலோரிகளை தருகிறது. ஆரோக்கியமான உணவு சாப்பிடும்போது, உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை.
நிறைய தண்ணீர் குடிங்க:
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடை குறைப்பில் இதும் முக்கியமானது.
துரித உணவுகளுக்கு நோ சொல்லுங்க:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் துரித உணவுகள், பாக்கெட்களில் விற்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உடலில் அதிக அளவு கெட்டக் கொழுப்புகளை சேர்த்துவிடும்.
கவனிக்க:
உடல் எடை குறைக்கும் பயணம் தனிப்பட்ட நபர்களை பொருத்து மாறுபடும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதில் முதன்மையானவை. பொதுவான அறிவுரைகளை எல்லாம் முயற்சிக்க வேண்டாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )