பெண்கள் எடுத்து கொள்ள வேண்டிய 5 முக்கிய உணவுகள்
அலுவலக வேலை, வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என தொடர்ந்து வேலை இருந்து கொண்டு இருக்கும். ஆனால் அவர்கள் போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவு எடுத்து கொள்கிறார்களா என்பது கேள்விகுறி தான்.
பெண்கள் வேலை பளு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அலுவலக வேலை, வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு என தொடர்ந்து வேலை இருந்து கொண்டு இருக்கும். ஆனால் அவர்கள் போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவு எடுத்து கொள்கிறார்களா என்பது கேள்விகுறி தான். பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை உணவில் இருந்து எடுத்து கொள்ளலாம். 5 முக்கிய சூப்பர் உணவுகள் மூலம் தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்து கொள்ளலாம்.
முட்டை - தினம் ஒரு முட்டை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது போதுமான ஆற்றலை வழங்குவதோடு, உடல் எடை குறைக்கவும், எலும்புகளுக்கு போதுமான ஊட்டச்சத்து அளிக்கவும் உதவும். இதில் புரத சத்து நிறைந்து இருக்கிறது. அதனால் முடி வளர்வதற்கு உதவியாக இருக்கும்.
ஆளி விதை - தினம் ஒரு ஸ்பூன் ஆளி விதை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் சத்துகளும், ஒமேகா அமினோ அமிலங்களும் நிறைந்து இருக்கிறது. இது பெண்கள் ஹார்மோன் முறையாக வேலை செய்ய உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஆழி விதை உதவும்.
பால் - தினம் ஒரு கிளாஸ் சூடான பால் குடிப்பது உடலுக்கு போதுமான கால்சியம் சத்தை அளிக்கிறது. பால் புத்துணர்வுடனும், தொடர்ந்து வேலை செய்வதற்கு உதவியாக இருக்கும். இதில் புரதம், கால்சியம், வைட்டமின் டி சத்துகள் நிறைந்து இருக்கிறது. தினம் ஒரு கிளாஸ் பால், நாட்டுச்சர்க்கரை, அல்லது மஞ்சள் கலந்து எடுத்து கொள்ளலாம்.
ஆப்பிள் - தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்ள வேண்டும். இதில் ஒரு நாளைக்கு தேவையான 14% வைட்டமின் சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இதில் நார்சத்து, வைட்டமின் சத்து, நிறைந்து இருக்கிறது. இது நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுகிறது. க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பலமடைய
செய்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தினம் ஒரு ஆப்பிளை எடுத்து கொள்வதால், பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
பேரீட்சை பழம் - தினம் உணவில் பேரீச்சம் பழம் எடுத்து கொள்ளுங்கள். இதில் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. பெண்களில் பெரும்பாலோனோர் இரும்பு சத்து குறைபாட்டால் வரும் இரத்த சோகை நோயினால் பாதிக்க படுகின்றனர். இதை சரி செய்ய தினம் பேரீச்சம் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.