Relationship : உங்க துணைக்கு உங்க மேல கவனம் குறைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறீங்களா? இதை கவனிங்க..
காதல் வந்த புதுசுலயோ, கல்யாணம் ஆன புதுசுலயோ உங்க துணை உங்கக்கிட்ட ரொம்ப டைம் ஸ்பெண்ட் பண்ணியிருப்பாங்க. ஆனா போகப்போக நேரமும், கவனமும் குறையுதுன்னு தோணுதா?
காதல் வந்த புதுசுலயோ, கல்யாணம் ஆன புதுசுலயோ உங்க துணை உங்கக்கிட்ட ரொம்ப டைம் ஸ்பெண்ட் பண்ணியிருப்பாங்க. காய்கறி நறுக்குறது, சமையல் செய்யுறது, ஒன்னா நடக்குறது, வேலைகள் செய்யுறதுன்னு எல்லாத்தையும் ஒன்னாவே செஞ்சு, நேரம் செலவழிப்பாங்க.
ஆனா போகப்போக உங்க துணையோட நேரமும், உங்க மேலான கவனமும் குறையுதுன்னு தோணுதா?
View this post on Instagram
உறவுச்சிக்கல்களை விளக்கும் நிபுணரான மரியா இதைப் பத்தி தொடர்ச்சியா தன்னோட இன்ஸ்டாகிராம்ல விழிப்புணர்வு ஏற்படுத்திட்டு வர்றாங்க. அதுல சில பாய்ண்ட்ஸ் இதோ..
1. காதலோ, கல்யாணமோ நடந்த புதுசுல ஒருத்தரைப் பத்தி தெரிஞ்சுக்க ரொம்பவே ஆர்வம் காட்டுவாங்க. ஆனா அது படிப்படியா குறையும். அப்படி இல்லாம, எப்பவுமே இன்னொருத்தரை பத்தி அக்கறையா அவங்களோட தினசரி விருப்பங்கள், தேவைகளை கேட்டு தெரிஞ்சுகோங்க
2. முதலில் பகிரப்படும் பாராட்டும் மெசேஜ்கள், அன்பான வார்த்தைகள் உங்க உறவின் கடைசி நாள் வரைக்கும் இருக்கணும். வாழ்க்கை முழுக்க உங்க துணையோட கடலை போடுங்க. அதுதான் அன்பு மந்திரம்
3. அணைப்புகளும், முத்தங்களும், அன்பான அரவணைப்பும்தான் உங்க இணைக்கு நீங்க தரும் உறுதி. நான் உனக்காக இருக்கேன்னு நீங்க சொல்றதா இந்த மாதிரி அணைப்புகள் மூலமும் காட்டலாம்.
4. உங்களுக்கான ஸ்பெஷலான நாட்களை மறக்காம அதை ஸ்பெஷலா கொண்டாடுங்க. செலவு செய்யணும்னு அவசியமில்ல. அவங்களுக்காக நீங்க செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்க காதலை ரொம்ப உயிர்ப்போட வெச்சிருக்கும்.