Health Tips: உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வது சரியா? ஆயுர்வேதம் சொல்வது என்ன?
Health Tips: ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது.
ஆரோக்கியமான வாழ்கை முறைக்கு நடைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என மருத்துவ உலகம் பரிந்துரைக்கிறது. ஆரோக்கியமான தேகம், உடல் எடை குறைப்பு, மனதை புத்துணர்ச்சியாக வைப்பது - இப்படி பல காரணங்களுக்காக நடைப்பயிற்சி பலரின் அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிட்டது. ஆனால், நடைப்பயிற்சி எப்போது மேற்கொள்வது? சாப்பிடவுடன் நடப்பது நல்லா? போன்ற கேள்விகள் நம்மிடம் உண்டு. இதற்கு ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் என்னவென்று காணலாம்.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், “நடைபயிற்சி என்பதும் ஒருவகையில் உடற்பயிற்சிதான்! இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பலர் அதை சலிப்பாகக் கருதுவதால் மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்கு என சில பாசிட்டிவ்கள் உள்ளன. உதாரணத்துக்கு நீங்கள் அதை நாளின் எந்த நேரத்திலும் செய்யலாம். உங்கள் பணி அழைப்புகளின் போது நீங்கள் நடக்கலாம்; நீங்கள் காரை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக மாலுக்கு நடந்து செல்லலாம் அல்லது லிஃப்ட்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளில் ஏறலாம்... நடைபயிற்சிக்கு சிறப்புப் பயிற்சியோ மருத்துவச் சோதனையோ தேவையில்லை. காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு." என்கிறார்.
உணவு சாப்பிட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாமா?
உணவு சாப்பிட்ட பிறகு, நடைப்பயிற்சி செய்வது சரியா என்ற கேள்விக்கு ஆயுர்வேதம் சொல்லும் பதில் - சாப்பிட்டதும் வேக வேகமாக நடப்பது உடல் நலத்திற்கு கேடு விளைக்கும். ஆனால், மிதமான வேகத்தில் 100 ஸ்டெப்கள் நடப்பது உணவுச் செரிமானம், இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதற்கு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது.
உணவு எடுத்துக்கொண்டதற்கு பிறகு, 15 நிமிடங்கள் லைட் வாக்கிங் நல்லது. ’International Journal of General Medicine' என்ற ஆய்வின் முடிவில் இரவு, மதிய உணவிற்கு பிறகு, உடல் தொந்தரவு ஏதும் இல்லாதவர்கள் நடைப்பயிற்சி மேற்கொளவது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறதாக தெரிவிக்கிறது.
ஆயுர்வேத மருத்ததுவதின்படி, நடைப்பயிற்சி என்பது உடல் எடையை குறைப்பதற்கு அல்லது கட்டுக்குள் வைப்பதற்கு அல்ல. மாறாக, உடலின் இயக்கும் சீராக இருக்க உதவுவதுதான் நடைப்பயிற்சி. சாப்பிட்ட பின், 100 ஸ்டெப்ஸ் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறது.
’உணவே மருந்து’ என்பதுதான் ஆயுர்வேதம் சொல்வது. நாம் எதை உட்கொள்கிறோமோ அதற்கு ஏற்றவாறே உடலின் ஆரோக்கியம் அமையும். டயட்டில் என்ன சேர்க்கிறோம்? எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம்? உள்ளிட்டவைகள் மிகவும் முக்கியம்.
என்னென்ன பயன்கள்:
செரிமான திறன் மேம்படும். சீரான செரிமானம் நடைபெறும்.
மெட்டபாலிசம் சிறப்பாக இருக்கும்.
செல்லப்பிராணிகளை அழைத்துச்செல்லுங்கள் :
பலரும் வாக்கிங் செல்லும் பொழுது நாய்க்குட்டிகளை அழைத்து செல்வதை பார்த்திருப்போம். அது சிலருக்கு பாதுகாப்பாகவும் , கம்பெனியாகவும் இருக்கலாம் . ஆனால் உண்மையில் நாய்க்குட்டிகளை வாக்கிங் செல்லும்பொழுது அழைத்துச்சென்றால் கூடுதல் சவாலானதாக இருக்கும். உங்கள் நாய் உங்களை இங்கும் அங்கும் ஓடுவதால் , உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து, உங்கள் மனநிலையை மேம்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். தூங்கி எழுந்ததும் முதலில் உடற்பயிற்சி செய்வது அந்த நாளை ஆரோக்கியமாக வைக்க உதவும். இது ஒரு நாளை புத்துணர்வுடனும், சுறுசுறுப்பாகவும் வைக்கும்.
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் உங்கள் வீட்டில் செய்யக்கூடிய சில மாதிரிப் பயிற்சிகள் பட்டியலிடப்படுகின்றனர். மேலும் நீண்ட மன அழுத்தமான நாளின் முடிவில் பயிற்சி செய்வது உங்களை நன்றாக உணர வைக்கும்.
1. ஸ்குவாட்ஸ்
2. குளுட் பிரிட்ஜஸ்
3. வால் புஷ்-அப்ஸ்
4. ஸ்டைர் க்ளைம்பிங்
5. டெட் பக்ஸ்