Buransh flower: மருத்துவ குணங்கள் நிறைந்த புரான்ஷ் மலர் ஜூஸ்; பிரபல நடிகை பாக்யஸ்ரீ பகிர்ந்த டிப்ஸ்! இதைப் படிங்க!
Health Tips: புரான்ஷ் மலர்களின் மருத்துவ குணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பிரபல மராத்திய நடிகை பாக்யஸ்ரீ மோட்டொ உடல் ஆரோக்கியம்,ஃபிட்னஸ், சரும பாராமரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி டிப்ஸ்கள் அளிப்பதை வழக்கமாக கொண்டவர்.
பாக்யஸ்ரீ
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பாக்யஸ்ரீ மோட்டே 2011 ஆம் ஆண்டு வெளியான Shodhu Kuthe படத்தின் மூலம் மராத்தி சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து Mumbai Mirror, Kaay Re Rascalaa, Patil படத்தில் நடித்த அவருக்கு தெலுங்கில் 2019 ஆம் அண்டு வெளியான சிகாட்டி காடிலோ சித்தகொடுடு படம் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து இந்தி,மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
54-வயதாகும் பாக்யஸ்ரீ சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். லைஃப் ஸ்டைல், மனநலன், உத்வேகமளிக்கும் கதைகள் உள்ளிட்டவைகள் குறித்து பகிர்வார். அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புரான்ஷ் மலர் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இது உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் விளையும் மலர் என்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார். இந்த மலர் ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் பகுதிகளிலும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவர் பகிந்துள்ள மலரின் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
புரான்ஷ் மலர் ( buransh flower)
இந்த மலர் ஆங்கிலத்தில் Buransh என்றழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் ‘Rhododendron Arboreum' ஆகும்.
புரான்ஷ் மலரில் ஆன்டி- இன்ஃப்ளமேட்ரி, ஆன்டி - ஆக்ஸிடண்ட் பண்புகள் அதிகம் இருக்கிறது. இது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும். இந்த மலரில் quercetin, flavonoids, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த மலரில் உள்ள மருத்துவ குணங்கள் சரும பராமரிப்பு மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்படி பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய புரான்ஷ் மலரில் ஜூஸ் எப்படி செய்வது என்பது குறித்து பாக்யஸ்ரீ தனது வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
புரான்ஷ் மலர் ஜூஸ் செய்வது எப்படி?
- புரான்ஷ் மலர்களை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
- தேவையான அளவு புரான்ஷ் மலர்களை எடுத்துக்கொள்ளவும்.
- தண்ணீரில் புரான்ஷ் மலர்களைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்,.20 நிமிடங்கள் கொதித்து தண்ணீர் குறைந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
- இந்த நீரை வடிக்கட்டி அருந்தலாம்.
- இதோடு சர்க்கரை சேர்க்காலம் சாப்பிடுவது நல்லது.
- கடைகளிலும் புரான்ஷ் மலர் ஜூஸ் கிடைக்கிறது. அதுவும் சர்க்கரை சேர்க்காமல் கிடைக்கிறது.
நீரிழிவு, அதிக கொழுப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க புரான்ஷ் மலர் உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இரத்ததில் சர்க்கரை அளைவை கட்டுக்குள் வைக்க புரான்ஷ் மலர்களில் உள்ள மருத்துவ குணங்கள் பெரிதும் உதவுகின்றன.இந்த மலரின் இலைகள் தலைவலி, வயறு வலி ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை பெற்றவை. இது வயதாகும் தோற்றத்தை குறைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் நலனுக்கு ஆரோக்கியம் அளிப்பது என்றாலும் எதுவும் அளவோடு இருப்பதே நல்லது. ஒவ்வொருவரின் உடலுக்கும் வெவ்வேறான மருத்துவ முறைகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் அல்லது எதாவது பிரச்சனைக்கு இயற்கை மருத்துவம் எடுத்துகொள்கிறீர்கள் என்றால், முறையாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.