மேலும் அறிய

கர்ப்பப்பை பிரச்சனைகள் முதல் நீரிழிவு வரை.. கருஞ்சீரகம், எப்போ, எப்படி பயன்படுத்தலாம்? தெரிஞ்சுகோங்க..

மழைக்காலம் மற்றும் பனிக்காலங்களில் உடல் சோர்வாகும்போது உடலுக்குத் தேவையான வெப்பத்தைக்கொடுத்து உடல் வெப்பத்தைச்சீராக வைக்க உதவும் கருஞ்சீரகம் ஆரோக்கியத்தின் தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கர்ப்பப்பை வலி முதல் தோல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய அருமருந்தாக கருஞ்சீரகம் விளங்குகிறது. எனவே வாரத்தில் சில நாட்களாவது இதனைப் பயன்படுத்தினால் உடல் ரீதியான பிரச்சனைகளை குறைக்கலாம்.

நம் முன்னோர்கள் வாழ்க்கை முறையிலேயே பல நோய்களுக்குத் தீர்வு கண்டுள்ளனர். இதனால்தான் என்னவோ ” உணவே மருந்து” என்று கூறுவார்கள் போலும். சீரகம், மிளகு, வெந்தயம் போன்ற உணவுப்பொருள்களை பல நோய்களைத் தீர்ப்பதற்கு மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது கருஞ்சீரகத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். பல அரபு நாடுகளில் கருஞ்சீரகம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள். பீடா கரோடின், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் என பலவிதமான சத்துக்கள் உள்ளதால் பல நோய்களுக்கு தீர்வு காண்கிறது.

கர்ப்பப்பை பிரச்சனைகள் முதல் நீரிழிவு வரை.. கருஞ்சீரகம், எப்போ, எப்படி பயன்படுத்தலாம்? தெரிஞ்சுகோங்க..

கருஞ்சீரகத்தின் பயன்கள் மற்றும் என்னென்ன நோய்களுக்குத் தீர்வு காண்கிறது?

கருஞ்சீரகத்தைப் பொறுத்தவரை பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு, மருந்துகளுடன் இதையும் எடுத்துக்கொள்வது நல்லதாகும். இதனை உட்கொள்ளும் போது கர்ப்பப்பையில் உள்ள அழுக்குகள் மற்றும் கசடுகளை நீக்குவதற்குப் பயன்படுகிறது. இப்பொழுது தான் மருத்துவமனைகளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறோம். ஆனால் முந்தைய காலங்களில் வீடுகளில் பிரசவம் நடைபெறுவது வழக்கம். குழந்தைப்பிறந்தவுடன் கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை நீக்குவதற்கும் வலி இல்லாமல் இருப்பதற்கும் கருஞ்சீரகத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.  இதனை குழந்தைப் பிறந்த நான்கு ஐந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிட்டால், கர்ப்பப்பையில் இருக்கும் கசடுகள் சுத்தமாக வெளியேறிவிடும் எனக்கூறப்படுகிறது.

தற்போது பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனை பி.சி.ஓ.டி எனப்படும் சினைப்பபை நீர்க்கட்டிகள். இதற்காக பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருந்துகள் எடுத்துக்கொள்வது மட்டுமில்லாமல், கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப்பொடியாக்கி அதில் தேக்கரண்டி தேனில் கலந்து 10 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்சனை சரியாகும் என நம்பப்படுகிறது. அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சு. இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்வது நன்மை பயக்கும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

நம் நோய் எதிர்ப்பாற்றலையும் கருஞ்சீரகம் வலுப்படுத்துவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

கருஞ்சீரகத்தில் உடலில் ஏற்படும் வலியைக்குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே மழைக்காலம் மற்றும் பனிக்காலங்களில் உடல் சோர்வாகும் போது உடலுக்குத் தேவையான வெப்பத்தைக்கொடுத்து உடல் வெப்பத்தைச்சீராக வைக்க உதவுகிறது. சளியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.

கர்ப்பப்பை பிரச்சனைகள் முதல் நீரிழிவு வரை.. கருஞ்சீரகம், எப்போ, எப்படி பயன்படுத்தலாம்? தெரிஞ்சுகோங்க..

செரிமானப்பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக உள்ளது. மேலும் சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணியாக உள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது. சீறுநீரக கற்களும், பித்தப்பைக்கற்களும் கருஞ்சீரகப்பொடியை சாப்பிடுவதால் குணமாகிறது.

உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதற்கு கருஞ்சீரகம் உதவுகிறது. உடல் எடைக்குறைக்க விரும்புவோர் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்துப்பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்த கருஞ்சீரகப்பொடியை வெதுவெதுப்பான நீரில் எடுத்து இரவில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்து நீங்கும். இதோடு உடலில் ரத்தம் சுத்தகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget